ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

November 13, 2025

எவ்வளவு கொடிய நிலைகள் வந்தாலும் “அந்த உணர்வு நமக்குள் வாலியாகி விடக்கூடாது…”

எவ்வளவு கொடிய நிலைகள் வந்தாலும் “அந்த உணர்வு நமக்குள் வாலியாகி விடக்கூடாது…”

எந்த மரத்திலிருந்து வித்தாக உருவானதோ அந்த வித்தைப் பூமிக்குள் பதியச் செய்யும் போது அதன் அறிவின் தன்மையாக அதே மரமாக அதை வளர்க்கச் சூரியன் உதவுகிறது.

 

இதைப் போல் தான் நமது உயிர்

1.உடலுக்குள் எது அணுவின் தன்மையாக உருவானதோ

2.அதற்கு இந்தக் காற்றிலிருந்து அதே இனமான சத்தைக் கவரும்படி செய்து உணவாகக் கொடுத்து வளர்க்கின்றது.

 

எந்த மகரிஷிகளின் அருள் சக்தி பெற வேண்டும் என்று நாம் எண்ணி எண்ணி ஏங்குகின்றோமோ அந்த உணர்வின் சத்தை நமக்குள் கூட்டப்படும் பொழுது அந்த உணர்வின் அலையாக நமக்குள் மாறுகின்றது…”

 

1.யார் வேதனைப்படும்படியான சொல்லை நம்மிடம் சொல்கின்றார்களோ நம் ஆன்மாவாக அது மாறும் பொழுது

2.மறைந்திருந்து இந்த மகரிஷியின் உணர்வு அதைத் தாக்குகின்றது.

 

வாலியை ராமன் நேரடியாகப் பார்க்கவில்லை மறைந்திருந்தே தாக்குகின்றார்.

 

ஒருவன் வேதனைப்படும் சொல்களைச் சொல்லப்படும் போது அவனை நேரடியாக நீங்கள் பார்த்தால் என்ன ஆகும்…?

1.வேதனை என்பது வலிமையானது

2.நல்ல குணங்களை எல்லாம் வலு இழக்கச் செய்துவிட்டு அந்த உணர்வின் இயக்கத்திற்கே நம்மைக் கொண்டு செல்லும்.

 

பாவிப் பயல் இப்படிச் சொல்கிறான் பார்…! நான் ஒன்றுமே சொல்லவில்லை இவன் இப்படிச் செய்கின்றானே…! என்று என்ன தான் சொன்னாலும் அது எப்படி நீங்கள் ஒன்றுமே சொல்லாமல் அவர் உங்களைச் சொல்வார்…?” என்று அடுத்தவர்கள் கேட்பார்கள்.

 

சும்மா இருக்கும் போது யாராவது சொல்வார்களா…? என்று இதே சொல் வரும். இராமன் அம்பை எய்தானென்றால் கணைகளைத் திரும்ப வாங்கிக் கொள்வான்.

 

நாம் எதனைக் கலந்து சொல்லாகச் சொல்கின்றோமோ இந்த உணர்வின் தன்மை அங்கே கலந்து அதன் வினாவாக மீண்டும் எழும்பும்.

 

எவ்வளவு தான் நான் தவறே செய்யவில்லை…” என்று சொன்னாலும் தவறு செய்யாமல் யாராவது உங்களைச் சொல்வார்களா…? என்பார்கள். எதனை உருவாக்கி எந்தச் சொல் அம்பாகப் பாய்கின்றதோ அந்த சொல்லின் நிலைகள் இப்படித்தான் வரும்.

 

ஒரு கம்ப்யூட்டரில் எதை ஆணையிட்டு அதை எலக்ட்ரானிக்காக மாற்றி இயக்கும்படிச் செய்கின்றோமோ அந்த உணர்வின் தன்மை பதிவாக்கப்படும் பொழுது

1.மீண்டும் அது எலக்ட்ரானிக்காக மாற்றி அதன் வலுக் கொண்டு மற்றதைத் தனக்குள் பிரித்துக் காட்டும்…”

2.அதைப் போன்று தான் உயிர் நாம் சுவாசித்த உணர்வின் சொல்லை எலக்ட்ரானிக்காக மாற்றி விட்டது என்றால்

3.தே இடம் வரும் பொழுது அது மாற்றும்.

 

அதாவது… ஒரு மனிதனின் எண்ண வலு நமக்குள் அதிகமாகி விட்டால் அது வாலியாக மாறி விடுகின்றது. நம்முடைய நல்ல எண்ணங்கள் வலு இழக்கப்படுகிறது.

 

இதைத்தான் வாலியை எவரொருவர் நேரடியாகப் பார்க்கின்றார்களோ அந்த வலுவிலே சரி பகுதி அவனுக்குச் சென்று விடும் என்று “இவ்வளவு காரண காரியத்தோடு…” சாஸ்திரங்களை நமக்குக் காட்டி உள்ளார்கள் ஞானிகள்.

 

ஒருவன் வேதனைப்படும்படி சொல்லைச் சொன்னால் நம் நல்ல குணங்கள் வலு இழந்து விடுகின்றது அல்லவா…!

 

அப்போது அந்த மகரிஷிகளின் அருள் சக்தி பெற வேண்டும் என்ற எண்ணத்தால் இந்த உணர்வினைத் தனக்குள் ஏற்றி அந்த வேதனை நம்மைத் தாக்கிடாது பாதுகாத்துக் கொள்ள வேண்டும்.

 

அதற்குத்தான் ஆத்ம சுத்தி என்று உங்கள் கையிலே அதை ஆயுதமாகக் கொடுக்கின்றோம். எவ்வளவு கொடிய நிலைகள் வந்தாலும் அந்த உணர்வு நமக்குள் வாலியாக ஆகிவிடக்கூடாது…”

 

உயிரால் வளர்க்கப்பட்ட மனிதன் நீ. எனவே அவனிடமே வேண்டி அந்த அருளைப்  பெற வேண்டும் என்றுண்ணி

1.அந்த மெய்ஞானியின் உணர்வுகளை நமக்குள் சேர்ப்பிக்கப்படும் பொழுது

2.அதுவாகவே ஆகின்றோம்நாம் ஞானியாகின்றோம்.