1. பூமிக்குள் வைரங்கள் எப்படி விளைகின்றது?
27 நட்சத்திரங்களின்
உணர்வுகள் பாறைகளானாலும், அவ்வாறு ஆகும் பொழுது கார்த்திகை நட்சத்திரத்தின் உணர்வு
அதிகமாகப் படுமேயானால், அந்த உணர்வின் தன்மை மற்றதை அடக்கி, மற்ற நட்சத்திரத்தின் நிறங்கள்
எதுவாக இருந்தாலும், இதிலிருந்து தனக்குள் எடுத்து, மற்ற நட்சத்திரத்துடன் இணைக்கப்படும்
பொழுது, கோமேதகம், மேதகம், வைரம், வைடூரியம் இதைப் போன்று விளைகின்றது.
கார்த்திகை நட்சத்திரம்,
ரேவதி நட்சத்திரம், மற்ற எதிர் நிலையான நட்சத்திரத்தின் நிலைகள் ஆகும் பொழுது, மூன்றும்
மும்முனையாக அந்த உணர்வின் ஆற்றல் கொண்டு மூன்று அணுக்களாக மும்மண்டலமாக (வெப்பம்,
காந்தம், விஷம் போன்று) இயங்குகின்றது.
இதே உணர்வின்
தன்மை கொண்டு இன்று வெறும் கற்பாறைகளானாலும், அந்தப் பாறைக்குள் இது இயக்கும் நிலைகள்
கொண்டு, இந்த உணர்வின் ஈர்ப்புக்குள் வரும் பொழுது, தனக்குள் ஈர்க்கும் இந்தக் கருவின்
உருவுக்குள் அது தனக்குள் எடுத்து மங்கி மறைவதும், அது கருவாகும் நிலைகள் உருவாவதும்,
இதற்குள் வடித்துக் கொண்டு ஒவ்வொரு வைரக்கல்லாக விளைவதும், இதன் வீரிய தன்மையான பின்,
அதை வெடித்துவிட்டு, முழுமை நிறைந்தபின், இறப்பின் தன்மையாக வெளிவருகின்றது.
தன் உணர்வின்
ஆற்றல் ஒளியின் சிகரமாகி, அந்த உணர்வுகளுக்கொப்ப இன்று வைரங்களாகப் பார்க்கின்றோம்.
நட்சத்திரங்களின் இந்த விஷத்தன்மையான உணர்வுகள் அதற்குள் இரண்டறக் கலந்து, அது
எவ்வாறு ஆனது என்ற நிலையை நமது குருநாதர் காண்பித்தார்.
அதாவது நட்சத்திரங்களின்
மோதலில் விண்வெளியில் பரவும் நிலைகள் பூமிக்குள் வரும் பொழுது, பாறைகளுக்குள்ளும்,
மண்ணுக்குள்ளும் மறைந்தாலும், அதன் உணர்வின் ஈர்ப்பால் மண்கள் மாற்றமாகின்றது.
மாற்றமாகி, அதற்குண்டான
நிலைகள் ஈர்ப்பதும் ஈர்த்த நிலைகள் கல்லாக ஆவதும், அதற்குள் எதிர்ப்பின் உணர்வுகள்
இதனின் தன்மை இனத்தை வளர்த்து, அது வைரமாகி, அது எப்படி வெடிக்கின்றது என்ற நிலையையும்,
அது சிறிது காலம் அந்த உணர்வின் வளர்ச்சி ஈர்க்குமுன் அந்த உணர்வின் காந்தப் புலன்
ஆற்றல் எவ்வாறு என்ற நிலையை குருநாதர் நேரிடையாகக் காட்டினார்.
வித்திலிருந்து செடியா? செடியிலிருந்து
வித்தா? வைரம் எதிலிருந்து
விளைகின்றது? வைரத்தின் ஆற்றல் எது என்ற நிலைகளில் கண்டுணர்வதற்குத்தான் ஒவ்வொரு பகுதிகளுக்கும்
குருநாதர் அழைத்துச் சென்றார்.
