
இன்றைய உலக நடப்பு
மனிதன் எவ்வளவு சிந்தனை
கொண்டு விஞ்ஞானத்தின் அறிவினால் இன்று
எலக்ட்ரானிக் கருவிகளைக் கண்டுபிடித்துச்
செயல்பட்டாலும் இது எல்லாம் இன்று எதற்கு உதவுகின்றது…? தன் நாட்டைப் போற்றிடும் நிலையாக மற்றவனை அழித்திடத் தான் உதவுகின்றது.
எலக்ட்ரானிக் வளர்ச்சியையும் அதன் பயன்பாடுகளைப் பற்றியும் நாம்
ஆச்சரியப்படலாம். உலக நடப்புகளை அடுத்த
கணமே தெரிந்து கொள்ளலாம்.
1.அறிந்துணர்ந்து அதை
இயக்கப்படும் பொழுது அழித்திடும் சக்திகள் தான் வளர்கின்றது
2.அழித்திடும் எண்ணங்கள் தான் ஓங்கி வளர்கின்றது.
அதை வளர்த்து விட்டால்
பின் எங்கே செல்வோம்…? என்று சற்று சிந்தியுங்கள்.
நாம் வளர்த்த அந்த அழித்திடும் உணர்வுகள் அனைத்துமே சூரியனுடைய காந்த சக்தியால்
கவரப்பட்டு நமக்கு முன்பு தான் பரவிக் கொண்டுள்ளது.
1.திடீரென்று உணர்ச்சிவசப்பட்டால்
அந்த உணர்வு இயக்கி… மீண்டும் தன் எதிரிகளை
அழித்திடும் எண்ணங்களே நமக்குள் தோன்றி
2.அந்த சிந்தனைகளே ஓங்கி வளர்த்து… நம்மை அழித்திடும்
நோயாக மாறி “வைத்தியமே இல்லாத நிலையாகிவிடுகிறது…”
அது மட்டுமல்ல…! இதைக் கேட்போர் உணர்வுகளிலும் இயக்கப்பட்டு அவர்களையும் அழித்திடும் நிலையாகவே வளர்ந்து கொண்டே வருகின்றது.
இன்று குழந்தைகளைக் காணோம் முதியவர்களைக் காணோம் என்றெல்லாம் செய்திகள்
வருகின்றது. அவர்களைத் தூக்கிக் கொண்டு
போய் விற்றுக் கண்களைப் பிடுங்கி… உடல் உறுப்புகளைப் பிடுங்கி…
வியாபாரம் செய்கின்றார்கள்.
காசே இல்லை என்றாலும் ஒன்றும் கவலை இல்லை. குழந்தைகளைக் கடத்திக் கொண்டு போய் அதற்கென்று கூட்டங்களில் ஒப்படைத்து விட்டு
விட்டால் இவனுக்குக் காசு கிடைக்கின்றது.
இவன் பத்தாயிரம்
ரூபாய்க்கு விற்றால்… அவன் உடல் உறுப்புகளைப் பல லட்சக்கணக்கில் விற்று வியாபாரம் செய்கின்ற அந்த அளவிற்கு விஞ்ஞானமும் சரி… பக்தி என்ற நிலையிலும் சரி… மதத்தின் சார்புடைய நிலைகளும் சரி…
இப்படித்தான் செயல்பட்டுக் கொண்டுள்ளது.
தன் மதத்தாரைப் பிடிக்க மாட்டார்கள். அடுத்த மதத்தாரைக் கடத்திக் கொண்டு வந்தால் அது பாவம் இல்லை. இப்படித் திருடிக் கொண்டு போய் மிருக நிலைகள் கொண்டு அரக்கத்தனமான செயலாகப் போய்க் கொண்டுள்ளது.
ஆனால் இதனுடைய முடிவு
எப்படி எங்கே சென்றடையும்…? என்பது சிலருக்குத் தெரியாது.
உடலில் இருக்கும் பொழுது
உணர முடிகின்றது. இந்த உடலில் சேர்த்துக் கொண்ட இந்த உணர்வின் ஒலிகள் “உயிருடன்
சேர்க்கப்படும் பொழுது…”
1.அந்த அணு செல்கள் ஒவ்வொரு நொடியிலும் வேதனையுடனே தான்
துடித்துக் கொண்டிருக்கும்.
