ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

April 9, 2025

நாம் தேட வேண்டிய அகச் செல்வமான அருள் செல்வம்

நாம் தேட வேண்டிய அகச் செல்வமான அருள் செல்வம்


நாம் நமது வாழ்க்கையில் இந்த உடல் பற்றுடன் தான் வாழ்கின்றோம். எத்தனையோ ஆண்டு வாழ்கிறோம் என்று இந்த உடலுக்காகச் சேமித்து வைக்கும் சொத்தையும் நமது குடும்பத்தைப் பாதுகாக்கும் உணர்வே தான் வருகின்றது.
1.பாதுகாக்கும் உணர்வுகள் சிறிது தவறினால் வேதனை என்ற உணர்வுகளே வருகின்றது.
2.வேதனை என்ற உணர்வு வளர்ந்தால் தேடிய செல்வத்தைப் பாதுகாக்கும் சக்தியும் இழக்கப்படுகிறது.
3.பாதுக்க்கும் தன்மை இழந்து விட்டால் நம் உடலில் நோய் உருவாகின்றது.
4.நோய் உருவானால் இதுவே நாம் தேடிய செல்வமாக மாறிவிடுகின்றது.
5.நோயின் உணர்வுகள் விளைந்தால் அந்தச் செல்வத்தின் வழியே உயிர் அடுத்த உடலுக்குள் அழைத்துச் சென்று அந்த உடலை உருவாக்கி விடுகின்றது.
 
ஆகவே தேடிய செல்வங்கள் நமக்குச் சொந்தமில்லை. இந்த உடலும் நமக்குச் சொந்தமில்லை. வேதனை வெறுப்பு என்ற உணர்வைச் சொந்தமாக்கினால் அதன் உணர்வு கொண்டு அடுத்த உடலை உயிர் உருவாக்கி விடும். கோபம் குரோதம் என்ற நிலையானால் அதன் வழி அடுத்த உடலை உருவாக்கி விடுகிறது.
 
ஒரு நிலம் சரி இல்லை என்றால் அதைப்ண்படுத்துகின்றோம். ஒரு வீடு கட்டினால் அது சரியில்லை என்றால் அதைக் காட்டிலும் செல்வத்திற்குத் தக்க வீடுகளைக் கட்டுகின்றோம்.
 
இதைப் போல தான் நாம் நுகர்ந்த உணர்வுக்கொப்ப அடுத்த உடலை உருவாக்கி விடுகின்றது உயிர். ஆனால் அதைப் போன்ற உடலின் தன்மை வரும் பொழுது அதிலே நரக வேதனையைத் தான் படுகின்றது.
 
1.அத்தகைய வேதனைகளை உருவாக்குவதற்கு மாறாக
2.உயிர் என்ற உணர்வின் தன்மை கொண்டு என்றைக்கும் நிலையான சரீரமாக வாழும் நிலையை
3.பேரருள் பெற்ற உணர்வினைச் செல்வமாக்கி பேரருள் என்ற உணர்வினை ஒளியாக்கிப் பிறவியில்லா நிலை அடைவதே கடைசி நிலை.
 
அதைத் தான் இராமேஸ்வரத்தில் ராமன் நேரமாகிவிட்டது என்று உணர்வின் தன்மை கூட்டி பூஜிக்கத் தொடங்கினான் என்று காட்டியுள்ளார்கள்.
 
இதைப் போலத் தான்
1.அனைவரும் உயர்ந்த நிலைகள் பெற வேண்டும் என்றும்கைமையற்ற வாழ்க்கை வாழ வேண்டும் என்றும் உணர்வினை ஒன்று சேர்த்துக் கூட்டி
2.அந்த உணர்வுகள் எல்லாம் ஒளியாகி ஒன்றாகி ஒளியாக்கப்படும் பொழுது இதே உணர்வுகளைப் பெருக்கி நீங்கள்ண்ணும் பொழுது
3.அந்த உணர்வுகள் உங்களுக்குள் ஒளியாக மாறி அருள் ஒளி என்ற நிலைகள் பெறும் தன்மை வரும்.
 
ஆகவே அதைப் பெறுவதற்குத் தான் குருநாதர் காட்டிய அருள் வழியில் இதை உணர்த்துகின்றேன்.
 
இந்த உடலின் நிலைகள் நாளடைவில் கரையும் தன்மை தான் வளரும். அதாவது வளரும் தன்மையில் உடல் கரையும்… ஆனால் உணர்வுகள் வளரும்.
 
1.எதன் உணர்வை வளர்க்கின்றோமோ… ஆக அருள் ஒளியை வளர்த்தால் அது என்றும் வளர்ந்து கொண்டே இருக்கும்
2.அந்த அருள் ஒளியை நாம் பெறுவதற்கே நாம் முயற்சிப்போம்.
 
செல்வமும் இந்த உடலும் நம்முடன் வருவதில்லை. அழியாச் செல்வமான அருள் உணர்வை நமக்குள் வளர்த்து அது வளரும் பருவத்தினை ஏற்படுத்தி வளர்த்திடும் நிலையும் இருளை அகற்றி மெய்ப் பொருளைக் காணும் மெய் வழியில் நாம் செல்வோம் என்று பிரார்த்திக்கின்றேன்.