
திருச்சிற்றம்பலம்
பதஞ்சலி அரசனாக இருக்கும் போது அறிதல்
அழித்தல் காத்தல் என்று வாழ்ந்தாலும் ஒவ்வொரு நிமிடமும் பயந்தே வாழ
வேண்டியிருக்கின்றது. என்ற இந்த நிலையைச் சிந்திக்கின்றான்.
எப்போது…?
ஒரு சாம்ராஜ்யத்தையே ஆண்டு வந்தவர் தான்
அவர்.
1.ஆனால் அவரால் தன் உடலான சாம்ராஜ்யத்தை
ஆள முடியவில்லை.
2.கூடு விட்டுக் கூடு பாயும் போது
பிறிதொருவர் கையில் இவன் உடல் சிக்கிய பின் அந்த உடல் மடிந்தது.
உடலில் சேர்த்துக் கொண்ட ஆசையின்
நிலையில் பாம்பிற்குள் புகுந்தார். பாம்பாக பூமியில் நகர்ந்தே எவர் எதைச்
செய்கிறார்கள்…? என்று பல செயல்களைக் காண விரும்பினார்.
மனிதனைக் கண்டவுடன் அஞ்சி பொந்துக்குள்
ஒளிவதும் இவர்களிடம் இருந்து தப்பிச் செல்வதும் இதைத்தான் இவரால் காண முடிந்தது.
அரசனாக இருந்து ஆட்சியின் நிலைகள்
வரப்படும் பொழுது எதிரி என்ற நிலைகளில் அடுத்த அரசனைக் கண்டு அஞ்சி ஒளிவதும் பின்
அவனைத் தாக்கும் உணர்வுகளே வந்தது.
எதிரிகள் தன்னைத் தாக்காது விஷத்தைக்
கொண்டு தீண்டித் தன் உடலைப் பாதுகாக்கும் நிலைகளே வந்தது என்ற உண்மையை… பாம்பின் உடலுக்குள்
சென்றபின் ஞானத்தை அவன் பெற்றான்.
1.தன்னை அறிந்து கொண்ட பின் தான் செய்த
தவறை உணர்கின்றான்.
2.ஏழ்மையான மாடு மேய்ப்பவனின் உடலில்
புகுந்த பின் அதை முழுமையாக அறிகின்றான்
மெய் வழி காணும் நிலையில் அறிவின் ஞானமாக
ஒவ்வொரு அணுவின் இயக்கத்தையும் அந்த மூலத்தையும் உணர்ந்தான்… வளர்த்தான் “திருமூலராக…” ஆனான்.
ஆக... திருமூலர் என்று சொல்பவன் ஒரு
அரசனுடைய உயிரான்மா தான். மாடு மேய்ப்பவனின் உடலுக்குள் வந்த பிற்பாடு தான்
உண்மைகளை எல்லாம் அவன் அறிகின்றான் - நடராஜா…!
நடராஜா என்று திருமூலர் தான் பெயர்
வைக்கின்றார்.
நடராஜா என்றால் எது…? நமக்குத்
தெரியாது.
1.இங்கே உருவம் கிடையாது நடராஜாவை
வைத்திருக்கின்றார்கள்.
2.நம் பூமி நிற்காமல் அது
ஓடிக்கொண்டே இருக்கின்றது… இதற்குப்
பெயர் நடராஜா.
3.அதாவது அதற்குள் தோன்றிய நடனங்கள் பல.
பூமி நிற்காமல் ஓடுகின்றது அதற்குள்
எடுத்துக் கொண்ட ஒவ்வொரு உணர்வின் தன்மையும்… அது மோதும் நிலைகள் கொண்டு ஒவ்வொரு அணுக்களின் செயல்கள் எப்படி இருக்கின்றது…?
ஒலி ஒளி…! என்ற நிலைக்கு இந்தப் பூமியின் தன்மை மாறிய பின் பல ஆயிரம் உடல்களாக
எடுத்து ஒவ்வொரு நாதத்தையும் வித்தியாசமாக உண்டாக்குகிறது.
1.புலிக்குக் கோபம்
2.மானுக்குச் சாந்தம்
3.எருமை மாட்டிற்கு அசுர குணங்கள்
என்று
4.தனக்குள் வளர்த்துக் கொண்ட அது
அனைத்தையும் 1008 குணங்களாகப் பிரிக்கப்பட்டு
4.1008 நடனங்களைக்
காட்டுகின்றார் - சிவ நடனம்.
நடராஜா இந்த பூமி ஓங்கார நர்த்தனம்…! அது சுற்றும் பொழுது சுற்றும்
வேகத்தில் ஓங்காரக் காளி… தீய சக்திகள்
அனைத்தையும் அழிப்பதை… அசுரனைக் காலிலே
போட்டு மிதிப்பதாகக் காட்டுகின்றார்கள்.
