
“உயிர் வழியாக (புருவ மத்தி) எடுத்துத் தான்” உயர்ந்த சக்திகளை நமக்குள் பெருக்க முடியும்
ஆலயங்களுக்குச் செல்லும் பொழுது அங்கிருக்கக்கூடிய
தெய்வச் சிலையை உற்றுப் பார்த்து “அந்தத் தெய்வ குணத்தைப் பெற வேண்டும்…” என்று ஞானிகள் காட்டிய வழியில் எண்ணினால் நாம்
தெய்வமாகின்றோம்.
ஆனால் அப்படி நாம்
நுகர்வதில்லை. யாரும் நமக்கு அப்படிச் சொல்லிக் கொடுக்கவும் இல்லை.
தெய்வத்திற்குச் சந்தனத்தை
அபிஷேகம் செய்கிறார்கள் என்றால் “அந்தச் சந்தனத்தைப் போன்ற நறுமணம் நாங்கள் பெற வேண்டும்” என்று நினைக்கின்றோமா…? என்றால் இல்லை.
சாமி மேல் பல விதமான
மலர்களைப் போட்டிருக்கின்றார்கள்.
அப்பொழுது “மலரைப் போன்ற
மணம் பெற வேண்டும் என்று எண்ணுகின்றோமா…?” என்றால் இல்லை.
சாமிக்கு மலரைப் போட்டு அலங்கரித்து அர்ச்சனை செய்யும் பொழுது நமக்குள் இருக்கும் “கஷ்டங்கள்
எல்லாம் கிளர்ந்து எழுகின்றது…”
உதாரணமாக ரோஜாப்பூ நறுமணமாக இருக்கப்படும் பொழுது மற்ற தீமையான மணங்களை அதன் அருகிலே விடுவதில்லை. அதே போல தீமையான உணர்வுகள் நம் ஆன்மாவிலே பெருகி இருக்கப்படும் பொழுது
நல்ல மணங்களைக் கண்டால் அருகே விடுவதில்லை. கண்களிலே தண்ணீர் தான் வருகின்றது.
சாமி மேல் போட்டிருக்கும்
ரோஜாப் பூவைப் பார்த்தாலும்
சரி மற்ற அர்ச்சனை அபிஷேகங்களைப் பார்த்தாலும் சரி
பார்த்தவுடனே கண்ணிலே தண்ணீர் தான் வருகின்றது.
ஏனென்றால்
1.எதிர்மறையான
உணர்வுகள் மோதியவுடன்
2.இப்படி எல்லாம்
எனக்குக் கஷ்டம் வந்துவிட்டதே…! என்று
தன்னை அறியாமலே கண்ணில் நீர் பெருகும்.
அங்கே தெய்வச் சிலையை
பார்க்கப்படும் பொழுது அந்த நல்ல உணர்வு வருவதில்லை. நமக்கு இடைஞ்சல் செய்தவர்கள் உணர்வுகள் முன்னணியில் வந்துவிடுகிறது.
காரணம் இந்த ஆன்மாவிலே
நாம் சுவாசித்த உணர்வுகள் இருக்கப்படும் பொழுது இதுவே கண்களிலும்
வருகின்றது.
1.ஆன்மாவிலே பட்டதை நுகரப்படும் போது உயிரிலே பட்டு உணர்வுகள் புலனறிவில்…
2.உடலுக்கும் சரி
2.கண்ணுக்கும் சரி
3.சொல்லுக்கும் சரி
4.வாசனைக்கும் சரி
5.நல்ல வாசனையை
அது எடுக்க விடாது.
தெய்வ குணம் பெற வேண்டும்… தெய்வமாக நாம் ஆக வேண்டும்…! என்று ஞானிகள் காட்டிய முறைப்படி ஆலயத்தில் யாரும் நினைப்பதில்லை.
உயர்ந்த சக்திகள் மக்களுக்குக் கிடைக்க வேண்டும் என்று எப்படி எப்படியோ
ஞானிகள் நமக்கு வழிபடுத்தி உள்ளார்கள்.
1.அந்த ஞானிகள் உணர்வை
நமக்குள் பதிவு செய்யப்படும் பொழுது
2.ஒவ்வொரு
சந்தர்ப்பத்திலும் காற்றிலிருந்து அந்த அருள்
சக்திகளை நமக்குள் பெருக்க முடியும்.
3.மகரிஷிகள்
அருள் சக்தி நாங்கள் பெற வேண்டும் ஈஸ்வரா
என்று
4.புருவ மத்தி வழியாக
எண்ணி உடலுக்குள் கொண்டு சென்று தீமைகளைப் பிளத்தல் வேண்டும்.
அப்படிப் பிளந்தால் தான் தீமைகள் அகலும்.
தீமைகளை அகற்றிடும் சக்திகளை நமக்குள் சேர்ப்பிக்கும் முறை என்பதே…
1.மகரிஷிகளின்
அருள் சக்தி பெற வேண்டும் என்று புருவ மத்தியில் இருக்கும் உயிரான
ஈசனிடம் வேண்டி
2.அதன் வழி கூடி உடலுக்குள்
அந்த ஆற்றலைச் செலுத்தி எல்லா அணுக்களையும் பெறச் செய்ய வேண்டும்.