ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

November 16, 2025

உங்கள் உயிராத்மா ஒளி நிலை பெற குருநாதரைப் பிரார்த்திக்கின்றோம்

உங்கள் உயிராத்மா ஒளி நிலை பெற குருநாதரைப் பிரார்த்திக்கின்றோம்


நீங்கள் தர்ம சிந்தனையுடன் அன்பு, பரிவு, பாசம், ஞானம், தைரியம், சாந்தமாக வாழ எண்ணி உங்கள் வாழ்க்கையில் கடைப்பிடித்து வந்தாலும், ஒருவர் மற்றொருவரைத் துன்புறுத்திக் கொண்டிருக்கும்போது என்ன நடக்கின்றது…?
 
நீங்கள் அவரைப் பார்க்கும் பொழுது…
1.உங்கள் புலனறிவால் கோப உணர்வைக் கவர்ந்து உடலில் உள்ள ஈர்ப்பு காந்தத்தில் இணைந்தவுடன்
2.உடல் காற்றில் கலந்துள்ள கோப உணர்வலைகளை ஈர்ப்பதனால் உங்கள் சுவாசத்துடன் கலந்து உயிரில் உராய்வதனால்
3.ஆத்திர உணர்வின் எண்ணம் உங்களை அறியாமலேயே ஆத்திரத்துடன் பேசவோ கேட்கவோ தூண்டுகின்றது.
 
அச்சமயம் உங்கள் உமிழ் நீரும் மாறுபட்டு நீங்கள் உட்கொண்ட ஆகாரத்துடன் கலப்பதால் குடலில் ஒருவித எரிச்சல் ஏற்படுகின்றது. அப்பொழுது எதைச் சாப்பிட்டாலும், சுவை குன்றியே இருக்கும்.
 
அதனால் ஆகாரம் குறைத்துச் சாப்பிட்டு உடல் சோர்வடையக் காரணமாகின்றது.
1.கோப ஆத்திர உணர்வலைகளை இரத்தம் வடித்துக் கொள்வதனால்
2.இரவில் உறங்கும் பொழுது “இரத்தம் தசைகளாக மாறும் சமயம்…”
3.உடலில் ஒருவித எரிச்சலும் தூக்கமின்மையும் ஏற்படக் காரணமாகின்றது.
 
உதாரணமாக… நீங்கள் வயலைப் பக்குவப்படுத்தி நெல்லை விதைத்து அதிலே நெல் முளைத்து வருகிறது என்று வைத்துக் கொள்வோம். காற்றில் மிதந்து வந்த, வேண்டாத  வித்துக்கள் வயலில் வீழ்ந்து களைகளாக முளைத்து விட்டால் நெல்லிற்கு இட்ட உரத்தைக் அந்தக் களைகள் எடுத்துக் கொண்டு களைகள் பெருகுகின்றன.
 
களைகளை நீக்கவில்லையென்றால் நெல் பயிர் வளர்ச்சி குன்றி நெல்லின் தரம் குறைந்து விடும்.
 
இதைப் போன்று
1.நீங்கள் சுவாசித்த கோப குணங்களின் உணர்வலைகளின் நுண் அணுக்கள் உங்கள் இரத்தத்தில் பெருகி
2.தசைகளாக மாறும் பொழுது தசைகளிலும் உடல் உறுப்புகளிலும் பெருகி மேல் வலி, தலை வலி போன்ற உடல் உபாதைகள் ஏற்படுவதும்
3.அதனால் உடல் சோர்ந்து “எச்செயலையும் சோர்வுடன் செய்யக் காரணமாகின்றன…”
 
நீங்கள் உலக நிலைகளை அறிந்து கொள்ளும் வண்ணம் பத்திரிக்கையைப் பார்க்கிறீர்கள் என்று வைத்துக் கொள்வோம்.
 