உருவத்தைக் காட்டும்
போது… பூமி சுழலும் பொழுது அதில் ஏற்படக்கூடிய விஷத்தின்
சக்தி தனக்குள் வருவதை அது நசுக்கி தீயதை மிதிகும்
நிலைகளுக்குக் காட்டப்பட்டுள்ளது.
அசுரனைக் காலிலே மிதிப்பதாகக் காட்டுகிறார்கள்.
அதைப் போல மனிதனுக்குக் கோபம் வரும்
பொழுது சுவாசித்த உடனே உயிரிலே பட்டு எரிச்சலாகின்றது. அதே சமயம் அந்த உணர்வின் சக்தி நம்
உடலுக்குள் இருக்கக்கூடிய நல்ல குணங்கள் அனைத்திலும் பட்டு
எரிச்சலான உடனே
1.உடலான சிவம் ஓங்கார நடனமாகி…
2.இரு… நான் உன்னை
அழித்து விடுகின்றேன்…! என்று ருத்ர தாண்டவம் ஆடுகின்றது.
சிவன் ருத்ர தாண்டவம் ஆடுகிறார் என்றால் இந்த
உணர்வின் சக்தியான நிலைகள் “ஒலி ஒளி…”
அதாவது… தாவர இனங்களுடைய மணம் - அதனுடைய குணம்…! அதனுடைய உணர்வு - இயக்கம்.
மிளகாயை வாயிலே போட்டால் காரமான
அந்த உணர்ச்சி “ஆ…” என்று அலறச் செய்கின்றது. கசப்பை வாயிலே போட்டால் உமட்டலாகி… “ஓய்…” என்று சப்தம்
வருகின்றது.
இதைப் போன்று தான் பூமி நடராஜா என்று நிற்காமல்
சுழல்வதனால்
1.அதிலே ஜீவன் கொண்ட
நாம் எப்படி இயங்குகிறோம் என்பதே இந்த ஸ்தல புராணத்தின்
தத்துவம்.
2.சிதம்பரத்தில் தான் இருக்கின்றோம்… இந்த ஸ்தல புராணத்தின் உண்மையை நாம் உணர்ந்து கொள்ள முடியவில்லை.
அன்று பதஞ்சலி மந்திரங்களைக் கற்றுக்
கொண்டு தன்னுடைய சுகபோகத்திற்காக எத்தனையோ பாவங்கள் செய்தாலும் பாம்பு உடலில் வந்த
பின் மாடு மேய்ப்பவனைத் தீண்டுகின்றான்.
தீண்டி அந்த உடலில் வந்த பின்
1.அங்கே அந்த ஏழ்மையான குடும்பத்தில்
மகிழ்ச்சியான ஆனந்தமான உணர்வைக் கண்ட பின்
2.அரச நிலையின் உண்மைகளை உணர்ந்து அரசைத்
துறக்கின்றான்
3.இந்த உடலிலிருந்தே மெய் ஒளியைக் காண
வேண்டும் என்று விரும்புகின்றான்.
தான் பாம்பாக இருக்கும் போது விஷத்தால்
தீண்டி அந்த (மூலனின்) உயிரை வெளியேற்றினாலும்… அதையும் தன் அணைப்பின் தன்மை கொண்டு தன்
உணர்வின் தன்மை தான் செயலாக்கி வந்தது தான் “நடராஜன்”
என்ற திருச்சிற்றம்பலம்…!
1.உடலுக்குள் எடுத்துக் கொண்ட இந்த
உணர்வின் தன்மை கொண்டு
2.நாம் எந்தெந்தக் குணங்கள் கொண்டு இந்த
உடலுக்குள் இருக்கின்றோமோ திருச்சிற்றம்பலம்
3.திருச்சிற்றம்பலம் என்பது சிறு
உடலுக்குள் நின்று அங்கே இயக்கும் தன்மையை அன்று உணர்த்தினார் திருமூலர்
அந்தத் திருச்சிற்றம்பலத்தை நாம் அறிந்து
கொள்ள முடியவில்லை.
1.நடராஜா என்கிற பொழுது நாம் எதைச் சுவாசிக்கின்றோமோ அந்த உணர்வின் தன்மை இங்கே
இயக்குகின்றது.
2.விநாயகர் தத்துவத்தில் மூஷிகவாகனா… நீ எந்தக் குணத்தைச் சுவாசிக்கின்றாயோ அது இந்த உடலை அந்த
நிலைகளுக்கு ஆளாக்குகின்றது.
3.கீதையினுடைய தத்துவமோ
நீ எதை நினைக்கின்றாயோ அதுவாகின்றாய்…!