ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

November 27, 2025

மற்றவர்களைக் காக்கும் நிலை வந்தால் தான் நம்மைக் காக்கும் நிலை வரும்

மற்றவர்களைக் காக்கும் நிலை வந்தால் தான் நம்மைக் காக்கும் நிலை வரும்


1.மகரிஷியின் அருள் சக்திகளைப் பெறுவதற்கும் வளர்ப்பதற்கும் சில குறிப்புகளை எழுத வேண்டும்.
2.இருள் நீங்க வேண்டும் மகரிஷிகளின் அருள் சக்தி பெற வேண்டும் என்று சிறிது நேரமாவது நோட்டில் எழுதுங்கள்.
3.தொழில் வளமாக இருக்க வேண்டும் நண்பர்கள் நலமாக இருக்க வேண்டும் என்ற உணர்வுகளை நீங்கள் எடுத்துக் கொண்டு வாருங்கள்.
4.நாம் எழுதினோம்… இப்பொழுது அவர்கள் நன்றாக இருக்கின்றார்கள் என்ற நிலை உங்கள் அனுபவத்தில் வரும்.
 
இதை ஒரு பழக்கத்திற்குக் கொண்டுவர வேண்டும்.
 
குடும்பத்தில் ஏதாவது கேள்விப்பட்டால் நான்கு பேர் ஒன்று சேர வேண்டும். அந்தக் குடும்பம் நன்றாக இருக்க வேண்டும் என்று எண்ணுங்கள். இதற்கு 100 பேரைக் கூப்பிட வேண்டியதில்லை.
 
இந்த நான்கு பேரும் சேர்ந்து
1.முடிந்த மட்டும் மகரிஷிகளின்ண்ண அலைகளை அங்கே பரப்புங்கள்.
2.அந்தக் குடும்பம் ஓரளவுக்கு சீரானால் அவர்களும் திரும்பிப் பார்ப்பார்கள்.
 
அந்த வீட்டில் நல்ல அலைகளைப் பரப்புகின்றோம். அதன் மூலம் எல்லோரும் நலமாக வேண்டும் என்று இந்த உணர்வுகளைப் பிரதிபலிக்கும் பொழுது அது நல்ல வளர்ச்சிக்கு வரும்.
 
ஒருவரால் கனமான பொருளைத் தூக்க முடியவில்லை என்கிற பொழுது நான்கு பேர் சேர்ந்து தூக்கினால் எளிதாகத் தூக்க முடிகின்றது.
 
நண்பர்களுக்குள் மிகவும் அவஸ்தைப்படுகின்றார்கள் என்று கேள்விப்பட்டால் அந்த மகரிஷிகளின் அருள் சக்திகளை அதிகமாக எடுத்து அங்கிருக்கும் எல்லோரையும் பெறச் செய்ய வேண்டும்.
 
அந்தக் குடும்பத்தில் அந்த அருள் சக்தி படர வேண்டும் மகிழ்ச்சி பெறும் நிலைகள் அங்கே உருப் பெற வேண்டும் தொழில் வளர வேண்டும் என்று எண்ணுங்கள்.
 
இந்த மாதிரிச் செய்தால் தான் நாம் அதைப் பெற முடியும் வளர்க்க முடியும்.
 
27 நட்சத்திரங்கள் பிற மண்டலங்களில் இருந்து வரக்கூடிய கதிரியக்கச் சக்திகளை எடுத்தாலும் சூரியன் அதை எடுக்கும் பாதையில் மற்றவைகளுக்கும் அதை உணவாகக் கொடுத்து அதனின் உணர்வைத் தனக்குள் எடுத்து அதிலே வந்த நஞ்சைப் பிரித்து ஒளியின் சுடராக மாற்றுகின்றது.
 
இதைப் போலத் தான்
1.பிறிதொருவருவர் எண்ணங்களை எடுக்கப்படும் பொழுது ஞானிகள் எண்ண உணர்வை நமக்குள் வலுப்பெறச் செய்து
2.தீமைகளைப் பிளந்து தீமைகளைப் பிளந்திடும் உணர்வை வளர்த்து ஒளியாக மாறும் உணர்வை நாம் வளர்க்க வேண்டும்.
 
உங்களுக்குள் ஆழமாக இதைப் பதிவு செய்கின்றோம். இது நம் குருநாதர் காட்டிய வழி து. இதை நிச்சயம் நாம் அனைவரும் பெற முடியும்.
 
குருநாதர் காட்டிய வழியில் செல்வதற்குத் தியானமும் தவமும் தேவை. எல்லோரும் நன்றாக இருக்க வேண்டும் என்ற அந்தத் தவம் இல்லை என்றால் நாம் தியானத்தில் எடுக்கும் சக்திக்கு வேலை இல்லை. தவமிருந்தால் தான் உங்களுக்கும் அது கிடைக்கும். இந்தப் பண்புகளை நாம் வளர்க்க வேண்டும்.
 
உலகம் முழுவதும் நலம் பெற வேண்டும் என்று எண்ண வேண்டும். எத்தனையோ அரசியல்வாதிகள் வந்தாலும் அனைவரும் அந்த மகரிஷிகளின் அருள் சக்தி பெற வேண்டும். எல்லோரும் அந்த நன்மை பெறும் சக்தி பெற வேண்டும் என்று இதை ஓங்கி வளர்க்க வேண்டும்.
1.உலகம் நன்றாக இருக்க வேண்டும் காற்று மண்டலம் நன்றாக இருக்க வேண்டும்.
2.நாம் பார்ப்போர் அனைவரும் நன்றாக இருக்க வேண்டும் என்று எண்ண வேண்டும்.
 
இதைக் காட்டிலும் முக்கியமானது ஒன்று உண்டு…!
 
வீட்டிலே திருமணம் ஆகிப் கர்ப்பமாக இருக்கின்றார்கள் என்று கேள்விப்பட்டால் முதல் அந்த மூன்று மாதத்திற்குள் அவர்களை அணுகி எமது உபதேச நூல்களைக் கொடுத்து அதைப் படித்துக் கேட்கும்படிச் செய்து அதை எல்லாம் கருவிலிருக்கும் குழந்தை பெற வேண்டும் என்று எண்ண வேண்டும்.
 
குடும்பத்தில் உள்ளோர் தியானமிருந்து கருவிலிருக்கும் சிசு அகஸ்தியன் பெற்ற அருள் சக்தியைப் பெற்று ஞானக் குழந்தையாக வளர வேண்டும்…” என்று தவம் இருங்கள்.
1.அந்தத் தவம் உங்களைக் காக்கும்.
2.அருள் ஞானி பிறக்கும் அது உலகத்தைக் காக்கும்
3.அப்படிக் காக்கக்கூடிய நிலைகள் உருவாக வேண்டும் என்று தவத்தை நாம் இருக்க வேண்டும்.
4.இந்த உணர்வை வளர்த்தோம் என்றால் தான் இந்த உலகை நாம் மீட்க முடியும்உலகைச் சிருஷ்டிக்கும் சக்தியாக நாம் பெற முடியும்.
5.இந்த உடலான உலகத்திலிருந்தும் நாம் மீள முடியும்.
6.மீண்டும் உடல் பெறும் நிலைகளிலிருந்து நாம் மீள முடியும்.
 
தைச் செயல்படுத்த முடியும் என்ற நம்பிக்கை கொண்டு நாம் செயல்படுவோம். குரு அருள் உங்களுக்கு உறுதுணையாக இருக்கும்.