
நீங்கள் வெளிவிடும் மூச்சு இந்தக் காற்று மண்டலத்தைப் பரிசுத்தப்படுத்தும் சக்தியாகப் படர வேண்டும்
துருவ நட்சத்திரத்தின் உணர்வை உங்கள் உடலில் பதிவாக்கி
அதை நினைவு கொண்டு வளர்த்தால் உங்கள் வாழ்க்கையில் வரும் அசுத்த உணர்வுகளை நீக்கி
அருள் உணர்வைப் பெருக்கச் செய்யும்.
உங்கள் வாழ்க்கையில் பொருளறிந்து செயல்படும் திறனும் இருளை
அகற்றிடும் வல்லமையும் பெறுவீர்கள்.
தங்கத்தில் திரவகத்தை ஊற்றினால் செம்பு பித்தளை ஆவியாக மாறுவது போல அவ்வப்போது அந்தத் துருவ நட்சத்திரத்தின் உணர்வை நுகர்ந்தால் நுகர்ந்த உணர்வுக்குள் கலந்த விஷத்தை அகற்றி
நல் உணர்வினைப் பெருக்கி இப்பிறவியில் பிறவி இல்லா நிலை
என்னும் அருளுணர்வைப் பெருக்கி நாம்
வாழ முடியும்.
அதனைப் பெறச் செய்வதற்குத் தான் இந்தத் துருவ நட்சத்திரத்தில் இருந்து வரும்
பேரருளை பதிவாக்கி கொண்டே வருகின்றேன்.
திட்டியவரை மீண்டும் எண்ணப்படும் பொழுது தீமையின் உணர்வு எப்படி வருகின்றதோ… வேதனைப்படுபவரைப் பார்த்து அந்த உணர்வு பதிவானால் அவரை எண்ணும் பொழுது வேதனை உணர்ச்சிகள் எப்படித்
தூண்டுகின்றதோ… இதைப் போல
1.வேதனைகளை அகற்றிய இருளை அகற்றிய அருளைப்
பெருக்கும் தன்மையை நுகர்ந்து உங்களுக்குள் பதிவாக்கச்
செய்கின்றேன்
2.எமது குருநாதர் எமக்குள் பதிவாக்கியது போன்று…!
3.அதன் வழியில் இருளை அகற்றிடும் அருள் ஞானிகளாக நீங்கள் ஆக வேண்டும்.
4.உங்கள் பேச்சும் மூச்சும்
உலக மக்களை இருளில் இருந்து மீட்டிடும் திறன் பெற வேண்டும்.
5.உங்கள் மூச்சு இந்தக்
காற்று மண்டலத்தையே நஞ்சினை அகற்றிடும் தன்மை பெறுதல் வேண்டும்
6.உங்கள் மூச்சால் உணவாக உட்கொண்ட உணவு தாவர இனங்களில் அது பட்டபின் நல்ல அணுக்களாக உருவாகி
7.அதனுடைய மலங்கள் தாவர
இனங்களைச் செழித்து வளரச் செய்யும் தன்மை வர வேண்டும்.
8.உங்கள் மூச்சால் கேட்போர்
உணர்வில் இருளகற்றி நல் அணுக்களாக உருவாக்கி நற்பயனை அடையும்
மக்களாக நீங்கள் மாறுதல் வேண்டும்.
எமது குருநாதர் காட்டிய அருள் வழியில் இதை உபதேசிக்கின்றேன்.
என் ஒருவனால் இது முடியாது. ஒரு உயர்ந்த வித்தினை அது
பலவாக உருவாக்கி பல வளர்ச்சிகளைப் பெறச் செய்து அனைவரது
உடல்களிலும் இத்தகைய நிலைகளை உருவாக்கினால் உலக இருளை அகற்றலாம்… அருள் ஒளியைப் பெருக்கலாம்.
இனம் இனத்தைத் தான்
வளர்க்கும் என்ற நிலைகள் கொண்டு அருள் ஒளியைத் தனக்குள் வளர்த்து விட்டால் அது தன் இனத்தை வளர்க்கச் செய்யும்… அருள் உணர்வைப் பெருக்கச் செய்யும்.
1.ஆகவே பேரருளை நமக்குள் பதிவாக்குவோம்
2.இருளை அகற்றுவோம் பேரொளியை வளர்ப்போம் என்று
குருநாதர் காட்டிய அருள் வழியில் அதைப் பெற நாம் தியானிப்போம்… தவமிருப்போம்.