
வசிஷ்டர் - கவர்ந்து கொண்ட சக்தி
மனித
வாழ்க்கையில் அதிகமாக சண்டையிடுவரையோ கலவரம் நடக்கும் சில செயல்களையோ நாம் உற்றுப் பார்க்கப்படும் பொழுது அதே
உணர்வுகள் நமக்குள் பதிவாகி நம் ஆன்மாவில் பால்வெளி மண்டலமாக
ஆகிவிடுகிறது.
நாம் நுகர்ந்த
உணர்வுகள் பதிவானாலும்
1.பதிவான
உணர்வுகளை அப்போதே நாம் சுவாசித்து உயிரிலே பட்ட பின்
2.ஓ…! என்று ஜீவ அணுவாக மாற்றும் கருத்தன்மையாக ஒரு இயக்கச்
சக்தியின் அணுவாக மாற்றும் தன்மை பெறுகின்றது.
3.அப்படிப்
பெற்ற அந்த உணர்வுகள் நம் ரத்தத்தில் கலந்தவுடனே அது கருத்தன்மை அடையும் தன்மை வருகின்றது
செடியில்
இருந்து வரும் சத்தினைச்
சூரியன் கவர்ந்து பரமாத்மாவிலே பரவச் செய்தால் அது மற்ற தாவர இனத்தை ஜீவன் ஊட்டும் சக்தியாக
மாறுகின்றது.
இதே போலத் தான் நம் உடலில் பதிவான உணர்வுகள் பதிவான நிலைகளில்
அதைக் கவர்ந்து கொண்ட பின் நம் ஆன்மாவாக மாற்றி… எதன் பசி
அதிகமோ அதன் வலு அதிகமாக இயக்கப்படும் பொழுது… அதன் குணத்தின் தன்மை கொண்டு தான் நாம் இயக்குகின்றோம்.
நாம்
நினைக்கின்றோம்…! இவன் கோபக்காரன்… அவர்கள் இப்படி… இவர்கள் இப்படி என்று…! ஆனால் சந்தர்ப்பத்தில்
பதிவான இந்த உணர்வு தான்… அது எதன் வலுவோ அதைக் கொண்டு இயக்குகின்றது.
எதன் உணர்வு நம் உடலுக்குள்
அதிகமாகின்றதோ உள் நின்று இயக்குவது அதன் தன்மை. அதனால் தான்
இராமாயணத்திலே தசரதச் சக்கரவர்த்திக்கு
“வசிஷ்டர் பிரம்மகுரு…” என்று காட்டுகின்றார்கள்.
ஒருவன் சண்டை
இடுகிறான் என்றால் “என்ன…?” என்று வேடிக்கை பார்க்க மனதினைச் செலுத்தினால் அதைக் கவர்கிறோம் என்று பொருள். அது
தான் வசிஷ்டர் என்பது.
1.நாம் எதை
உற்றுப் பார்த்து உணர்வின் தன்மை கவர்கின்றோமோ
2.அப்படிக் கவர்ந்த உணர்வுகள் நம் உயிரிலே பட்டு உணர்ச்சிகள் இயக்கப்பட்டாலும்
3.அந்த
உணர்வுகள் நமக்குள் பிரம்மம் ஆகி விடுகிறது… அதனால் தான்
வசிஷ்டர்.
நாம் கவர்ந்து
கொண்ட உணர்வுகள் ரத்தத்தில் கலந்து அது பிரம்மமாக்கும் தன்மை பெறுகின்றது
என்பதைத்தான் பத்தாவது நிலை அடையக்கூடிய தசரதச் சக்கரவர்த்திக்கு வசிஷ்டர்
பிரம்மகுரு என்று காட்டுகின்றார்கள்.
நாம் தீமைகளைச்
சந்தர்ப்பத்தில் பார்க்க நேர்ந்தால்…
1.என்ன
செய்கின்றான்…? ஏது செய்கின்றான்…?
தவறு செய்கின்ரானா…?
2.குற்றங்கள்
செய்கின்றானா…? ரொம்பவும் பிழை செய்கின்றானா…?
3.வேதனைப்படுத்துகின்றானா…? என்ற எண்ணங்கள் கொண்டு அந்த மனிதனை உற்று
நோக்கினால்
4.அந்த
உணர்வின் சக்தி நமக்குள் பதிவாகி உயிரிலே பட்டு இயங்கத் தொடங்குகிறது
5.ஆகவே கவர்ந்து கொண்ட
அந்த சக்தி வசிஷ்டர்…!
சூரியனிலிருந்து
வரக்கூடிய வெப்பம் காந்தம் விஷம்…
காந்தம் விஷத்தைக் கவர்ந்து கொண்ட பின்
வசிஷ்டர். கவர்ந்து கொண்ட அதே காந்தம்
ஒரு சத்தினைக் கவர்ந்து கொண்டால்
வசிஷ்டர். ஆண்பாலாக மாறுகின்றது ஆண்பாலுக்குப் பிரம்மம் என்று பெயர்.
பிரம்மாவின்
மனைவி அங்கே சரஸ்வதி. எந்தச் சத்தின் தன்மை கொண்டு
இயக்குகின்றதோ அந்த ஞானத்தின் வழி அந்த அணுக்கள் இயக்கும்…! என்று பொருள்.
இன்று உலகம் எப்படி இருக்கிறது…?
என்பதை நாம் தெரிந்து கொண்டோம். ஆனால்
1.இயற்கை
நம்மை எப்படி இயக்குகின்றது…? எதன் வழி
நாம் செல்கின்றோம்…?
2.நாம்
குற்றவாளியா… அல்லது குற்றமற்றவர்களா…?
3.குற்றமற்றவராக
இருப்பது குற்றமான செயல்களைச் செய்வது எப்படி…?
4.குற்றத்தை
முன்னிலைப்படுத்தி இயக்குவது எது…? என்று
5.நம்மை
நாம் அறிந்து கொள்வதற்குத் தான் இதை எல்லாம் உங்களுக்குத் தெளிவாக்குகின்றேன்.