
தீமைகள் எது வந்தாலும் அதை மாற்றிக் கொள்ள முடியும்
தீமையிலிருந்து விடுபடுவதற்கு உபாயம் என்ன…? இந்த ஆறாவது அறிவு தீமை என்று அறிந்து
கொள்கின்றது கார்த்திகேயா.
1.தீமைகளை நீக்கி ஒளியின் உடலாக இருப்பது துருவ
நட்சத்திரம்.
2.அதை வழிநடத்தி அதனின் உண்மையின் உணர்வை அறிவதற்காக இதைச் செய்கின்றேன்.
அந்தத் துருவ நட்சத்திரத்தின்
பேரருளும் பேரொளியும் நாங்கள் பெற வேண்டும் என்று கண்களால் ஏங்கி வானை நோக்கி அதன் உணர்வு பெற வேண்டும் என்று
ஏக்கத்தால் எண்ணி அதே கண்ணின் நினைவைப் புருவ மத்தியில்
செலுத்தப்படும் பொழுது கண்ணால் பார்த்து உயிரிலே படும் பொழுது தான் உணர்வால்
அறிகின்றோம்.
ஆனால் அதே சமயத்தில் வேதனை என்ற உணர்வைக் கண்களால் நுகர்ந்தோம் உயிரின் காந்தம் நுகர்ந்து அந்த உணர்வை அறியச் செய்கின்றது கண்ணால் பார்க்கின்றோம் உயிரால் உணர்கின்றோம்.
1.அந்தத் துருவ
நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் பெற வேண்டும் என்று
2.கண்ணின் நினைவைப் புருவ
மத்தியில வைக்கப்படும் பொழுது அது வலிமையாகி விடுகின்றது.
ஏனென்றால் வேதனைப்பட்டவர்களுக்கு உதவி செய்கின்றோம் கேட்டு
அறிந்து. ஆனால் அடுத்த கணம் துருவ
நட்சத்திரத்தின் சக்தியை எடுத்துப் புருவ மத்தியில எண்ணி அதைப் பெற வேண்டும் என்று ஆறாவது அறிவின் துணை கொண்டு கட்டளையிட வேண்டும்
சேனாதிபதி.
தீமையான உணர்வை நுகர்ந்திருந்தாலும் முதலிலேயே அது சிறிதளவு
போய்விட்டது… அது புகாதபடி தடுக்க
வேண்டும்.
1.ஆறாவது அறிவின் துணை கொண்டு கண்ணின் நினைவைப்
புருவ மத்தியில் எண்ணி
2.அந்தத் துருவ நட்சத்திரத்தின் பேரருளைப் பெற வேண்டும் என்று இணைக்கும் போது உள்ளே போகாதபடி
தடைப்படுத்துகின்றது.
தடைப்படுத்துவது மட்டுமல்ல நம்
உடலுக்குள் இருக்கக்கூடிய உறுப்புகளை உருவாக்கிய அணுக்கள் அனைத்திற்கும் அந்த
துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் பெற வேண்டும் என்று கண்ணின் நினைவை
உள்ளே செலுத்துதல் வேண்டும்.
இதை ஆணையிடுகின்றது… ஆறாவது அறிவு
சேனாதிபதி கார்த்திகேயா. இந்த உணர்வு கொண்டு
உடல் உறுப்புகளை உருவாக்கிய அணுக்களுக்கு இப்படிச் செலுத்தப்படும் பொழுது அவை வீரியமடைகின்றது.
நாம் எண்ணியபடி அந்தத் தீமை வராதபடி உஷாராகின்றது.
நுகர்ந்து சிறிதளவு போன நிலையும் இந்த உணர்வுகள்
சேர்த்து
1.இது உமிழ் நீராக மாறி உள்ளே சேர்க்கப்படும்
பொழுது அந்த விஷத்தை அடக்கும் சக்தியாக
2.அந்தத் துருவ
நட்சத்திரத்தின் உணர்வுகள் தீமை நுகராது தடுத்த பின் சிறுத்து
விடுகின்றது.
துருவ நட்சத்திரத்தினுடைய சக்தி உமிழ் நீராக
மாறும் பொழுது அது சிறுக்கப்படுகின்றது. இதன் வழி கொண்டு எத்தகைய
தீமையின் உணர்வை நுகந்தாலும் நம்மால் மாற்றிக் கொள்ள முடியும்.
அந்தச் சக்தியை எடுத்து நமது குருநாதர்
காட்டிய அருள் வழியில் பதிவாக்கி நினைவாக்கி நீங்கள் தீமையிலிருந்து விடுபட
முடியும்.
தீமையில் இருந்து விடுபட முடியாதபடி… நன்மை செய்தோர் அனைவரும்
தீமையில் சிக்குண்டு… “நான் எல்லோருக்கும்
நல்லது செய்தேனே என்னை இப்படி ஆண்டவன் சோதிக்கின்றானே…!”
என்று எண்ணுகின்றார்கள்.
நாம் எண்ணியதை உணர்த்துவதும் உணர்வின்
தன்மை உடலாக்குவதும்
உடலாக்கிய பின் இதை ஆள்வதும் ஆண்டவனாக
இருக்கின்றான் நமது உயிர். எண்ணியதை
இயக்குகின்றான். ஆக யாரைப் பழி போடுவது…?
1.எங்கேயோ ஆண்டவன் இல்லை நமக்குள் எண்ணுவதைத் தான் உருவாக்குகின்றான்.
2.அந்த உணர்வு வழி தான்
நம்மை வழி நடத்துகின்றான் என்பதை நீங்கள் தெளிவாகத் தெரிந்து
கொள்ளுங்கள்.
மனிதனுடைய ஆறாவது அறிவு சேனாதிபதி. துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளியைப் பெற வேண்டும் என்று எடுத்து கண்ணின்
நினைவை இங்கே தடைப்படுத்தினால்
உடலுக்குள் இருக்கும் அனைத்து உணர்வுகளுக்கும்
1.அதைச் செலுத்தப்படும் பொழுது அணுக்கள்
அனைத்தும் ஒன்று சேர்த்து அந்தப் படைகலன்
தீமைகளை எதிர்க்கும் சக்தியாக பெறுகின்றது.
2.மனிதன் ஒருவனால் தான் இதைச் செயல்படுத்த முடியும்.
3.தீமைகள் எது வந்தாலும் மாற்றிக் கொள்ள முடியும்
உங்களை நீங்கள் நம்புங்கள்…!