
சாகாக்கலை பெரிதல்ல
ஒரு சில வைத்தியர்கள்… ரசமணி போன்று செய்யக்கூடியவர்கள் என்னிடம் வந்து “சாகாக்கலை…” உங்களுக்குத் தெரியுமா…? என்று கேட்டார்கள்.
தெரியவில்லையே என்று சொன்னேன்…!
என்னங்க… நீங்கள் பெரிய சாமி ஆகி விட்டீர்கள்…?
என்னென்னமோ சொல்கின்றீர்கள்…! எதை எதையோ சொல்கின்றீர்கள்…! சாகாமல் இருப்பதற்கு வழி உண்டா…? சாகாக்கலை
உங்களுக்குத் தெரியுமா…?
பயங்கரமாக அவர் அடித்துப் பேசுகின்றார். பல பல மருந்துகளைப் பற்றிப்
பேசுகிறார்.
பின்பு கடைசியில் அவரிடம் நான் சாகாக்கலை என்றால் உங்களுக்கு என்ன தெரியும்…? என்று கேட்டேன்.
என்ன நீங்கள் இப்படிக் கேட்கின்றீர்கள்…! உங்களுக்கு இந்த
விவரமே தெரியவில்லை…! எனக்கு விவரம் தெரியவில்லை என்று அவர்
பேசுகின்றார்.
மனித வாழ்க்கையில் எதை
எதை எல்லாம் நீங்கள் உடலில் விளைய வைக்கின்றீர்களோ அது
சாவதில்லை. இந்தக் கலைப்படி
1.ஒருவனைக் கொல்ல வேண்டும் கொல்ல
வேண்டும் கொல்ல வேண்டும் என்று எண்ணினீர்கள் என்றால்
2.அந்தக் கொல்லும் உணர்வு உங்களைக்
கொல்லும்… இது சாகாக்கலையாக மாறும்.
3.அடுத்தாற்போல்
மற்றதைக் கொன்று சாப்பிடக்கூடிய சாகாக்கலையாக மாறி
4.மற்றதை இம்சைப்படுத்திய உணவாக உட்கொள்ளும் உயிரினமாக உருவாக்கிவிடும்.
இதற்குப் பெயர் தான் சாகாக்கலை என்று
சொன்னேன்.
அவர் உடனே என்னங்க…! இப்படி சொல்கின்றீர்கள்…! என்றார்.
வேகாநிலை…! மனிதனைத் தூக்கித் தீயிலே போட்டால் உயிர் வேகின்றதா…? வேகுவது இல்லை.
ஆனால்… இந்த உடலிலே எவ்வளவு
காலம் வளர்த்துக் கொண்டது இருக்கின்றதோ அது அனைத்தும் “ஐய்யயோ… அம்மம்மா…!” என்று அலறுகின்றது. அந்த நேரத்தில் தன்னுடைய தாயை நினைத்தால் இந்த உயிரான்மா தாயின்
உடலுக்குள் செல்கின்றது.
ஐயோ… அண்ணே…! என்று அந்த இட்த்தில் எதிரிலே
கண்ணிலே படும் நண்பர்களையோ மற்றவர்களையோ எண்ணினால் இந்த உணர்வுகள் பதிவாகி “உடலெல்லாம் எரிகின்றதே… எரிகின்றதே… என்னைக் காப்பாற்றுங்கள்…” என்ற ஓலத்தை எழுப்பி
1.கண்ணில் இந்த உணர்வுகள் ஆழமாகப் பதிவாகி விட்டால்
2.உடலை விட்டுச் சென்ற பின் சாகாக்கலையாக அவர்
உடலுக்குள் சென்று இயக்கத் தொடங்கும்.
உயிர் வேகுவது இல்லை. ஆனால் உடலும் உணர்வுகளும் கருகுகின்றது.
இந்தக் கருகிய உணர்வுடன் இங்கே உருவாக்கிய நிலையை அந்த உடலுக்குள்ளும் சென்று
1.அடுத்து “அம்மம்மா… ஐயோ எரிகின்றதே…
எரிகின்றதே…” என்று அவரும் சொல்லத் தொடங்குவார்.
2.சீக்கிரம் எதையாவது
மேலே போட்டு அல்லது ஊற்றி அவரும் தீயை வைத்துத் தன்னை
எரித்துக் கொள்வார். இதைப் பார்க்கலாம்.
ஆக எந்தெந்த உணர்வு கொண்டு
இறக்கின்றார்களோ இன்னொரு உடலுக்குள் சென்றால் இதே வேலையை அங்கேயும் செய்யும்.
ஒருவர் ஹார்ட்
அட்டாக்கினால் வேதனைப்படுகின்றார் என்று வைத்துக் கொள்வோம். அவருக்கு உதவி செய்த நண்பர்கள் யாரையாவது அவர்
நினைவில் அதிகமாக வளர்த்திருந்தால்… இவர் இறந்தால் இது சாகக்கலையாக மாறி அந்த உடலுக்குள் சென்று விடும்.
அங்கே சென்ற சிறிது
காலத்தில்
1.“நண்பர் இவ்வாறு
ஹார்ட் அட்டாக்கில் இறந்துவிட்டார்…” என்று கேள்விப்பட்டபின்
இதே உணர்வுகள் இயக்கி
2.அவருக்கும் இதே நோய்
வந்து அதனால் இறந்து விடுவார்… இதற்குப் பெயர் சாகாக்கலை.
எதன் எதன் அடிப்படையில்
வருகின்றதோ இது எல்லாம் சாஸ்திரங்களில் தெளிவாக்கப்பட்டுள்ளது. ஆனால் “சாங்கிய
சாஸ்திரம்…” என்று இதையெல்லாம் மூடி மறைத்து விட்டார்கள்… மறைக்கப்பட்டு விட்டது.
ஆகையினால்… இந்த மனித
வாழ்க்கையில் வெறுப்பையும் வேதனையையும் வளர்த்தால் இது
சாகாக்கலை. சாகாமல் அது வளர்ச்சியாகிக் கொண்டே இருக்கும்.
ஆனால் வேகா நிலை என்றால்
என்ன…?
1.மகரிஷிகள் அனைவரும்
வேகா நிலை அடைந்தவர்கள்
2.இந்த உலகிலே… பேரண்டத்திலே எத்தகைய நிலைகள்
வந்தாலும் அவர்களை அது சுட்டுப் பொசுக்க முடியாது.
3.எதிலேயும் அவர்களை வேக வைக்க முடியாது… ஒளியின் சுடராகவே இருக்கும்.. அது தான் வேகாநிலை என்பது.
இந்தப் பேருண்மையை நாம் தெரிந்து கொள்ள வேண்டும். என்றுமே நாம் அந்த மகரிஷிகள் அருள் சக்திகளை நமக்குள் விளைய வைத்துக் கொண்டால் நாமும் அந்த நிலை
பெற முடியும்.
அந்த நிலையை அனைவரும் பெற வேண்டும் என்பதற்குத்தான் இதை
ஞாபகப்படுத்துகின்றோம்.