2.இதை மாற்றுவதற்கு
எவராலும் முடியாது.
ஏனென்றால் மனிதனாக
உருப்பெற்ற பின் அது வளர்ச்சி பெற்றது. உயிருடன் ஒன்றிய
நிலைகள் கொண்டு இந்தத் துன்பத்தை அனுபவித்தே தீர வேண்டும். யாரும் காப்பாற்ற முடியாது…!
இந்த மனித உடலில்
இருக்கும் போது தான் துன்பத்தை நீக்க முடியும். அதை
நீக்குவதற்குண்டான எண்ணங்களை எடுத்துச் செயல்படுத்தவும்
முடியும்.
ஆனால் மனித உடலை விட்டுச் சென்றால் இந்த உடலில்
எந்தத் தீய வினைகளைச் சேர்த்தோமோ அது இன்னொரு உடலுக்குள் சென்று “இதே உணர்வைத் தான்…” அங்கேயும்
செயல்படுத்தும்.
உதாரணமாக ஹார்ட்
அட்டாக்கில் இறந்திருந்தால் இன்னொரு உடலுக்குள் சென்று அங்கே
குழந்தையாக அது பிறப்பதில்லை. மனிதன் இறந்தாலும் இன்னொரு உடலுக்குள் சென்று தான் மீண்டும் மனிதனாகப் பிறக்க வேண்டும்.
ஆனால் ஹார்ட் அட்டாக்கில் இறந்திருந்தால் அடுத்த உடலுக்குள் சென்ற பின் இதே உணர்ச்சியைத் தூண்டி அங்கேயும்
அதே நோயை உருவாக்கி அதையும் சீக்கிரம் கொல்லத்தான்
செய்யும்.
பின் எப்படி அங்கே
குழந்தையாகப் பிறப்பது…?
பக்தியின் நிலைகளில் வாழ்ந்தாலும் கடைசியில் வேதனைப்பட்டு ஏங்கிக் கொண்டிருந்தால் எந்தெந்த மதத்தின்
அடிப்படையில் பக்தி கொண்டு வந்தாலும் இறந்து விட்டால் அதே பக்தி கொண்ட ஒரு மனிதன் ஈர்ப்பு இருந்தால் அங்கே சென்று
இந்த வியாதியைத்தான் அங்கே உருவாக்க முடியும்.
அங்கேயும் குழந்தையாகப் பிறப்பதில்லை. அதையும் நசுக்கச் செய்கின்றது.
தற்கொலை செய்து
கொண்டாலும் இதே போன்று தான். அடுத்த உடலுக்குள்
சென்று அதையும் வீழ்த்தத்தான் செய்யும்.
ஏனென்றால் இயற்கையின் நியதிகளைச் சொல்கின்றோம்…! “இதிலிருந்து மீள வேண்டும்…”
என்பதற்குச் சொல்கின்றோம். காலங்கள்
மிகவும் குறுகியிருக்கின்றது.
விஷத்தின் தன்மைகள்
வளர்ந்து கொண்டிருக்கின்றது. ஆக இந்தப் பூமிக்குள் நமக்கு முன் சாக்கடையாகத்தான் அது இருக்கின்றது. இங்கே தான் வாழுகின்றோம்.
1.ஆனால் இதே காற்று மண்டலத்தில் தான் மகரிஷிகள் ஞானிகள்
வெளிப்படுத்திய அருள் உணர்வுகளும்
மறைந்துள்ளது.
2.நம் குருநாதர்
காட்டிய வழியில் அதை நாம் நுகர்ந்து எடுத்து நமக்குள் வளர்க்கப் பழகிக் கொள்ள வேண்டும்.
3.நம்மை அறியாமல் இயக்கும் தீமைகளிலிருந்து அப்பொழுது நாம்
விடுபட முடியும்.
4.இன்னொரு உடலுக்குள் செல்லாதபடி பிறவி இல்லாத நிலை அடைய முடியும்… அழியா ஒளிச் சரீரம் பெற முடியும்.