
கூட்டுத் தியானத்தின் மூலம் தான் மகரிஷிகள் சக்தியைப் பெற முடியும்
நாம் தனித்து ஒருவர் தியானமிருந்து
இந்த சக்திகள் அனைத்தையும் பெறுவோம் என்றால் அது சாதாரண மனிதனுக்கு “அத்தகைய வலு இல்லை…”
மகரிஷிகளின் அருள்சக்தி பெறும் தகுதியில்லை.
நாம் தனி மனிதனாக அமைந்தாலும்
1.நாம் கூட்டுத் தியானங்களில்
இருந்து அதன் துணை கொண்டு எண்ணத்தின் உணர்வு வலுவான பின்பு தான்
2.நாம் மகரிஷிகளின் அருள்
சக்தி பெற வேண்டும் என்று எண்ணினால்
3.”அந்த நிமிடமே அதைக் கவரும்
தன்மை வருகின்றது…”
ஆகவே ஒரு சமயம் கூட்டுத் தியானத்தில்
இருந்து அடுத்து நாம் பெறுவோம் என்ற நிலைகள்
இல்லாதவாறு “அடுத்தடுத்து வாரத்தில் ஒரு நாள் கூட்டுத் தியானங்கள் செய்து…” ஒவ்வொரு
நிமிடமும் நமக்குள் அதைச் செருகேற்றும் தன்மையை வளர்த்துக் கொள்ள வேண்டும்.
“தனித்து நாம் எல்லாச் சக்தியும்
பெறுவோம்…” என்று விலகிச் செல்லாது ஒவ்வொரு வாரத்திலும் ஆங்காங்கு ஒரு பத்துப் பேரானாலும்,
இருபது பேரானாலும் கூட்டுத் தியானங்கள் செய்து பழகிக் கொள்ளுங்கள்.
அதே சமயத்தில் மாதத்தில் ஒரு
நாள் பௌர்ணமி அன்று இங்கே தபோவனம் வருபவர்கள் கூட்டுத் தியானத்தில் கலந்து கொள்ளலாம்.
இங்கே வர இயலாதவர்கள் தன்
அருகிலே பத்து நூறு பேர் இருந்தாலும் பௌர்ணமியன்று ஒரு கூட்டமைப்பாக இருந்து இதே போல்
கூட்டுத் தியானம் இருக்க வேண்டும்.
கூட்டுத் தியானமிருந்து உடலை
விட்டுப் பிரிந்து சென்ற மூதாதையர்களின் உயிரான்மாக்களை உங்கள் வலுக் கொண்ட எண்ணத்தால்
அந்த மகரிஷிகளின் உணர்வின் துணை கொண்டு, விண் செலுத்த முடியும்,
1.அந்த உயிரான்மாக்களை விண்
செலுத்தினால் தான் உங்கள் எண்ணம் துரித நிலைகள் கொண்டு விண்ணை அடைந்து
2.விண் சென்ற அந்த மகரிஷிகளின்
உணர்வலைகள் பூமியில் படர்ந்திருப்பதை எளிதில் கவர்ந்து
3.உங்களுக்குள் அதை உரமாகச்
சேர்த்துக் கொள்ள முடியும்.
இந்த மனித வாழ்க்கையில் ஏற்படும்
தீமைகளை அகற்ற “அந்த மகரிஷிகளின் அருள் சக்தி பெற வேண்டும்” என்று ஒவ்வொரு நிமிடமும்
எடுத்து நமக்குள் செலுத்துவோம் என்றால் அந்தத் தீமைகள் அகலுகின்றது.
அதே சமயம் நம் எண்ணம் கூர்மையாக
விண்ணை நோக்கிச் செல்கின்றது. அப்பொழுது நமது உடலுக்குள் அந்த மகரிஷிகளின் அருள் சக்தி
உரமாக வலுப் பெறுகின்றது.
இவ்வாறு நாம் வாழும் இந்தச்
சிறிது காலத்திலேயே
1.அந்த மகரிஷியின் அருள் சக்தியை
உடலுக்குள் வலுவாக்கிக் கொண்டால்
2.இந்த உடலை விட்டு இந்த உயிரன்மா
எப்பொழுது சென்றாலும்
3.எந்த மகரிஷியின் எண்ணங்களை
நாம் அடிக்கடி எடுத்தோமோ
4.அவர் ஒளியாகத் திகழ்ந்து
கொண்டிருக்கும் அந்தச் சப்தரிஷி மண்டலங்களுடன் நம் உயிரான்மா இணைந்து
5.இன்னொரு உடல் பெறும் உணர்வலைகள்
கரைந்து
6.அந்த ஒளியுடன் ஒளியாக நாம்
என்றும் நிலைத்து நின்று
7.பத்தாவது நிலையான கல்கி
என்ற நிலையை அடைகின்றோம்.