
ஞானம் எதிலே தோன்றியது…? அதை எல்லோருக்கும் எப்படி ஊட்டுவது…? என்பதைத்தான் குருநாதர் காட்டினார்
ஞானிகள் உணர்வைப் பெறுகின்றோம்… அதை நமக்குள்
வளர்க்கின்றோம். நம்மைப் பார்ப்பவர்களுக்கெல்லாம் அது கிடைக்க வேண்டும் என்று எண்ண
வேண்டும்.
ஏனென்றால் உயிர்
கடவுளாக இருக்கின்றது
1.ஆண்டவன்
வீற்றிருக்கும் ஆலயத்திலே சந்தர்ப்பத்திலே தீமைகள் புகுந்து வாட்டுகின்றது.
2.தீமையிலிருந்து
விடுபட மகரிஷிகளின் அருள் சக்தி பெற வேண்டும் என்று…
3.மகரிஷிகளின்
அருளைத் தியானித்து அந்த வலுவை ஏற்றி எல்லோரும் பெற வேண்டும் என்று
நாம் தவம் இருக்க வேண்டும்.
அப்பொழுது உயிரான ஈசனிடத்திலிருந்து மகிழ்ந்திடும்
உணர்வுகள் விளைந்து வருகின்றது. அந்தத் தவத்தின் பலனை நாம் பெற முடியும்.
இந்த மூலக்கூறை நாம் தெரிந்து கொள்ள வேண்டும்.
ஆண்டவன் எங்கோ
இருக்கின்றான் என்ற நிலை இல்லாதபடி நம்மை ஆண்டு கொண்டிருப்பவன் தான் அந்த ஈசன். அதைத் தியானித்து எல்லோரும் அந்த அருள்
சக்தி பெற வேண்டும் என்று அந்த தவத்தின் பயனாக நல்ல விளைவினை
நுகர்ந்து அந்த உணர்வை நாம் பெறுகின்றோம்.
மகரிஷிகள் அருள் சக்தி பெற வேண்டும் என்று எண்ணினால் இது தியானம். மகரிஷிகள் அருள் சக்தியும் மலரைப் போன்ற மணம் அனைவரும் பெற வேண்டும் என்று எடுத்தால் தவம்.
1.மற்ற எத்தனையோ பேர்
ஞான மார்க்கங்களைக் காட்டுகின்றார்கள்…
ஆனால் அதிலேயே நின்று விடுகின்றார்கள்.
2.ஞானம் எதிலே தோன்றியது…? ஞானத்தை
எப்படி ஊட்டுவது…? என்பதைத்தான் நமது குருநாதர் காட்டினார்.
ஆகையினால் எல்லோருடனும்
ஒன்றி இந்த உணர்வை வளர்க்கச் செய்வதற்கும் நாம் எதை
எல்லாம் செய்ய வேண்டும் என்பதைத்தான் செயல்படுத்திக் கொண்டு
வருகின்றோம்.
புகழ் தேட வேண்டும் என்றால் எதை வேண்டுமென்றாலும் செய்யலாம்… புகழ் வரும்.
1.ஆனால் மெய்
ஞானக் கருத்துக்களை யாரும் அறிய முடியாது.
2.நமக்குள் அதை விளைய வைக்கவும் முடியாது.
இந்த உடலில் இச்சைக்காக
எதை வேண்டும் என்றாலும் பெறலாம்… நொடியில் பெற
முடியும். ஆனால்
1.என்றைக்கும்
நிலைத்திருக்கும் அழியாத நிலையான
2.பிறவி இல்லா நிலை
அடைய வேண்டுமென்றால் அதற்குக் கொஞ்சம் பொறுப்பும் பொறுமையும்
தேவை.
இந்த உடலுடன் யாரும்
இருந்ததில்லை மகரிஷிகளும் சரி ஞானிகளும் சரி. ஆகவே… இந்த உடலிலிருந்து அடுத்து இன்னொரு பிறவிக்கு நாம் வரக்கூடாது.