
“உங்கள் துன்பங்கள் அகல வேண்டும்…” என்பதே என்னுடைய பிரார்த்தனை
உங்கள் வாழ்க்கையில்
மற்றவர்களிடம் பேசும் பொழுது சலிப்பு சஞ்சலம் சங்கடம்
கோபம் குரோதம் அவசரம் ஆத்திரம் இது
போன்ற உணர்வுகள் வளர்ந்து உங்கள் நல்ல
குணங்கள் அடைபட்டு விடுகின்றது.
அடைபட்டுக் கிடந்த அந்த நல்ல குணங்களை மீட்டத் தான் யாம்
உபதேசித்தது. உபதேசித்த அந்த உணர்வுக்கு வலுக் கூட்ட உங்களுக்குள் காந்த சக்தியைக் கூட்டிக் கொள்ள வேண்டும்.
1.உங்கள் எல்லா குணங்களிலும் சப்தரிஷி மண்டல உணர்வுகளையும் நட்சத்திரங்களுடைய உணர்வுகளையும் தூண்டி
2.இந்த உணர்வின் தன்மை கொண்டு காந்த சக்தியைப் பெறச் செய்து
3.எல்லோருடைய
உள்ளங்களிலும் அதைப் பதிவு செய்கின்றோம்.
ஏனென்றால்… எத்தனையோ
பேர் எத்தனையோ விதமான கஷ்டங்களில் வந்திருப்பீர்கள்.
ஒருவருக்கு வீட்டிலே
கஷ்டமாக இருக்கும்… ஒருவருக்குத் தன்
பிள்ளை சொன்னபடி கேட்காதபடி இருக்கும்…
ஒருவருக்கு நோய் வந்து கஷ்டமாக இருக்கும்… ஒருவருக்கு உதவி செய்து அதனால் தொழிலில் தொல்லைகள் அனுபவித்து
அதனால் கஷ்டமாக இருக்கும்… ஒருவாருக்கு வியாபாரத்தில் மந்தமாக
இருந்திருக்கும்… எதை எடுத்தாலும்
எனக்குத் தொல்லையாகவே இருக்கிறது…! என்றும் இப்படி எத்தனையோ பேர் வந்திருப்பீர்கள்.
இந்த எண்ணம் உள்ள அத்தனை
பேருக்குமே
1.எந்தெந்த எண்ணத்தில்
நீங்கள் வந்தீர்களோ அந்த எண்ணங்கள் மாறி
2.உங்களுக்குள் உயர்வான சக்தி கிடைக்க வேண்டும் என்று தான் உபதேசத்தைக் கொடுத்து
3.மகரிஷிகளின்
அருள் சக்தியை அந்த இடத்தில் அடைத்து வைத்து உங்களுக்குள் சக்தி
கூடும்படிச் செய்கின்றோம்.
குழம்பிலே புளிப்பு காரம்
கசப்பு துவர்ப்பு உப்பு இவையெல்லாம் போட்டு அதை எப்படி
ருசியாகக் கொண்டு வருகின்றோமோ இதைப் போன்று
1.எல்லோருடைய
உணர்வுகளிலும் அந்த அருள் உணர்வுகளை நுகரும்படிச் செய்து
2.அதைப் பெறுவதற்குண்டான உணர்ச்சிகளைத் தூண்டும்படிச் செய்து
3.இந்த உணர்வினை
ஒலிகளாக எழுப்பும்படி செய்து அதைச் சூரியனுடைய காந்த
சக்திகள் கவரும்படிச் செய்து
4.கவர்ந்த உணர்வுகளை
உங்கள் செவிகளிலே ஊடுருவச் செய்து
5.ஊடுருவிய உணர்வின் தன்மையை உங்களுக்குள் இருக்கும் 1008 குணங்களிலும் ஆழமாகப் பதிவு செய்கின்றோம்.
அடுத்து அந்த மகரிஷிகளின் அருள் சக்தி பெற வேண்டும் என்று நீங்கள் எண்ணினால்
அந்தச் சக்தி எளிதில் கிடைக்கும்.
எனது குருநாதர் எனக்கு
எப்படி அந்த மகரிஷிகளின் அருள் சக்திகளை ராஜதந்திரமாக உள்ளுக்குள் நுழைய வைத்தாரோ அதே
போலத்தான் உங்களுக்குள் இந்த உணர்ச்சிகளை தூண்டும்படிச்
செய்து… அதைத் தட்டி எழுப்பி துன்பத்தை
ஊட்டிக் கொண்டிருக்கும் அந்த உணர்வுகள் உடலிலிருந்து நீங்க வேண்டும் என்று… மகரிஷியின் அருள் உணர்வுகளைப்
பாய்ச்சி… தீமைகள் அகன்று
நன்மையை உருவாக்கச் செய்கிறோம்.
உங்கள் அனைவரையும் அந்த உணர்வின் ஒலிகளை எழுப்பும்படி செய்து அந்த மகரிஷிகள்
உணர்வுகளை உங்களுக்குள் நிரப்பி அந்த
அடிப்படையில் நீங்கள் தியானம் எடுத்தீர்கள் என்றால் காற்றிலிருக்கும் மகரிஷிகளின் அருள் சக்திகளை நுகர்ந்து உங்கள்
உடலில் வந்த துன்பங்களைப் போக்கிக்
கொள்ளலாம்.
எனக்குத் துன்பத்தைக் கொடுத்துத் தான் குருநாதர் எல்லாமே தெரிய
வைத்தார். ஆனால்
1.உங்களுக்குத் துன்பம் வரும் பொழுது இந்த முறைகளைக் கையாண்டு
2.மகரிஷிகளின் அருள்
உணர்வுகளைப் பெற்றுத் தீமையிலிருந்து மீண்டு உண்மைகளையும் அறிந்து கொள்ளலாம்.
மகரிஷிகள் அருள் சக்தியை எடுத்தேன் என் துன்பம்
நீங்கியது நான் நன்றாக ஆனேன் என்று
நீங்கள் சொல்ல முடியும்.
1.கஷ்டம் இல்லாது நீங்கள்
பெறுகிறீர்கள்.
2.ஆகையினால் நான் லேசாகச் சொல்கிறேன் என்று அலட்சியப்படுத்தி விடாதீர்கள்.
3.வாக்குடன்
கூடி உங்களுக்குள் பதிவு செய்கின்றேன்… அந்த
வாக்கை நீங்கள் மீண்டும் எண்ணினால் சீக்கிரம் நல்லதாகும்.
எனக்குத் தொல்லை கொடுத்தாய்…
“நீ உருப்படுவாயா…?” என்ற அடுத்தவர் சொல்லை வாங்கிக் கொண்டோம்
என்றால் அது பதிவான பின் வியாபாரத்தில் மந்தம் உடலில் கை கால் குடைச்சல் என்று உங்கள் உடலை எப்படி அது கீழே கொண்டு போகின்றதோ இதே மாதிரி அந்தத் துன்பத்தைத் துடைப்பதற்கு
1.சாமி சொன்னார்… அந்த மகரிஷிகளின் அருள் சக்தி
பெற வேண்டும் என்று நினைத்து
2.அதை எடுத்தீர்கள்
என்றால் காற்றிலிருந்து அந்தச் சக்தி
உங்களுக்கு உதவி செய்யும்.