
இரவிலே படுக்கைக்குச் செல்லும் பொழுது “ஆத்ம சுத்தி செய்தே ஆக வேண்டும்…”
குழந்தைகளை நாம்
வளர்க்கின்றோம், நாம் சொன்னபடி அவர்கள் கேட்கவில்லை என்றால் என்ன ஆகிறது…?
1.நம் பையன் தான்… ஆனால் வெறுப்பின் உணர்வைப் பதிவு செய்து விட்டால்
2.இவன் எப்பொழுது
பார்த்தாலும் இப்படித்தான் இருப்பான்…! என்று இந்த உணர்வை எடுத்துக் கொள்கின்றோம்.
ஒரு தரம் பதிவாக்கி விட்டால் பல காலம் நான் நாம் அவன் மீது பேரன்பு
வைத்திருந்தாலும் ஒரு தடவை எடுத்த இந்த உணர்வுகள் முன்னணியில் வந்து விடுகின்றது.
அவனைப் பார்க்கும் போதெல்லாம் இந்த வெறுப்பின் எண்ணங்களே வரும். அது வளர்ச்சியாகும்.
அவனை நல்லதாக மாற்றும் நிலைகளே நமக்குள்
மாறி விடுகின்றது. அவன் மீது நாம் வைத்திருக்கும் பற்றைத் தான் மாற்றுகிறது.
1.அவன் மீது பற்று
கொண்டு…
2.தீமையிலிருந்து அவனை
நல்வழிப்படுத்தும் உணர்வு நமக்குள் வராது.
3.காரணம்… உணர்வின் இயக்கங்களில் தீமையின் வேகங்கள் ஜாஸ்தி…!
ஆகவே... இரவிலே புலனடங்கித் தூங்கும் பொழுதெல்லாம்
இது போன்ற உணர்வுகளை நாம் தூய்மைப்படுத்த வேண்டும்.
ஆத்ம சுத்தி செய்தாலும் கூட
1.தூங்கச் செல்லும் பொழுது
குறைந்தபட்சம் ஐந்து நிமிடமாவது நம் நினைவைத் துருவ மகரிஷியுடன் ஒன்றச் செய்து
2.அடுத்து சப்தரிஷி
மண்டலங்களுடன் இணையச் செய்து… சப்தரிஷிகளுடன் நாம் இணையச் செய்ய வேண்டும்.
ஒருவர் மட்டும் நாம் குறி வைத்து எண்ணுவதல்ல. பலரும்
சேர்ந்துதான் அது ஒன்றாக ஆனது. இது தான்
அடிப்படைக்குறி என்றால் ஒன்றை மட்டும் எடுத்து ஒன்றாக எதுவும் இணைந்ததில்லை.
துருவத்தை முதலில்
நுகர்ந்து விண்ணிலே ஒளியாகச் சென்றது துருவ
மகரிஷி. அவனைப் பின்பற்றிச் சென்றவர்கள் சப்தரிஷி மண்டலம்.
ஆனால் அவர்கள் அனைத்தும் தனக்குள் சிருஷ்டித்துக் கொண்டவர்கள்
மகரிஷிகள். மனிதனாக இருக்கும் பொழுது சிருஷ்டித்துக் கொண்டது.
1.இந்த உணர்வை நாம்
பருக வேண்டும்.
2.இதையெல்லாம்
வலுப்படுத்தி அவர்கள் ஆன நிலையை எடுத்துத் தான் நமக்குள்
பெருக்க வேண்டும்.
(சப்தரிஷிகள் சப்தரிஷி மண்டல உணர்வை முதலில்
எடுத்துத் தான் துருவ மகரிஷி துருவ நட்சத்திர உணர்வை வலுவாக்க வேண்டும்)
அதைப் பெறச் செய்வதற்குத் தான் பௌர்ணமியன்று கூட்டுத்
தியானங்களில் எல்லோரும் சேர்ந்து “சப்தரிஷி
மண்டலங்களின் உணர்வை வலுவாக்கச் சொல்வது…”
அந்த வலுவை நமக்குள் கூட்டி இரவிலே தூங்கச் செல்லும் போதெல்லாம்
ஆன்மாவைச் சிறிது நேரமாவது
தூய்மைப்படுத்த வேண்டும்.
உதாரணமாக… சமைப்பதற்காக
வேண்டி பாத்திரத்தை நாம் உபயோகப்படுத்துகின்றோம்… பின் தூய்மைப்படுத்துகின்றோம் ஆனால் அதிலே ஒன்றிய
நிலைகள் சில இடங்களிலே அழுக்கு அதிகமாகப் படிந்துவிடும்.
அதை நாம் நீக்க முயற்சித்தால் தேய்க்கத் தேய்க்க பாத்திரமே ஓட்டையாகி விடுகிறது. ஒரு பக்கம் மேடாகி ஒரு பக்கம் தேய்மானமாகி மேடு பள்ளம் ஆகி சமமில்லாத நிலையாகி விடுகிறது.
இதைப் போன்று தான்
அவ்வப்போது (அன்றன்று) தூங்கச் செல்லும் பொழுது துருவ
நட்சத்திரத்தின் பேரொளியை எடுத்துத்
தூய்மைப்படுத்துகின்றோம்.
அதில் சில தொக்குகள்
இருந்தாலும்
1.இரவிலே மீண்டும்
முழிப்பு வந்தால் மகரிஷிகளின் அருள் சக்தி நாங்கள் பெற
வேண்டும் என்று
2.மறுபடியும் அந்த எண்ணத்தைக் கூட்டித்
தூய்மைப்படுத்த வேண்டும்.
ஏனென்றால் ஆன்மாவிலே
அந்த அணுக்களுக்குக் கிடைக்கக் கூடியதைத் தடைப்படுத்தும் போது தன்னாலே மாறிவிடும்.
ஆகவே இரவிலே எப்படி இருந்தாலும் “படுக்கைக்குச் செல்லும் பொழுது ஆத்ம சுத்தி செய்தே ஆக வேண்டும்…”