ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

April 7, 2025

அகஸ்தியன் கண்ட அகண்ட பேரண்டம்

அகஸ்தியன் கண்ட அகண்ட பேரண்டம்


கண்ட அண்டமும் பிரபஞ்சமும் அண்டத்துடன் அகண்டு அதன் நிலைகள் வந்த பின் திலே தோன்றிய உயிரணுக்கள் ஒவ்வொன்றும் ஆற்றல்களை நுகர்ந்து நுர்ந்து இந்தப் பிரபஞ்சத்தின் நிலையையும் அகண்ட அண்டத்தினையும் அறிந்திடும் உணர்வு பெற்ற மனிதன் ஆறாவது அறிவு பெற்றவன் என்பதனை குரு தெளிவாகக் காட்டுகின்றார்.
 
அதன் வழி பெற்றாலும்
1.அகஸ்தியன் தாய் கருவிலே இருக்கப்படும் பொழுது நஞ்சினை வென்றிடும் உணர்வுகளைப் பெறுகின்றான்.
2.அகண்ட அண்டத்தையும் அறிகின்றான்
3.பிரபஞ்சம் உருவான உணர்வின் தன்மையை அறிகின்றான்
4.பேரண்டம் உருவான உணர்வின் தன்மையை அறிகின்றான் அகஸ்தியன்.
 
அவன் அறிந்த உணர்வுகள் தான் இன்று உலகம் எங்கிலும் வானவியல் தன்மைகளும் ருப் பெற்றது. இந்தப் பிரபஞ்சத்தின் இயக்கத்தை மட்டும் தான் இன்று காண முடிந்தது.
 
அகண்ட அண்டத்தையும் அதற்கு முந்திய நிலைகள் இருண்ட உலகையும் அறிந்துணர்ந்தான் அகஸ்தியன். அணுவின் இயக்கப் பொருளை உணர்ந்தவன் அகஸ்தியன்.
 
அவனால் கண்டுணர்ந்தணர்வின் தன்மைகள் அவன் உடலில் விளைந்தது.
1.2000 சூரியக் குடும்பமாக இருந்தாலும் அதைக் காட்டிலும் எத்தனையோ 2000 குடும்பங்கள்
2.அகண்ட பேரண்டமாக இருக்கும் அதன் உணர்வுகளில் ஒன்றுடன் ஒன்று துணை கொண்டு தான்
3.ஒவ்வொன்றும் வாழ்கிறது என்ற நிலையை உணர்ந்தான்.
 
இவை அனைத்தும் கலந்த உணர்வு கொண்டு தான் மனித உடலுக்குள் அனைத்தையும் அறியும் தன்மை வருகின்றது. சகல பிரபஞ்சங்களையும் சகல அண்டங்களின் இயக்கங்களிலிருந்தும்… அத்தகைய அகண்ட அண்டத்துடன் தொடர்பு கொண்டு தான் நமது பிரபஞ்சமும் இயங்குகின்றது.
1.இதன் உண்மையின் உணர்வின் தன்மையை அறிந்தவன் அகஸ்தியன்.
2.இந்த உண்மைகளை நமது குருநாதர் என்னிடம் தெளிவாக எடுத்துக் காட்டிநார்.
 
இந்தப் பூமியில் மனிதனான பின் நஞ்சினை வென்றிடும் முதல் மனிதனாக அகஸ்தியன் பிறக்கின்றான். தாய் கருவிலே சந்தர்ப்பத்தால் நுகர்ந்த உணர்வுகள் நஞ்சினை மாற்றிமைக்கும் நிலையைப் பெறுகின்றான்.
 
அவ்வாறு பெற்றவன் தான் பிறந்தபின் அவன் உடலுக்குள் இயக்கும் உணர்வின் தன்மையை அறிகின்றான். அறிந்து கொண்ட பின் உணர்வின் தன்மையை பிரபஞ்சத்தையும் பிரபஞ்சம் அகண்ட அண்டத்துடன் இயக்குவதையும் நமது பிரபஞ்சத்தில் கவரும் உணர்வுகளை நமது பூமி கவர்ந்து துருவத்தின் வழி கவர்வதையும் அறிந்துருகின்றான்.
 
அவன் உணர்ந்த உணர்வுகள்
1.அவனுக்குள் உலகை அறியும் தன்மையும் உடலுக்குள் இயக்கும் உணர்வையும் அறிகின்றான்.
2.அகஸ்தியன் துருவன் ஆனான்… துருவ மகரிஷியானான்.
 
திருமணமான பின் தன் மனைவிக்குச் சொல்லி மனைவியும் ஏற்றுக் கொண்டு கணவன் பெற்ற உணர்வுகள் பெற வேண்டும் என்று ஏங்கி தான் ஓதிய உணர்வுகள் மனைவி ஏற்றுக் கொண்டு இரு மணமும் ஒன்றானது.
 
அவர்கள் இருவரும் ஒன்றான பின் தான் அண்டத்தை உணர்ந்த உணர்வுகள் அணுக்களாக விளைந்து அண்டத்தின் ஆற்றலையும் அருள் ஒளியாக அது மாறிய நிலைகளை… கணவன் மனைவி ஆண் பெண் என்ற நிலையில் உருவாக்கினார்கள்.
 
அவ்வாறு உருவாக்கித் துருவத்தை எல்லையாக வைத்து அதை நுகர்ந்தறிந்து துருவ நட்சத்திரமாக வாழ்ந்து வருகின்றார்கள்
1.அஸ்தியன் கண்ட பேரண்டத்தையும் அந்த ஆதியின் நிலையையும் நீங்கள் அறிய முடியும்
2.அதற்குத் தான் இதைப் பதிவு செய்கின்றேன்.