ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

September 25, 2013

நம் உமிழ்நீரைப் பற்றிய உண்மைகள்

1. நாம் சுவாசிக்கும் உணர்வுகள்தான் உமிழ்நீராக மாறுகின்றது
நமது வாழ்க்கையில், வெறுப்போ, வேதனையோ, கோபமோ, குரோதமோ போன்ற உணர்வுகளை நாம் நுகர்ந்து அறிந்து கொண்டாலும், அந்த உணர்வுகள் நமக்குள் வளர்ந்திடாது தடுத்துப் பழகுதல் வேண்டும். ஏன்? 

நாம் பார்த்த உணர்வுகள் எதுவோ, இப்பொழுது ஒருவர் நோயோடு வேதனைப்படுகின்றார், நம் உயிரிலே படுகின்றது,
இந்த உணர்ச்சிகள் உடல் முழுவதும் பரவுகின்றது;
உமிழ்நீராக மாறுகின்றது,
உமிழ்நீர் நம் ஆகாரத்துடன் கலக்கின்றது. ஆகாரத்தில் கலந்தவுடன்,
அந்த ஆகாரத்தைச் சரியாக ஜீரணிக்க முடியாத நிலைகளில்,
சிறு குடலையும் பெருங்குடலையும் உருவாக்கிய அணுக்கள்
பலவீனம் அடைகின்றது. பலவீனம் அடைந்தபின்,
நாம் சாப்பிட்ட உணவு விஷத்தன்மையாக மாறி,
விஷமான அணுக்களை உருவாக்கும் இரத்தமாக மாறிவிடுகின்றது.
2. நாம் எதை நம் உமிழ்நீராக உருவாக்க வேண்டும்?
ஆகவே இதைப்போன்ற நிலைகள், அவ்வப்போது நாம் தடைப்படுத்த அந்த துருவ நட்சத்திரத்தின் பெரருளும் பேரொளியும் நாங்கள் பெறவேண்டும்என்று ஏங்கி, அதன் உணர்வின் தன்மை நாம் எடுத்துச் செலுத்தப்படும் பொழுது இது உமிழ்நீராக மாறி நம் ஆகாரத்துடன் கலந்துவிடுகின்றது.

அப்படிக் கலக்கப்படும்பொழுது, ஆக இந்த விஷத்தின் தன்மையைக் குறைத்து அருள் உணர்வைக் கூட்டி, நமக்குள் சிறு குடலையும் பெருங்குடலையும் உருவாக்கிய அணுக்கள் பலவீனம் அடையாதபடி தடுத்துக் கொள்ள முடியும்.

ஆகவே, நல்ல உணர்வுகள் உமிழ்நீராக மாறி, நம் இரத்தத்தில் ஞானியின் உணர்வை நமக்குள் சேர்த்து, சமப்படுத்தும் உணர்வுகள்,
நம் உடலில் உள்ள அணுக்கள் அனைத்தும்  ஏற்றுக்கொள்ளும்
நல்ல உணர்ச்சியைத் தூண்டும் அணுக்களாக
நாம் மாற்றிக் கொள்ளமுடியும்.
அந்த அகஸ்தியன் துருவனாகி, துருவ நட்சத்திரமாகி இத்தனையும், விஷத்தை நீக்கி, உணர்வை ஒளியாக மாற்றிய அதனின்று வரும் உணர்வுகளை நாம் நுகர்ந்து, நமது இரத்தங்களில் கலக்கச் செய்யும் பொழுது நம் உடலில் உள்ள அணுக்கள் அனைத்தையும் அந்த துருவ நட்சத்திரத்தின் உணர்வைப் பெறச் செய்யும்பொழுது அது வீரியமடைகின்றது, தீமைகள் வராது தடுக்கின்றோம்.

இந்த தியானத்தின் அருளை, நீங்கள் ஒவ்வொரு நொடியிலும் பெறமுடியும். உங்கள் வாழ்க்கையில் இதுவே தியானமாக்கி, எத்தகைய கொடிய நிலைகளை நுகர்ந்து அறிய நேர்ந்தாலும்,
அந்தக் கொடிய உணர்வுகள்
உங்களிலே வளராது தடுக்க முடியும்.

துருவ நட்சத்திரத்தின் பெரருளும் பேரொளியும் பெற்று, அதன் உணர்வை வலுவாக்க இதை தியானித்து, உங்கள் உடலில் உள்ள அணுக்களை, ஒளியான அணுக்களாக மாற்றி அமைக்க முடியும், இது மனிதன் ஒருவனால் தான் செய்ய முடியும்.