
அரசர்கள் நமக்குள் உருவாக்கி வைத்துள்ள கலாச்சாரத்திலிருந்து நாம் மாற வேண்டும்
காலம் காலமாக… கலாச்சார
அடிப்படையில் இயக்கிய உணர்வுகள் நமக்குள் (உடலுக்குள்) செல்கள்
ஏராளமாக விளைந்திருக்கின்றது. நம் தாய் தந்தையரிடமிருந்து… மூதாதையர்களிடமிருந்து… வளர்த்துக் கொண்ட அணு செல்கள்
கலாச்சாரத்தில் மாறி உள்ளது.
கலாச்சார அடிப்படையில்
மதங்களை உருவாக்கினாலும்
1.மதங்கள் மாறிய
கலாச்சாரத்தில் பாருங்கள்… அதுவும் தொன்று தொட்டு ஊடே வந்து
கொண்டேயிருக்கும்.
2.இந்தக் கலாச்சாரமும் ஊடே ஊடுருவியே இருக்கும்… இதை “மதங்களுக்குள் இனங்கள்…” என்று சொல்லலாம்.
கராச்சியை (பாகிஸ்தான்) எடுத்துக் கொண்டால்… முஸ்லிம் மதமாக இருந்தாலும் கலாச்சார நிலைகள் அங்கே வலுப்பெறும் போது
எதிரியாகின்றது.
1.போர் முறையினால்
அங்கே கலாச்சாரமே தன்னையும் வளர்க்க முடியவில்லை… பெருக்கிக்
கொள்ளவும் முடியவில்லை.
2.தன்னைப் பாதுகாத்துக்
கொள்ள மற்றவரை எதிரியாகக் கருதி வீழ்த்தத் தான் செய்கின்றது.
ஒன்றுக்கொன்று
3.இன்றும் அங்கே போர்
செய்வதால் தன்னையும் அது வீழ்த்திக் கொண்டுதான் இருக்கிறது.
அதே கலாச்சாரம் தான் மதம்
இனம் என்ற நிலையில் தன்னை வளர்ப்பதற்காக வேண்டிப் போர் முறைகளாகி… மனிதன் அன்றைய அரசன் வழிகளில் தேய்பிறையாகவே உலகமெங்கும்
இன்றும் வந்து கொண்டிருக்கின்றது.
அதிலிருந்து மீள்வதற்குத்
தான் மகரிஷிகளைப் பற்றிச் சொல்லிக் கொண்டு வருகின்றோம்.
விண்டார் கண்டதில்லை… கண்டார் விண்டதில்லை…! அந்தப்
பழமொழிக்கொப்ப மகரிஷிகள் ஞானிகள் தங்களுக்குள் வளர்த்துக் கொண்டார்கள். வளர்த்துக் கொண்டது “அறிவின் ஒளியாக…” மாறிக் கொண்டே போகின்றது.
ஆனால் காட்சிகளாக
எத்தனையோ பார்க்கின்றோம், தியான ஆரம்பத்தில் நிறைய பேருக்குக்
காட்சியும் யாம் கொடுத்துக் கொண்டு வந்தோம். அந்தக் காட்சியின் பெருமையைத் தான் அவர்களால் காண
முடிகின்றதே தவிர காட்சிகளுக்குண்டான உண்மையைப் பார்க்க முடியவில்லை.
1.நம்முடைய உணர்வின்
கிளர்ச்சிகள் எந்த அளவுக்கு இருக்கின்றதோ
2.”அதே தொடர்பு கொண்ட
அலைவரிசையில்…” மனிதனில் விளைய வைத்த அலைகளை அது இழுக்கும்.
குளவி தன் உணர்வைப் புழுவின்
மீது பாய்ச்சும் போது அந்தக் குளவியின் உணர்வலைகள் வரும் அதே அலைவரிசையில் தான் காட்சியாக அது இழுத்துப் புழுவின் உடலில் விளைகின்றது…
குளவியைப் பற்றிய காட்சிகளைப் புழு எடுத்துத்தான்
அதுவும் குளவியாக மாறுகிறது.
ஏனென்றால் சில பேர் “தியானத்தில்… காட்சி…காட்சி…” என்று சொல்லிக் கொண்டிருப்பார்கள். அந்தக் காட்சியை… எதன் அடிப்படையில் நாம்
பார்க்கின்றோமோ அதன் நினைவாக அது வரும்.
நாம் எந்தெந்தப் பக்தியில்
தெய்வத்தின்பால் பற்று கொண்டுள்ளோமோ இந்த உணர்வுகள் நமக்குள் பதிவாகி இருக்கின்றது.
அதாவது… எந்தெந்த
ஒலிகளை நமக்குள் பரப்பி இருக்கின்றார்களோ நாதங்கள் சுருதிகள் வாத்திய இசை
மலர்களின் மணங்கள் சோம பானம் இது போன்ற உணர்வு எல்லாம் கலந்து தான் அந்த ஒரு
இசையாக அமைத்து அந்த உணர்வுகளைப் பதிவு செய்கின்றனர் “கடவுளாக…!”
எல்லா மதங்களிலும்
இப்படித்தான் செய்கின்றார்கள். வெறும் சொல்லாக
இருக்கலாம். உணர்வின் ஒலி அலைகளைப் பரப்பலாம் அதனுடைய
நிலைக்கு அது காட்சியாக வரும்.
ஆனால் யாம் இப்பொழுது
1.உங்கள் அணுக்களில் குருநாதருடைய
உணர்வுகளையும் அவர் கண்டுணர்ந்த உணர்வுகளையும் இணைத்து
2.அந்த உணர்வை
உங்களுக்குள் வளர்க்கச் செய்வதற்குத் தான் இந்த உபதேசமே தொடர்ந்து கொடுத்துக்
கொண்டு வருகின்றோம்.
3.இதை நீங்கள் தெரிந்து
கொண்டால் உங்களுக்குள் அந்த அருள் ஞானிகள் உணர்வுகள் நல்ல வளர்ச்சி
அடைவதற்குச் சரியாக இருக்கும்.