ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

September 18, 2013

விநாயகருக்கு அரசும் வேம்பும் வைத்ததின் உள் பொருள் என்ன?

அரச மரம் என்ன செய்கின்றது? காற்றிலே இருக்கக்கூடிய நீரை எடுத்து, தன் உணர்வின் ஆற்றலால் “பாழடைந்த கட்டிடத்திலும் அது விளைந்து” கட்டிடத்தையே தகர்த்துவிடுகின்றது.

ஆனால், அந்த அரச மரம் ஓங்கி வளர்கின்றது. இதைப் போல உணர்வினை ஒளியாக மாற்றி, துருவம் சென்றடைந்து விண் உலகம் சென்றவர் துருவ மகரிஷி.

அவர் இன்றும் விண்ணிலிருந்து வரும் ஆற்றல் மிக்க நஞ்சினை ஒடுக்கி, அந்த உணர்வினை அடக்கி, உணர்வினை ஒளியாக மாற்றி, இன்று எல்லாவற்றிற்கும் அரசாக ஓங்கி வளர்ந்துள்ளார்.

விண்ணிலிருந்து வரும் உணர்வின் சத்தை
உணவாக உட்கொண்டு,
அதனின் நஞ்சினை உள் அடக்கி,
அதையே ஒளி சரீரமாக மாற்றிக் கொண்டிருக்கிறார் துருவ மகரிஷி.
இதை உணர்த்துவதும் அவரே.

நமக்குள் தீய வினைகள் வராது நிறுத்த வேண்டும் என்ற நிலைக்காகத்தான், அன்றைய ஞானிகள் தான் கண்டுணர்ந்த நிலைகள் கொண்டு, விநாயரை மேற்கே பார்க்க வைத்து, நம்மை கிழக்கிலிருந்து வணங்கும்படிச் செய்தார்கள்.

விநாயகர் தத்துவத்தில், எடுத்துக் கொண்டால் அரசும் வேம்பும் வைத்திருப்பார்கள். ஏனென்றால், நமது வாழ்க்கையில் பிறர் படும் கஷ்டங்களை நாம் கேட்டறிந்தால், அந்தக் கசப்பான உணர்வுகள் நமக்குள் வளர்ந்து விடுகின்றது.

அப்படி வளர்ந்த கசப்பான நிலைகளிலிருந்து நாம் மீளவேண்டும் என்ற உணர்வினை ஊட்டுவதற்குத்தான், அரச மரத்தை வைத்துள்ளார்கள்.

அந்த சூட்சம நிலைகளில் விண் சென்ற அருள் ஞானியை துருவ மகரிஷியை நினைவு கூர்ந்து,
நமக்குள் ஊழ்வினையாகப் பதிவு செய்யவும்,
நம் நினவாற்றலை சக்திவாய்நதாக மாற்றவும்,
அந்த அருள் உணர்வுகளை நமக்குள் எண்ணும் பொழுது பிரணவம்,
அதை ஜீவன் பெறச் செய்யவும்,
மெய் உணர்வுகளை நமக்குள் வினைக்கு நாயகனாக ஆக்கிடவும், இதை மெய்ஞானிகள் செய்தார்கள்.