
துருவ நட்சத்திரத்தின் அருளை “உயிரில் அழுத்தம் பட வைத்து…” உயிர் வழி நுகர வேண்டும்
நம் உயிரான ஈசனை வணங்கி… தாய் தந்தையரை வணங்கி… ஞானகுரு சற்குரு சாமியம்மா
அருளாசி பெற வேண்டும் என்று எண்ணி ஏங்கி
1.ஞானகுரு நம்மில்
ஆழமாகப் பதிவு செய்துள்ள அருள் ஞானிகளின் அருள் உணர்வை எண்ணி ஏங்கி
2.கண்ணின் நினைவை உயிருடன் ஒன்றி
3.நினைவை துருவ நட்சத்திரத்தின்பால்
விண்ணை நோக்கிச் செலுத்தி
4.துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி
பெற வேண்டும் என்று “வலுவாக எண்ணி ஏங்க வேண்டும்…”
அவ்வாறு, வலுக்கூட்டிய
இந்த எண்ணத்தை, துருவ நட்சத்திரத்திடம் “ஊடுருவிச் செலுத்தி…”
1.நமது கண்களின் காந்தப் புலனறிவால்
2.துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி
உணர்வுகளைக் கவர்ந்து ஈர்த்து
3.”உயிரில் அந்த அழுத்தம் பட வைத்து…” உயிர் வழி நுகர வேண்டும்.
“இப்பதிவின் துணை கொண்டு…” மீண்டும் துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளியை எண்ணி ஏக்கமான
நிலையில் அது எங்கள் உடல் முழுவதும் படர்ந்து எங்கள்
இரத்த நாளங்களில் கலந்து எங்கள் உடலில் உள்ள ஜீவான்மா ஜீவணுக்கள் எங்கள் உடல்
உறுப்புகளை உருவாக்கிய அணுக்கள் அனைத்தும் பெற அருள்வாய் ஈஸ்வரா என எண்ணி
1.நம் உடலுக்குள் “அலை அலையாகப் படரச் செய்ய வேண்டும்…”
2.இதுவே துருவ நட்சத்திரத்தின் சக்தியை
நமக்குள் கொண்டு வரச் செய்யும் தியானம்… மற்றும் ஆத்ம சுத்தி.