
மனித ரூபம் உருப்பெறும் தகுதியும்… அது இழக்கப்படும் சந்தர்ப்பமும்
கொசு நம்மைக் கடிக்கின்றது… நம் இரத்தத்தை உணவாக உட்கொள்கிறது. மனிதனின் உணர்வுகள் கொசுவின் உடலில் பரவுகின்றது.
ஆனால் அது மனிதனைப் போன்ற ரூபம் ஆவதில்லை.
இரத்தம் அதற்கு
உணவாகின்றது. மனித இரத்தத்தில்
உள்ள உணர்வுகள்
1.மனிதனுக்குண்டான
சிந்தனைகள் எதுவோ அது அனைத்தும் அந்தக் கொசுவுக்கு வருகிறது.
2.அதாவது… மனிதனின்
நினைவே அதற்குள் வருகின்றது.
அந்த இரத்தத்தின் உணர்வுகள் கொண்டு அது சிறிது
காலமே வாழ்ந்தாலும் உடலை விட்டுப் பிரியும் அதனுடைய உயிரான்மா மனிதன் ஈர்ப்பிற்குள்ளே வருகின்றது.
பரிணாம வளர்ச்சியில் ஒரு மான் புலியை உற்றுப் பார்த்து அதனுடைய கொடூர உணர்வினை நுகரப்படும் பொழுது புலியின் உணர்வுகள் மானுக்குள் அதிகமாகின்றது… மான் இறந்தால்
புலியின் ஈர்ப்புக்குள் சென்று மான் புலியாக மாறுகிறது.
கொசு மனிதனின் இரத்தத்தைக் குடிக்கின்றது.
மனிதனின் உணர்வு அதிகமாகிறது. ஆனால் நினைவு மனிதன் மேல்
வரும் பொழுது
1.அந்தக் கொசு மனிதனுடைய ஈர்ப்பு வட்டத்திற்குள் சிக்கப்பட்டு நம் சுவாசத்தின் வழி உள்ளே சென்று
2.மனித உணர்வை மீண்டும்
தனக்குள் எடுத்துக் கருவாகி முட்டை
மாதிரி ஆகி விடுகிறது.
அதே போல் ஒரு எறும்பை
நசுக்குகிறோம் என்றால் நம்முடைய நினைவு கொண்டு அந்த உயிர்
நமக்குள் வந்துவிடும். ஒரு ஆட்டை இம்சித்துக் கொல்கிறோம் என்றால் அது வேதனைப்படும் நினைவுகள் கொண்டு மனிதனுடைய
ஈர்ப்பிற்குள் அந்த உயிரான்மா வந்து விடுகின்றது.
ஆனால் நாம் தவறு செய்யவில்லை. பரிணாம
வளர்ச்சிக்கு அது வருகின்றது. மனிதன் உணர்வுகள்
அதிகமாக இருப்பதால் அந்த உயிரணுக்கள் மனிதனில் உருப்பெறும் “அணு திசுக்களாக..” விளையத்
தொடங்கி விடுகின்றது.
எந்த மனிதருக்குள் அந்த
உயிரான்மா வந்தாலும் அந்த கால நிலைகளுக்கொப்ப உடலை விட்டு உயிர் வெளியேறி விட்டால் அந்த உயிரான்மா அதாவது எறும்பு ஆடோ அதனுடைய உயிரணுக்கள்
1.வாழ்ந்தவர்… யாருடன் நட்பாக அல்லது உறவு கொண்டு அதிகமாகப் பழகினாரோ
2.அந்த எண்ணம் கொண்டு இந்த ஆன்மாக்கள் அந்த உடலுக்குள்ளே
திரும்பச் சென்றுவிடும்.
3.இப்படி ஏழு மனித
உடல்களிலே இது மாறி மாறி வந்து மனிதனின்
நிலைகளில் முழுமை பெறும் அணுக்களாக விளையப்பட்டு
4.ஏழாவது மனிதனுக்குள் வரும் பொழுது மனிதனாக முழுமை பெறும்
வளர்ச்சிக்கு வருகின்றது.
அப்படிப்பட்ட நிலைக்கு
வந்தாலும் அதில் பெண்பால் ஆண்பால் என்ற கரு முட்டைகளும்
யார் யாருக்குள் இது கலக்கின்றதோ அவைகளுக்கு ஒப்ப மனிதனாக உருப்பெறுகின்றது.
பெண்பாலுக்கும் அந்த முட்டை உருவாகின்றது… ஆண்பாலுக்கும் அந்த முட்டை உருவாகின்றது.
ஆனால் இரண்டும் சேர்த்து இணைந்த நிலைகள் மோதும் பொழுது தான்…
கரைந்து… ஒன்றை விழுங்குகின்றது அதற்குள் இணைகின்றது. கரு வளர்ச்சிக்கு வரும் தன்மை அடைகின்றது.
எத்தனையோ கோடி
உயிரணுக்கள் உடலுக்குள் இருந்தாலும் அங்கே கருவுக்குள்
சென்று மனிதனாகப் பிறக்கும் தன்மை உயிரணுக்களுக்குத் தோன்றுகின்றது.
இருந்தாலும் ஒரு உடலிலே
மனிதனாகப் பிறந்து மனிதன் இறந்த பின் “அவன் வளர்ச்சி
இல்லாத நிலைகளில்…” இன்னொரு உடலுக்குள் இந்த ஆன்மா சென்று விட்டால் இது…
1.பல மனிதச் சரீரங்களில் புகுந்த உயிரான்மாக்கள் இந்த
உடலுக்குள் புகுந்தால்
2.அங்கே மனித உருப் பெறாதபடி தடைப்படுத்திக் கொண்டே இருக்கும்.
ஏனென்றால்… மனிதனான பின் அதில் வளர்ச்சியற்று விபத்திலேயோ… அல்லது வெறுப்பான நிலைகள் கொண்டு
தற்கொலையோ… வளர்ச்சி பெறும் தன்மையைத்
தன் எண்ணத்தால் குறைத்து விட்டால்
1.அந்த ஆன்மா எந்த மனித
உடலுக்குள் சென்றாலும் அங்கே கருக்களை வளர விடாதபடி
தடுக்கும்.
2.உயிரணுக்கள் மனிதனாகப் பிறக்கும் தகுதி அங்கே
இழக்கப்படுகிறது.
3.அதாவது “குழந்தை உருவாகும்…
குழந்தையை உருவாக்கும் ஆற்றல்” அங்கே தடுக்கப்படுகிறது.