ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

April 6, 2025

எறும்புக் குழியில் அமர வைத்து எனக்கு குரு கொடுத்த அனுபவம்

எறும்புக் குழியில் அமர வைத்து எனக்கு குரு கொடுத்த அனுபவம்


குருநாதர் காட்டிய அருள் வழியில் உலக அனுபவங்களைப் பெறுவதற்காக பல இன்னல்களை என்னை அனுபவிக்கச் செய்தார்.
1.நுகர்ந்த உணர்வுகள் எனக்குள் எப்படிச் செயலாக்குகின்றது…?
2.இதிலிருந்து மாற்றியமைக்கும் தன்மை எப்படிக் கொண்டு வர வேண்டும்…? என்று உணர்த்தினார்.
 
எறும்புக் குழியில் அமர்ந்து தவம் இருக்கும்படி செய்கின்றார். அமைதியாக நான் இருக்கும் பொழுது ஒன்றும் நடக்கவில்லை ஒரு எறும்பு என் காதிற்குள் சென்றது. அது உள் செல்லாதபடி விரலை வைத்துத் தள்ளினேன். அது துடித்து  விட்டது.. மடிந்து விட்டது.
 
அந்த உணர்வின் அலைகளை மற்ற எறும்புகள் நுகர்ந்து துரித கதியில் இயங்கத் தொடங்குகிறது. புற்றிலிருந்து வரக்கூடிய எறும்புகள் அனைத்தும் இந்த உணர்வின்லியை எப்படி அறிந்ததோத்தின் தன்மை எப்படி அறிந்ததோ தெரியவில்லை.
 
என்றாலும் அதன் உணர்வின் தன்மையை வேகமாக அறிந்து கொண்டு என் உடலில் பல நிலைகள் கொண்டு கடிக்கின்றது. கடி தாங்காது அதையெல்லாம் நான் தேய்க்கத் தொடங்கினேன்.
 
1.நீ தேய்த்து நசுக்கிய எறும்புகள் அனைத்தும் உன்னுடைய ஈர்ப்புக்குள் வந்து விடுகிறது.
2.உனது உணர்வைக் கவர்ந்து கருவாக மாறுகின்றது.
3.ஆனால் எறும்பின் உடலில் உள்ள விஷமும் அது நசுக்கப்படும்போது அதனின் வேதனையையும் நுகர்ந்து நீ மகிழ்ச்சியாக ஏற்றுக் கொண்டாய்.
4.அந்த உணர்வுகள் உன் உடலுக்குள் செல்லும்போது உன் ரத்த நாளங்களில் விஷ அணுக்களை உருவாக்கும் உணர்ச்சிகளைத் தூண்டும் நிலை வருகின்றது.
 
நீ எத்தனை எறும்பை நசுக்கினாயோ உன் உடலில் 48 நாட்களுக்குள் இது ஒரு கூட்டமைப்பான உணர்வுகள் விளையப்பட்டு
1.உன் உடலில் கை கால் குடைச்சல் என்றும்
2.அந்த எறும்புகள் சாகும்போது எந்தத் துடிப்பு அவைகளுக்கு இருந்ததோ
3,பளீர் பளீர் என்று ஊசி குத்துவது போல் அதை நீ உணரலாம் என்று உணர்த்தினார்.
4.அதனுடைய இயக்கங்கள் எப்படி இருக்கிறது என்பதையும் காட்டுகின்றார்.
 
மனிதனான பின் ஒன்றைக் கொன்றோம் என்றாலும் அல்லது மனிதனாகப் பிறந்தாலும் கொல்லும் பொழுது பட்ட வேதனையின் உணர்வுகள் நம் இரத்த நாளங்களில் தான் கலக்கின்றது.
 
கொல்லவில்லை என்றாலும் விஷம் தாக்கப்பட்டு அதன் உணர்வின் நினைவானால் உடலுக்குள் செல்கின்றது. இதிலிருந்து மீளும் மார்க்கம் என்ன…? என்று இந்த வினாவை எழுப்புகின்றார்.
 
ஆக மொத்தம் எறும்பு தான் வாழ அது செயல்படுகிறது. அதனைக் காக்க அதன் உணர்வால் நம்மைத் தீண்டுகின்றது. நம்மைத் தீண்டும் போது அதன் உணர்வு நமக்குள் பட்டால் நாம் அதுவாக மாறிவிடுகின்றோம். இது இயற்கையின் நியதிகள்.
 
ஆறாவது அறிவு கொண்ட மனிதன் நாம் அதைக் கொன்றால் உடலுக்குள் வந்தாலும் அதனின் வேதனையை நாம் துடைக்க வேண்டும் அல்லவா அதற்கு நீ என்ன செய்யப் போகிறாய்…? என்று கேட்கின்றார் குருநாதர்.
 
அந்தத் துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளியை நீ நுர்ந்தால் அது உனக்குள் பதிவாகி இருந்தால் அந்தச் சக்தியை நீ பெற முடியும்.
 
1.துருவ நட்சத்திரத்தின் அருள் சக்தி என் உடலில் படர வேண்டும்.
2.கொன்ற உயிரான்மாக்கள் என் உடலுக்குள் வந்தாலும் அருள் உணர்வு பெற வேண்டும் அருள் ஒளி என்ற உணர்வைப் பெறுதல் வேண்டும்…”
3.அருள் ஞானம் பெறும் உயர்ந்த உணர்வாக எனக்குள் வளர வேண்டும் என்று உடனுக்குடன் அதை மாற்றப்படும் பொழுது
4.அதைக் கொன்றாலும் நமக்குள் வந்து அருள் ஞான உணர்வை வளர்த்திடும் கருத்தன்மை அதிலே இணைந்து வளரும் தன்மை வருகின்றது.
 
இவ்வாறு இந்த உணர்வின் தன்மை இணைத்து விட்டால் உடனடியாக நமக்குள் அந்த அணுக்கள் ரத்தத்தில் வளரப்படும் பொழுது தீமையை மாற்றி நன்மையின் உணர்வை உருவாக்கும் தன்மை பெறுகின்றது.
 
இது அனைத்தும் நம் இரத்த நாளங்களில் வந்த பின் தான் உடலை உருவாக்கும் கரு விந்து என்ற உணர்வுகளுக்கு அழைத்துச் செல்கின்றது. அதனின் வலுக் கொண்டு தான் மனிதனை உருவாக்கும் கருத்தன்மை அடைகின்றது.
 
1.அப்படிக் கருத்தன்மை அடைவதற்கு முன் இந்த உணர்வினை மாற்றி விட்டால்
2.நாம் ஏங்கிய அருள் உணர்வுகள் கரு அறைகளுக்கு செல்லப்படும் பொழுது
3.அதை மாற்றி அமைத்து விடுகின்றது என்பதனை குரு தெளிவாகக் காட்டுகின்றார்.