அந்தந்தப் பகுதியில்
சேர்த்துக் கொண்ட உணர்வுகள் அந்தத் தாவர இனச் சத்துகள் வரும் பொழுது பாறைக்குள்ளுள்
பல பல சத்தின் தன்மையை எடுத்து, தனக்குள் சத்து அதிகமாகும் பொழுது வெப்பத்தின் தன்மை
வரப்படும் பொழுது, கல் நார் என்ற நிலைகள் குவிந்து வெளிவருகின்றது. அதை எடுத்து மருந்தாகப்
பயன்படுத்தும் வைத்தியர்களும் உண்டு.
2. கல்லுக்குள் தேரை எப்படி உருவாகின்றது?
இதைப் போல தாவர
இனச் சத்துக்கள் பாறை மீது பட்டபின், அந்தச் சத்தின் உணர்வுகள் பாறைக்குள் கவரப்பட்டு,
அதற்குள் எதிர்நிலையாக ஈர்த்து, தனக்குள் காந்தமாக உள் செலுத்தும் நிலையில், இது விளையா
பருவம் கொண்ட நிலையாகின்றது.
உள்ளே காந்தப்
புலனின் மணல் பருவம் அதிகமாக இருந்தால், இதனின் ஊற்றுக்குச் சென்று இங்கே தேங்கி நிற்கும்
நிலையும், ஆனால் அதற்கு முன் இது வான்வீதியிலிருந்து வந்த உயிர் அணு ஒரு
மண்ணுக்குள் புதைந்து, மண் புழுவாகின்றது.
தாவர இனச் சத்துக்கள்
பாறைக்குள் சென்று பாறையாக விளைந்தாலும், அங்கே மரங்கள் முளைத்து,
அந்தச் சத்து
பாறைக்குள் சென்றபின்,
புவியின் ஈர்ப்புக்குள்
நீரின் தன்மை அடிப்பாகம் செல்லும் பொழுது,
அந்தத் தாவர
இனச் சத்துகள்
ஒரு உயிரணுவிற்குள்
பட்டபின் அதனை நுகர்ந்தறிந்து,
சில வகைகள் பூவாகவும்,
சில வகைகள் தேரையாகவும் வருகின்றது.
முதலில் பூவாக
எப்படி உருவாகின்றது. இந்த உயிரணுவின் தன்மை எப்படி உருவாகின்றது? “கல்லுக்குள்
தேரை, கருப்பை உயிருக்கும்” என்று கூட பாடல் வந்திருக்கும்.
ஆக, அந்தக் கல்லுக்குள்
தேரைக்கு
எப்படி ஜீவன்
கொடுக்கின்றது?
கடவுள் யார்?
ஒரு உணர்வின்
துடிப்புக்குள் எடுத்துக் கொண்ட உணர்வின் இயக்கம் ஈசன் என்றும், அந்த ஈர்ப்புக்குள்
காந்தப் புலனின் தன்மை கொண்டு, வெப்பத்தின் தன்மையால் கல்லுக்குள் துடிப்பின் தன்மை
இருந்தாலும், தாவர இனத்தின் தன்மைகள் இந்தப் பாறைக்குள் சென்று, அதனின் நிலைகள் ஊடுருவுகின்றது.
அப்படி ஊடுருவும் பொழுது,
தாவர இனச் சத்து உயிர் அணுவிற்குள் மோதி,
அது உணவாக ஆகி
உடலாக உருப்பெறுகின்றது.
அந்த உடலிலிருந்து
வரும் மூச்சின் அலைகள், எந்தக் கல்லுக்குள் புகுந்து உணர்வின் சத்து மலமாக வருகின்றதோ,
இதனின் மலம் அங்கே பட்டு அந்தக் கல்லே கரைகின்றது.
அது கரைந்து
கல்லின் நிலைகள் ஆவியாகும் பொழுது,
அதனின் உணர்வைச்
சுவாசித்து,
இந்த உணர்வின்
சத்தைத் தனது உடலாக்கிக் கொண்டு
அதற்குள் வரும்
நீரினை மலமாக்கி,
நீரின் தன்மை
இப்படி விளைந்து வந்து,
இந்தக் கல்லே
கரைந்து
தேரையாக விளைகின்றது.
இதுவெல்லாம் இயற்கையின் சில நியதிகள். மெய்ஞானிகள் கண்ட பேருண்மைகள். இதை நாமும் தெரிந்து கொள்ள வேண்டும்.