ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

September 25, 2013

இரத்தக் கொதிப்பு ஏன் வருகின்றது?

1. இரத்தக் கொதிப்பு ஏன் வருகின்றது?
இப்பொழுது நம் வாழ்க்கையில் நன்மை செய்யப் பிறருடைய கஷ்டங்களைக் கேட்டறிகின்றோம். அந்தக் கஷ்டமான உணர்வு பதிவாகிவிட்டால், நம் உடலில் அதை நுகர்ந்து உயிர் வழி அறிகின்றோம்.

அந்தக் கஷ்டமான உணர்வோ, வேதனையான உணர்வோ, இவையனைத்தும் நம் இரத்த நாளங்களில் கலந்து விடுகின்றது.

இரத்தங்களில் கலக்கப்படும் பொழுது, அந்த இரத்தம் உடல் முழுவதும் பரவப்படும் பொழுது, நமது உடலில் உள்ள அணுக்கள் அனைத்தும் சோர்வடைந்துவிடுகின்றது.

ஒருவருக்கொருவர் கோபத்துடன் சண்டையிடுகின்றனர் என்று வைத்துக் கொள்வோம்.
அதை நாம் வேடிக்கை பார்த்தாலும்,
அந்தக் கோபமான உணர்வுகளை நுகரப்படும் பொழுது,
அந்தக் காரமான உணர்ச்சிகள்
நமது இரத்த நாளங்களில் கலக்கப்படும் பொழுது,
அதையே திரும்பத் திரும்ப எண்ணினால்
இரத்தக் கொதிப்பு வந்துவிடுகின்றது.
இந்த இரத்தக் கொதிப்பு ஆவதற்கு காரணமே, நாம் நுகர்ந்த உணர்வுகள், அந்தக் காரமான உணர்வுகளை உணவாக உட்கொள்ளும் அணுவாக உருவாகிவிடுகின்றது.

ஒரு அணு உருவாகி விட்டால், அது மீண்டும் தன் உடலிலே பல அணுக்களை உருவாக்கி, நமக்குள் இரத்தக் கொதிப்பின் தன்மையைக் கொண்டு வந்துவிடுகின்றது.
2. தீமையான அணுவாக உருவாவதற்கு முன், துருவ நட்சத்திர உணர்வை முந்திச் செலுத்த வேண்டும்
இப்படி ஆகாதபடி, ஒருவர் கோபப்பட்ட உணர்வை நாம் நுகர்ந்தாலும், அடுத்த நிமிடம் அந்த துருவ நட்சத்திரத்தின் பெரருளும் பேரொளியும் பெற வேண்டும் என்றும், ங்கள் இரத்த நாளங்களிலே கலக்க வேண்டும் என்று ஏங்கித் தியானிக்க வேண்டும்.

பின், ங்கள் உடல் உறுப்புகளை உருவாக்கிய அணுக்கள் அனைத்தும் துருவ நட்சத்திரத்தின் பெரருளும் பேரொளியும் பெறவேண்டும் ஈஸ்வரா, என்று நினைவினை உடலுக்குள் செலுத்த வேண்டும். அப்படிச் செலுத்தினால், நாம் நுகர்ந்த உணர்வுகள் உமிழ்நீராக மாறி, நம் ஆகாரத்துடன் கலந்து நல்ல இரத்தமாக மாறுகின்றது.

ஆகவே, இரத்தத்திற்குள் காரமான உணர்ச்சியை இயக்கும்
அணுவாக உருவாவதற்கு முன், 
இதை நாம்முந்திச் செலுத்தி” பழகிக் கொள்ளவேண்டும்.

அப்பொழுது, நம் இரத்தத்தில் உள்ள அணுக்கள் அனைத்திலும், அந்த துருவ நட்சத்திரத்தின் பெரருளும் பேரொளியும் பெறவேண்டும் என்று நாம் எண்ணும் பொழுது, அந்தக் காரமான உணர்வுகள் வந்தாலும், அதைத் தணித்துவிடுகின்றது நோய் வராமல் தடுத்துக் கொள்கின்றோம்.