
குளவி புழுவைத் தன் இனமாக மாற்றுவது போல் தான் இயற்கையின் செயலாக்கங்களும்
ஒரு குளவி ஒரு புழுவைத் தூக்கிக் கொண்டு வந்து அதைத் தன் இனமாக
மாற்ற வேண்டும் என்ற நோக்கத்தோடு செயல்படுகின்றது.
இன விருத்திக்கான உமிழ் நீரைச்
சுரக்கும் பொழுது அதை மண்ணிலே போட்டுப் பிசைகின்றது. மண்ணிலே போட்டுப் பிசையும்
பொழுது ஒரு நிறம் இருக்கிறதென்றால் தனக்குகந்த மண்ணை எடுத்துச் சுண்ணாம்பினால் அதைக் கலந்து எடுத்துக்
கொண்டு வருகின்றது.
அதிலே இருக்கக்கூடிய
காந்தப் புலனறிவிலே தன் உமிழ் நீரைப் பாய்ச்சுகின்றது. பாய்ச்சி உருண்டையை
எடுத்து வந்து கூடாகக் கட்டுகின்றது. அதற்குள் புழுவைக் கொண்டு வந்து
அடைக்கிறது.
1.தன் இனவிருத்தியின்
உணர்வின் நோக்கம் கொண்டு புழுவைத் தாக்குகின்றது.
2.தாக்கியவுடன் புழுவின்
உணர்வின் செல்கள் வெளியிலே போகாதபடி அது மறைத்து விடுகின்றது.
3.முதலில் கவசமாகக்
கட்டி விடுகின்றது…. அதிலிலுள்ள விஷத்தின் தன்மை புழுவின்
தோலைச் சருகாக மாற்றி விடுகின்றது.
அதற்கு அந்தச் சக்தி
இருக்கின்றது.
அப்பொழுது புழுவின் உடலை
உருவாக்கிய உயிரும்… உயிரால் உணர்வால் ஆக்கப்பட்ட, உடலுக்குண்டான அணுக்களிலும்… இந்த விஷத்தின் தன்மை
பாய்ந்து விஷமாக ஆகின்றது.
1.விஷத்தன்மை பாய்ந்த
நிலையில்
2.புழுவிற்கு அந்தக்
குளவியின் நினைவாற்றல் தான் அதிகமாக வருகின்றது.
3.அந்த நினைவாற்றல்
அதிகரிக்கப்படும் பொழுது உடல் சருகாகுகிறது.
மீண்டும் அந்தக்
கூட்டின் மேலிருந்து குளவி “ரீங்கார
ஒலிகளை” எழுப்புகின்றது.
அந்த உணர்வின்
இயக்கமானபின்…
1.இதே நினைவலையில் அந்த
உணர்வின் செல்கள் மாறி விடுகின்றது.
2.இந்தக் கூட்டின்
வழியாக அந்த உமிழ் நீரைச் சேர்த்தபின்… அந்த ஒலி அலைகளைப்
புழு எடுக்கின்றது.
உதாரணமாக… நட்சத்திரங்களில்
இருந்து வரக்கூடிய கதிரியக்கங்கள் பூமிக்குள் ஊடுருவி… அந்தக்
காந்தப் புலனறிவு இயக்கும் காந்தம் அதிகமாகும் பொழுது… பூமியின்
நடுவிட்டம் வரை ஊடுருவிச் செல்லும்.
ஊடுருவிச் செல்லும்
பொழுது மரங்கள் மேல் தாக்கப்பட்டால் மரங்கள் கருகி விடுகின்றது. அப்படி ஊடுருவிப் பூமிக்குள் சென்றவுடனே, வெல்டிங் (welding)
வைத்தால் எப்படி ஓட்டை ஆகின்றதோ அதே போல பாறைகளில் ஊடுருவி “அதற்குள் சில நுண்ணிய அலைகளைப் பாய்ச்சுகின்றது…”
அது தனக்குள் சேர்த்து…
1.மொத்தத்தில் வடித்துக்
கொண்ட உணர்வுகளை ஆவியாக மாற்றும் பொழுது
2.அதன் வழி
பூமிக்குள் பல மாற்றங்களைக் கொடுக்கின்றது.
பிற மண்டலங்களிலிருந்து
வரும் விஷத் தன்மையை நட்சத்திரங்கள் அது தனக்குள் உருவாக்கி… அது உமிழ்த்தும் அலைகளைச் சூரியனின்
காந்த சக்தி கவர்ந்து கொண்டபின் அந்த அலைகளின் வீரியம் வருவதும்
1.நம் பூமியின்
ஈர்ப்புக்குள் நுழைந்து கொண்டபின்
2.அது ஈர்த்து நடுமையத்தில்
கொண்டு சேமித்துக் கொள்கின்றது.
அதைப் போல் நாம்
சுவாசிக்கும் நிலைகள்… எந்தந்த உணர்வுகளை உடலுக்குள்
பாய்ச்சினாலும்
1.உடலில் விளைந்த அந்த
உணர்வுகள் எல்லாவற்றையும்
2.உயிரிடமே கொண்டு
வந்து உயிராத்மாவாகச் சேர்த்து வைத்துக் கொள்கின்றது.
உயிரின் இயக்கங்களில் ஊடுருவி…
1.உணர்வின் அணுக்களைப்
பெருக்கித் தன் நினைவுடன் இயக்கச் செய்து
2.தன்னுடன் ஒன்றச்
செய்து ஒரே இயக்கமாகக் கொண்டு வருகின்றது.
இதற்கும் அதற்கும் (பூமிக்கும் உயிருக்கும்) உண்டான வித்தியாசத்தைக்
காட்டுகின்றார் குருநாதர்.
எனக்குப் படிப்பறிவு இல்லாததால் “நேர்முகமாகவே…” இதையெல்லாம் காட்டுகின்றார். இந்த உணர்வின் இயக்கங்கள் பூமியின் நடுமையும் அடைவதை
காட்டுகின்றார்.
ஆனால் நட்சத்திரங்களின்
கதிரியக்கங்கள் ஊடுருவும் பொழுது ஒவ்வொன்றையும் எப்படி இடைமறித்துக் கருக்கச்
செய்கின்றது…? வெல்டிங் அடிக்கும் போது ஓட்டை விழுவது போன்று
எப்படி ஆகின்றது…? என்று காட்டுகின்றார்.
மின்னல் தாக்கிய பின்
மரங்கள் கருகின்றது. மின்னல் ஊடுருவி
பூமிக்குள் செல்கின்றது. இப்படி…
27 நட்சத்திரங்கள் நிலைகள் அங்கே பூமிக்கடியில் ஒன்று சேர்த்துக் கொதிக்கலனாக மாறுகின்றது. அதிலிருந்து… கலவைகள் ஆவியாக மாறி தனது நிலைக்குப் பூமி
மாற்றுகின்றது.
இதைப் போல் தான்
1.குளவியின் விஷத்தன்மை
கூட்டிற்குள் அடைபட்ட புழுவின்
உடலுக்குள் பாய்ந்து
2.அது தன்னுடைய
வேகங்களை எடுத்து அணுக்களில் பட்ட பின்
3.புழுவின் உயிர் குளவியை
எண்ணியே அதனின் உணர்வலைகளை எடுத்து
4.உடலின் செல்களை
மாற்றிப் “புழு குளவியின் ரூபமாகின்றது…”
இது பரிணாம வளர்ச்சி.