
“மகரிஷிகளின் அருள் சக்தி” எங்கும்… எதிலும்… பரவ வேண்டும் என்பதை நாம் சொந்தமாக்க வேண்டும்
சாமி நன்றாகப் பேசுகின்றார்… உபதேசிக்கிறார்…! என்று கேட்டு விட்டு இதை
அப்படியே நீங்கள் விட்டு விடாதீர்கள். அப்படி
ஆகிவிடக்கூடாது.
1.காரணம் எல்லோரும்
நீங்கள் தயாராக வேண்டும்.
2.அவரவர்கள் இதைப் பெற முயற்சி
எடுங்கள்.
3.இந்தக் கருத்துக்களை
நீங்கள் சிந்திக்க வேண்டும்… அதை
நீங்கள் எழுத வேண்டும்.
யாம் சொல்லும் போது பல
நிலைகள் தெரிய வரும்.
1.அந்தக் கருத்துக்களை எழுதிப் பதிவு செய்யும் பொழுது
ரெக்கார்டு ஆகும்.
2.எதை நீக்க வேண்டும்…? எதைச் செயல்படுத்த வேண்டும்…?
என்று எண்ணும் போது அந்த உணர்வுகள் உங்களுக்குள் விளையும்.
3.இந்த உணர்வின் வளர்ச்சி நம்மைச் சப்தரிஷி மண்டலத்துடன் இணைத்துக் கொண்டே வரும்.
அந்த மகரிஷிகளின் அருள் சக்தி நீங்கள்
பெற வேண்டும் என்று நோக்கத்தில் தான் இதை
எல்லாமே பதிவு செய்கின்றேன். அதை நீங்கள்
வளர்த்துப் பழக வேண்டும். இது உங்களுக்கு
நல்ல வளர்ச்சியைத் தரும்.
இங்கே கேட்டுவிட்டு… அடுத்தாற்போல் வெளியிலே சென்றால் புற உணர்வுகள் இதை மறைக்கும். அப்படி மறைத்ததை மீண்டும் தெளிவாக்க நேரமாகிறது. “நம்மால் முடியவில்லையே…” என்று ஒரு பலவீனமான…
விரக்தியான எண்ணங்கள் வந்துவிடும்.
தலையில் அதிகமான சுமையை ஏற்றி விட்டால் தூக்க முடியாமல் போகிறது அல்லவா. அது போன்று வருவதிலிருந்து நாம் விடுபட வேண்டும்.
ஆகவே நீங்கள் அருள் உணர்வுகளை வளர்த்து உங்களுக்குள் அதைப் பெருக்கி உயர்ந்த உணவுகளை எடுத்துச் சொல்லி உங்களை
அணுகி வருபவரையும் தயார் செய்ய வேண்டும்.
1.எத்தகைய தீமைகள்
வந்தாலும் “அதை மாற்றுவதற்குண்டான வழி எதுவோ…”
2.அதை நாம் செய்து
கொண்டேயிருக்க வேண்டும்.
அந்த மகரிஷிகளின்
அருள் உணர்வுகள் பெற வேண்டும்… அது
எல்லோருக்கும் கிடைக்க வேண்டும்… இந்த உலகம் முழுவதும் படர
வேண்டும்…! “இதை நமக்குச் சொந்தமாக்கிக்
கொண்டே வரவேண்டும்…”
வெறுமனே தியானம் மட்டும் செய்தால்
பத்தாது. நாம் தொழில் செய்யும் பொழுது
அதிலிருந்து வரக்கூடிய எதிர்மறையான சிக்கல்களிலிருந்தும் விடுபட்டுப் பழக
வேண்டும்.
காரணம்… ஆர்வத்தில்
இங்கே வருவார்கள் குறைகளைக் கண்ட பின் எம்முடைய உபதேசத்தை
(தியானத்தை) விட்டு விடுவார்கள். குறைகளை
வளர்த்து விடுவார்கள்.
தொடர்ந்து தியானிக்கும் போது “நீங்கள்
எடுக்கும் அந்த மகரிஷிகளின் அருள் சக்தி அவ்வப்பொழுது அதைச் சுட்டிக்காட்டி…” அந்தக்
குறைகளை எப்படி நிவர்த்தி செய்ய வேண்டும்…? என்ற உணர்வை அது மாற்றிக் கொடுக்கும்.
அதை உருவாக்கினால் தான்
அந்த உணர்வின் அனுபவம் உங்களுக்கு எழுத்து வடிவம்
கொண்டுவர ஏதுவாக இருக்கும். உங்களுக்குள் ஆழமாகப் பதிவாக்கி விளைய
வைக்கவும் முடியும்.
விவசாயப் பண்ணைகளில் பல சத்துகளை ஒன்றாக இணைத்து வீரிய செடியாக
உருவாக்கினார்களோ மாற்றியமைத்தார்களோ இதைப்
போன்று நாம் ஞானிகள் உணர்வை இணைத்து வீரிய சக்தியாக மாற்றிக் கொள்ள
முடியும்.
ஒவ்வொரு உடலிலும் வந்த உணர்வுகளை மாற்றி அதற்கொப்ப பரிணாம
வளர்ச்சியில் எப்படி உடல்கள் பெற்று வந்தோமோ… நம் உயிர் மாற்றியதோ இதைப் போலத்தான் நம் தொழில் செய்தாலும் வேலை
செய்தாலும் அதன் மூலமாக
1.ஒவ்வொரு நொடியிலும் அதற்குள் அருள் உணர்வைப் பெருக்கி அதை மாற்றி
அமைத்து
2.வாழ்க்கையே தியானம் என்ற நிலைகளுக்கு நாம் வளர்ச்சியின் பாதையில் கொண்டு வர வேண்டும்.
உடல் வாழ்க்கைக்கு நாம்
தொழில் செய்ய வேண்டி இருக்கின்றது. ஆனாலும் தொழிலில் வரக்கூடிய சிக்கல்கள் நாம் போகும் பாதையை அது தடைப்படுத்தி விடக்கூடாது.
ஆகவே ஒவ்வொரு
சந்தர்ப்பத்திலும் அருள் உணர்வைப் பெருக்கிடும்
நிலையாக நம்முடைய வளர்ச்சி என்றுமே அந்த மகரிஷிகள் காட்டிய
வழியில் இருக்க வேண்டும் என்பதற்குத்தான் இதை எல்லாம் ஞாபகப்படுத்துவது.