
துருவ நட்சத்திரத்தின் வலிமையை நமக்குள் கூட்டிக் கொண்டே வர வேண்டும்
ஆசையின் வாலிப பருவத்தின் உணர்வில் ஆணைக் கண்ட பின் அந்த உணர்வின் தோற்றமானால் அந்த உணர்வுக்கு நாம் அடிமையாகி
விட்டால் அதன் உணவின் வளர்ச்சியாகி நம்மை வளர்த்த தாய் தந்தைக்கு நாம் இழுக்கு தேடும் நிலையே வருகின்றது.
தாய் வேதனைப்படுகிறது
என்பதனை உணர்வதில்லை. நம் இச்சைகள் இப்படி வளரப்படும் போது
இப்பொழுது உலக மாற்றங்கள் ஏற்படும் போது இதனுடைய விளைவுகள்
எத்தனையோ ஆகிறது.
1.தாய் தந்தையை மறுத்து வெளியே சென்று தனித்து வாழும் உணர்வுகள் அனைத்தும்
2.துயர்படும் நிலைகள் தான் வாழ நேருகின்றது.
3.அது தவிர தாயையும் தந்தையையும் துயரத்தில் ஆழ்த்துகின்றோம்.
தேடிய செல்வங்கள் இருப்பினும் அதைக் கொண்டு தன்னைக் காத்திடும் நிலை இல்லாதபடி வேதனை என்ற உணர்வுகளை உருவாக்கித் தன் தந்தைக்குள் விஷத்தன்மை ஊட்டப்பட்டு
1.பாம்பாய் இருந்தேன்… என்னை அடித்து உன்னிடம்
வளர்த்து மனிதனாக்கினாய்
2.நீ பாம்பாகப் போ என்று
வேதனை உணர்வைத் தன் தாய் தந்தைக்கு ஊட்டி
3.அந்தப் பாம்பினத்தில் சேர்க்கும் தன்மை தான்
இன்றைய குழந்தைகளுக்கு உள்ளது.
இதைப் போன்ற நிலைகளில் இருந்து எல்லாம் விடுபடுதல் வேண்டும்.
மனிதனான பின் உணர்வின் தன்மை எல்லாவற்றையும் கடந்து உணர்வின் ஒளியானது நட்சத்திரம்.
தீமையை நீக்கும் ஆறாம் அறிவின் தன்மை கொண்டு அவன் தெளிந்த உணர்வு
கொண்டு துருவ நட்சத்திரம் ஆனான்.
அதிலிருந்து வரக்கூடிய உணர்வை
1.ஆறாவது அறிவின் வலிமையின்
துணை கொண்டு காலையில் அந்தத் துருவ
நட்சத்திரத்தின் உணர்வை நாம் நுகர்வோமென்றால்
2.நுகர்ந்த உணர்வுகள் வலிமைமிக்கதாக மாறி அந்த
உணர்வுகள் தெய்வ ஆணையாகி
4.தீமைகளை வெளியேற்றும் உணர்வின் வலிமையாகி
நமக்குள் தீமை புகாது உணர்வின் வலிமை பெறச் செய்யும்.
இவ்வாறு வலிமை பெற்ற உணர்வுகள் எதன் வலிமையைப் பெற்றோமோ நாம் இந்த உடலை விட்டுக் கடந்த பின் துருவ நட்சத்திரத்தின் ஈர்ப்பு வட்டத்தில்
நம்மை இணைத்து… ஆறாவது அறிவை ஏழாவது நிலையான இனி பிறவி
இல்லா நிலை நிலையும்… உடல்
மாற்றம் இல்லாது இந்த உடலிலேயே ஒளியின் உணர்வாக நாம் மாறிடும்
நிலை வருகின்றது.
எப்பொழுது துயரம் என்ற நிலைகளைச் சந்தர்ப்பத்தால் நுகர்கின்றோமோ அதை உடனே மாற்றிப் பழகுதல் வேண்டும்.
1.ஆறாவது அறிவின் துணை கொண்டு துருவ நட்சத்திரத்தின் வலிமையை
2.ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும் நமக்குள் கூட்டிக் கொண்டே வர வேண்டும்.