ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

November 25, 2025

தீமைகளை எல்லாம் தனக்குள் அமிழ்த்திக் கரைக்கக் கூடிய சக்தி “கடலுக்குத் தான் உண்டு…”

தீமைகளை எல்லாம் தனக்குள் அமிழ்த்திக் கரைக்கக் கூடிய சக்தி “கடலுக்குத் தான் உண்டு…”


விநாயகர் சதுர்த்தி அன்று அருள் மகரிஷிகள் உணர்வுகளை நாம் அனைவருமே நமக்குள் எடுத்துப் பெருக்கிக் கொள்ள வேண்டும்.
 
ஆனால் ஏற்கனவே எண்ணத்தால் நுகர்ந்த பிற தீமையான உணர்வுகள் அணுக்களாக இருக்கின்றது. அதைத் தடைப்படுத்தி விட்டால் ஈர்க்கும் சக்தி இல்லை என்றால் அது பாட்டுக்கே விலகிப் போய்க் கொண்டே இருக்கும்.
 
இந்தப் பூமியின் சுழற்சியின் தன்மையில் கடலின் இயக்கத்தைப் பற்றித் தெரிந்து கொள்ளுங்கள். கடல் பக்கத்திலே இருந்து பாருங்கள். அருகில் சென்றோம் என்றால் நம்மை உள்ளே இழுக்கும். அலைகள் மாறி மாறி வரும் பொழுது மோதி மறுபடியும் உள்ளே தனக்குள் இழுக்கும்.
 
இதைப் போன்று இந்த உணர்வின் தன்மை எந்தெந்த மனிதர் பால் எண்ணி எடுத்து வைத்திருக்கின்றோமோ அது வளர்ந்த பின் அந்த உணர்வுகள் எதிலும் சிக்கவில்லை என்றால் செடி கொடி மரங்கள் இருக்கும் பக்கம் செல்லாது. அங்கே சென்றால் செவுட்டில் அடித்த மாதிரி அடித்து விலக்கித் தள்ளிவிடும்.
 
மரம் செடி கொடி அவைகள் வெளிப்படுத்தும் உணர்வின் சத்து தான் நமக்குள் எண்ணங்களாகத் தோன்றி வளர்ந்து வந்தது. ஆனால் தீமையான உணர்வுகள் கலந்து மனிதனுக்குள் விளைந்தது. ஆகையினால் மனிதனால் உருவாக்கிய தீமையான அலைகள் தாவரங்கள் அருகே அங்கே போகாது போக முடியாது.
 
விண்ணிலே சூரிய குடும்பத்தில் உருவான கோள்கள் சூரியனின் பிடிப்பில் இல்லை என்றால் திசை மாறிச் சென்று எங்கே போய் மடிகின்றது என்று சொல்ல முடியாது. பெரிய சுழல் இருக்கும்அதிலே கரைந்து விடும்.
 
இதைப் போன்று தான் சுழற்சியின் ஈர்ப்பு வட்டம் பெரிய கடல்அது பூமியில் முதலிலே உருவானது. அதிலே கரைந்து தனக்குள் கரைத்து மீண்டும் வெளிப்படுத்தும்.
 
இதே போல தான் மனிதர்கள் ஈர்க்காத உணர்வுகள் கடலின் ஈர்ப்புக்குள் சென்று மூழ்கிவிடும். இதை உணர்த்துவதற்குத் தான் சதுர்த்தி என்று உருவாக்கப்பட்டு தீமை செய்யும் உணர்வுகளை இப்படித்தான் கரைக்க வேண்டும் என்று சிலையைப் புறத்தில் காட்டி மக்களுக்குள் விளைந்த தீமையான வினைகளை பிறர் பால் பற்று கொண்டு எண்ணி எடுத்த உணர்வுகளைத் தனக்குள் பதிவாக்காதபடி அவர்களை நலமாக்க வேண்டும் என்ற உணர்வினை எடுத்துப் பகைமை உணர்வுகள் இங்கே நிற்காது அப்புறப்படுத்த வேண்டும்.
 
இங்கே யாரும் எடுக்கவில்லை நாமும் எடுக்கவில்லை அவர்களும் எடுக்கவில்லை என்றால் நாம் வாழும் இடத்திலே அது நிற்காது.
 
விநாயகர் சதுர்த்தி அன்று உலக மக்கள் அனைவருமே இது போன்று அருள் உணர்வுகளை ஏகோபித்த நிலையில் எடுத்துப் பகைமை உணர்வுகளை இழுக்கவில்லை என்றால் இது எல்லாம் ஒதுங்கி கடலுக்குள் சென்று அமிழ்ந்துவிடும்.
 
அதாவது ஒருவர் மீது ஒருவர் பகைமை கொள்ளவில்லை என்றால் அந்த உணர்வுகளுக்கு இங்கே இடமில்லை. அப்பொழுது அந்த உணர்வுகள் அது பாட்டுக்கே நகர்ந்து சென்று கடலுக்குள் சென்று மூழ்கிவிடும்.
 
விநாயகர் சதுர்த்தி என்றால் தீமைகளை நிறுத்து…! உனக்குள் தீமையின் வளர்ச்சியைத் தடைபடுத்து அதைக் கரைத்து விடு…! சாஸ்திரப்படி இது உண்மை.