ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

November 7, 2025

தூப ஸ்தூபி

தூப ஸ்தூபி

 
மாரியம்மன் கோயிலைப் பற்றி நாம் தெரிந்து கொள்ள வேண்டும். ஏனென்றால் திரும்பும் பக்கமெல்லாம் ஊருக்குள் வைத்திருப்பார்கள்.
 
நாம் நல்லதைத்தான் ஒவ்வொரு நிலையிலும் நினைக்கின்றோம். ஆனால் நம்மை அறியாமலே வேதனைகள் புகுந்து விடுகின்றது. அந்த விஷமான உணர்வுகள் வந்து நோயாகி விடுகின்றது.
 
அதை நீக்குவதற்காக வேண்டி… மெய் ஞானிகள் அருள் ஒளியைப் பெற வேண்டும் என்று மாரியம்மனைப் பார்த்து அதை எடுக்கும்படி சொல்கின்றார்கள். அதாவது…
1.பேரண்டத்தின் பேருண்மையைக் காட்டிய
2.தீயதைச் சுட்டெரித்து ஒளியின் சுடராகச் சுழன்று கொண்டிருக்கும்
3.அந்தச் சப்தரிஷி மண்டலங்களின் பேரருளும் பேரொளியும் நாம் பெற வேண்டும் என்று நினைவுபடுத்தினார்கள்.
 
நமக்கு யாரும் இதைச் சொல்லிக் கொடுக்கவில்லை. ஆனால் இப்பொழுது யாம் சொன்னாலும் கேட்பதற்கு ஆள் இல்லை
 
மாரியம்மனுக்கு ஆட்டைக் கொடுத்து கோழியைக் கொடுத்து கருவாட்டுக் கறியை வைத்து வணங்குபவர் உண்டு. எந்தெந்த அசிங்கமான பொருளைச் சாப்பிடக் கூடாதோ ஒரு சில இடங்களில் தையும் செய்கின்றார்கள்
 
கெட்டுப் போன பொருளை உபயோகப்படுத்தினால் என்ன செய்யும்…?
 
அது நம்மைக் கருவாடாக வாட்டிவிடும் கெட்ட நாற்றங்களை நமக்குள் உருவாக்குகின்றது. கெட்ட பேச்சுகளைப் பேச வைக்கிறது கெட்ட உணர்வுகளை நமக்குள் தூண்டுகின்றது. நம்மை அறியாமலே அந்த தீமைகள் நம் நல்லவைகளை அழித்து விடுகின்றது.
 
அதைச் சுட்டுப் பொசுக்க… மெய் ஞானிகள் அருள் சக்தியைப் பெற வேண்டும் என்று
1.அங்கே தூப ஸ்தூபியை வைத்துக் கவட்டையை வைத்து அக்கினிச் சட்டியைக் காண்பித்து
2.திறந்த வெளியிலே விண்ணை நோக்கி ஏங்கி அந்த அருள் சக்தியைப் பெற வேண்டும் என்று காட்டுகின்றார்கள்.
 
யாராவது அப்படிச் செய்கின்றார்களா…?
 
காரணம் அந்த நல்ல வினையை நாம் சேர்க்க வேண்டும். அதாவது தனக்குள் வரும் தீமையான வினைகளைச் சுட்டுப் பொசுக்கும் அந்த நல்ல வினைகளை நமக்குள் சேர்ப்பிக்க வேண்டும் என்று காட்டுகின்றார்கள்.
 
இனி எதிர்காலத்திற்காக வேண்டி இதை நீங்கள் செயல்படுத்துங்கள். ஆலயம் என்பது நம்மைப் பண்படுத்தும் இடம் அது.
 
அங்கே அர்ச்சனை செய்து நல்ல பலகாரங்களை வைத்து யாகத் தீயில் பல பொருள்களைப் போட்டு புகையைப் போட்டு வாழ்க்கையில் வரும் துன்பங்களையும் குறைகளையும் சொல்வதற்குண்டான இடம் அது அல்ல.
 
