ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

November 15, 2025

ஞானிகள் உணர்வுகள் நமக்குள் வளர்ச்சியாகும் போது சில உண்மைகளைப் பிரித்துக் காட்டும்

ஞானிகள் உணர்வுகள் நமக்குள் வளர்ச்சியாகும் போது சில உண்மைகளைப் பிரித்துக் காட்டும்


நாம் சும்மா இருக்கின்றோம் அப்போது ஒருவரைப் பார்க்கின்றோம் என்று வைத்துக் கொள்வோம். பார்த்தவுடனே…
1.அவர் எடுத்துக் கொண்ட உணர்வு கொண்டு நமக்குள் நினைவோட்டங்கள் திடீரென்று ஓட ஆரம்பிக்கும்.
2.ஒரு வெளிச்சத்தைப் போட்டவுடன் அங்கிருக்கும் பொருள்கள் எப்படித் தெரிய வருகின்றதோ இது போன்று
3.இந்த உணர்வின் ஓட்டங்கள் வரும் இன்னது தான் என்று…!
4.காரணம் ஞானிகள் உணர்வு நமக்குள் வரப்படும் பொழுது அந்த உண்மைகளை உணர முடியும்.
 
நாம் இங்கே தொழிலில் இருப்போம்… ஆனால் இது இரண்டையும் பிரித்துக் காட்டும் பொழுது நாம் அதைத் தெரிந்து கொள்ளலாம்.
 
ஒரு கம்ப்யூட்டரில் இரண்டு அலைகள் போட்ட உடனே எழுத்து வடிவிற்கு வேண்டிய நிலையில் நமக்கு வேண்டிய அந்த பாஷை இந்தியோ தமிழோ ஆங்கிலமோ பிரித்துக் கொடுக்கின்றார்கள்.
 
அந்த அழுத்த உணர்வுக்குச் (COMMAND) சென்றவுடன் அதனதன் நிலைகளில் கம்ப்யூட்டர் இயக்குகின்றது.
 
இதைப் போன்று தான் நமது உயிர் சூரியன் காந்த சக்தி கவர்ந்த உணர்வுகளை நுகரப்படும் பொழுது எலக்ட்ரானிக்காக (உணர்ச்சிகளாக) மாற்றுகின்றது.
1.மாற்றியவுடன் அதனுடைய பிரிவு அளவுகோல் எதுவோ
2.அதற்குத் தகுந்த மாதிரி அந்த உணர்வின் இயக்கமாக நம் உடலை இயக்கும்.
 
நம்முடைய உயிரின் வேலை காந்தத்தை இழுக்கின்றது. அதிலே வந்த அந்த உணர்வு நம் அழுத்தம் எதுவாக இருக்கின்றதோ அதற்குத் தகுந்தாற் போல் எலக்ட்ரானிக்காக மாற்றும்.
 
மாற்றி அந்த உணர்வுகளைப் பரப்பப்படும் பொழுது
1.அதனுடைய இன இயக்கங்கள் அந்த அதிர்வுகளைக் கொடுத்து உடலை இயக்கிக் காட்டும்.
2.அதற்குத் தகுந்த சிந்தனையும் அதற்குண்டான செயல்களையும் நமக்குள் இயக்கும்.
 
கம்ப்யூட்டரில் மின்சாரத்தை மையமாக வைத்து உணர்வின் செல்களுக்கு எலக்ட்ரானிக்காக இந்த மாற்ற உணர்வுகளைக் கொடுக்கின்றார்கள். கடிகாரத்தில் பார்க்கலாம் அந்தந்தக் கால பருவம் வந்தபின் அதை நமக்கு (அலாரம்) அறிவுறுத்துகின்றது.
 
அதில் இருக்கக்கூடிய பேட்டரி செல்கள் இந்த வேலையைச் செய்கின்றது அதில் எதை ஆணையிட்டு வைத்திருக்கின்றோமோ அதன் உணர்வின் கருக்களை மாற்றி மாற்றி அளவுகோல் பிரகாரம் இயக்கும்.
 
ஆனால் சிறிதளவு அதிலே நீர் பட்டு விட்டால் அளவுகள் மாறிவிடும் அதனின் இயக்கமே மாற்றமாகிவிடும். நீரில் உள்ள காந்தப்புலன் அதை அழிக்கும் திறன் கொண்டது.
 
நாம் எதையெல்லாம் எண்ணுகின்றோமோ நம் உயிர் எலக்ட்ரானிக்காக மாற்றி அந்த உணர்வின் வலு செல்கள் எப்படி இருக்கின்றதோ அதன் இயக்கமாக உடலை இயக்குகின்றது.
 
விஞ்ஞான அறிவுப்படி எலக்ட்ரானிக் இயந்திரத்தை இயக்குகின்றது. யக்கிய நிலையோடு விஞ்ஞானம் சரி. அதில் வளர்ச்சி பெற முடியாது தேய்வு தான் உண்டு. ஆனால்… மெய்ஞான அறிவுப்படி
1.உயிர் எலக்ட்ரானிக்காக மாற்றி அந்த உணர்வின் இயக்கப்படி நம்மை இயக்கும்.
2.இயற்கையின் நிலைகள் கொண்டு இந்த உணர்வின் அணுக்களை வளர்ச்சி பெறும் தன்மை பெற்றது
3.இதில் எந்தெந்தத் தன்மையோ அதனதன் அளவுகோல் கூடக் கூட அணுக்களின் உணர்வுக்கொப்ப வளர்ச்சி பெருகிக் கொண்டே வரும்.
 
அதனுடைய முடிவு எதை எடுத்து உருவாக்கியதோ அந்த உணர்வுக்கொப்ப செல்களை மாற்றி உருவத்தையே உயிர் மாற்றிவிடும். சொல்வது அர்த்தமாகிறது அல்லவா…!