1.நமது உயிர் ஒரு நெருப்பு நமது உடல் ஒரு குண்டம்.
2.இந்தக் குண்டத்திற்குள்… மெய்ப் பொருளைத் தனக்குள் போட்டு
3.அதன் வழி இந்த உடலுக்குள் வரக்கூடிய மத்தைப் பார்வையாலும் சொல்லாலும் செயலாலும்
4.உலகம் முழுவதற்கும் தன் உணர்வின் சக்தி கொண்டு மக்களை மகிழ்விக்கும் செயலை உருவாக்குவது தான் இந்த யாகக் குண்டம்.
 
ஆகவே… அந்த ஞானி காட்டிய வழியில் அக்கினியை மூட்டுங்கள். அந்த அக்கினியை மூட்டிக் கொண்டிருப்பது ஓங்காரம்…”
 
கண்ணின் நினைவைப் புருவத்தியிலே உயிரிலே செருகப்பட்டு …..ம் என்ற உணர்வின் தன்மை கொண்டு தீமையான உணர்வுகளைத் தடுத்து விட்டு…” மெய் ஒளியான அந்த மகரிஷிகளின் அருள் சக்திகளை நாங்கள் பெற வேண்டும் அது எங்கள் உடல் முழுவதும் படர வேண்டும் என்று உடலுக்குள் செலுத்த வேண்டும்.
 
அந்த மகரிஷிகளின் அருள் சக்திகளைப் பெறச் செய்வதற்கும் வாழ்க்கையில் அறியாது தத்தளித்துக் கொண்டிருக்கக் கூடிய நிலையில் நல்ல உணர்வுகளை மீண்டும் செம்மையான நிலைகள் செயல்படுத்துவதற்கே…” இந்த உபதேசம்.
 
உங்களை நீங்கள் நம்புங்கள்…!
 
1.இந்தப் பிரபஞ்சத்தின் இயக்கமும்
2.பிரபஞ்சத்திற்குள் ருபெற்ற சப்தரிஷி மண்டலங்களின் உணர்வின் எண்ண அலைகளையும் உங்களுக்குள் கலவையாகச் சேர்த்து
3.சப்தரிஷிகள் அருள் ஒளி இங்கே படர்ந்து கொண்டிருப்பதை
4/நீங்கள் நினைத்தவுடன் எடுக்கும் நிலைகளுக்குத் தான் உபதேசிக்கின்றோம்.
 
சாதாரண மனிதருடன் நாம் கலந்து உறவாடும் போது பத்து வருடத்திற்கு முன் ஒருவன் துன்பம் செய்தான் என்று இருந்தாலும் திடீரென்று அதை இப்பொழுது நாம் எண்ணினால் நம் மனதை அது துடிக்கச் செய்கின்றது.
 
அன்றைய தினம் நாம் செய்யக்கூடிய காரியங்களைத் தடைப்படுத்துகின்றது. உணவையும் அஜீரணமாக்கி நஞ்சாக ஆக்குகின்றது.
 
தைப் போல ஒவ்வொரு நிமிடமும் துன்பங்கள் நேரும் பொழுதெல்லாம் அந்த மகரிஷிகளின் அருள் சக்தி நாங்கள் பெற வேண்டும் அந்த அருள் சக்தி எங்கள் உடல் முழுவதும் படர வேண்டும் என்று எண்ணுங்கள்.
 
1.துன்பத்தை விளைய வைக்கும் தீமைகளை அது கருக்கிவிட்டு
2.நல்ல உணர்வின் தன்மையைட்டுவதற்குத் தான் மீண்டும் மீண்டும் இதை ஞாபகப்படுத்துகின்றோம்.
3.உங்கள் நல்ல குணங்களுக்குள் அந்த மகரிஷிகளின் ணர்வுகளைத் திரும்பத் திரும்ப இணையச் செய்கின்றோம்.