அதிலே “இரவு 8.00 மணியளவில் உணவு சாப்பிட்டுக் கொண்டிருக்கும் பொழுது திடீர் என்று கொள்ளையர்கள் வீடு புகுந்து வீட்டில் இருப்பவர்கள் அனைவரையும் அடித்துப் படுகாயப்படுத்திப் போட்டுவிட்டு வீட்டில் உள்ள பொருள்களை எல்லாம் வாரிக்கொண்டு போய்விட்டார்கள்” என்று படிப்பீர்கள்.
 
அப்பொழுது உங்களையறியாது, பயம் கலந்த வேதனை உணர்வுகளைச் சுவாசிப்பதனால் அவை உங்கள் இரத்தத்தில் கலந்து விடுகின்றன.
 
அன்று இரவு… நீங்கள் அமைதியாகப் படுத்திருந்தாலும், வேறு ஏதாவது புத்தகத்தைப் படித்துக் கொண்டிருந்தாலும் எதிர்பாராது சன்னல் கதவின் ஓசை “டப்…” என்று உங்கள் செவிகளில் கேட்டவுடன், உங்களையறியாது பய உணர்வு உந்தப்பட்டு உடல் சிலிர்த்து, பய உணர்வலைகளை சுவாசித்து, மேலும் மேலும், பய உணர்வுகள் பெருகக் காரணமாகின்றன.
 
இது போன்று அடிக்கடி நேர்ந்தால் எந்தத் தொழிலில் ஈடுபட்டாலும் மனத்தில் ஒருவிதப் பயத்துடன் செயல்படும் நிலை ஏற்படுகின்றது,
 
நீங்கள் வேலையின் நிமித்தம், தெருவில் நடந்து செல்கிறீர்கள் என்று வைத்துக் கொள்வோம். தெருவின் முனை அருகில் செல்லும் சமயம் ஒரு கார் திடீரென்று திரும்புகையில் உங்கள் மீது மோதும் நிலையை நீங்கள் பார்க்க நேர்ந்தால்
1.கண்களின் ஈர்ப்பு காந்தத்தில் பாய்ச்சுவதால் உங்கள் உடல் துரித நிலையில் பய உணர்வுகளை அதீதமாகச் சுவாசித்து
2.துரிதமாக இயங்கி, உடல் நடுக்கமாகி உங்களைக் காக்கும் எண்ணம் உருப்பெற்று
3.விபத்திலிருந்து உங்களைக் காத்துக் கொள்கின்றீர்கள்.
 
அதே சமயத்தில் அதீதமான பயத் துடிப்புடன் ஓட்டுநரைப் பார்க்கும் பொழுது ஆத்திர உணர்வுகள் உந்தப்பட்டு, ஆத்திர உணர்வுகளையும் சுவாசிக்க நேருவதால் பயத் துடிப்புடன் ஆத்திர உணர்வலைகள் உயிரில் உராய்வதால் புலன்களின் பொறிகள் இயக்கப்பட்டுஆத்திரத்துடன் பேசுவதும்அதற்குரிய செயலையும் செய்விக்கின்றன…
 
நீங்கள் விபத்திலிருந்து தப்பியதைப் பார்த்தவர்கள் உங்களைப் பார்த்துநீங்கள் செய்த தர்மத்தால் உங்களைத் தெய்வம் காப்பாற்றியதுஎன்று ஆறுதல் கூறுவார்கள்.
 
ஆனால்  நீங்கள் சுவாசித்த அதீத பய ஆத்திர உணர்வலைகளின் நுண் அணுக்கள் இரத்தத்தில் கலந்து தசைகளாக மாறுகின்றன…"
 
வயல்களைப் பக்குவப்படுத்தி நெல்லை விதைத்துப் பயிராக முளைத்து வரும் நிலையில் ங்கோ காற்றில் கலந்து வந்த வித்துகள் வயலில் வந்து வீழ்ந்தால் அதுவும் முளைத்து விடுகின்றது.
 
நீங்கள் எதிர்பாராது அதீத பய உணர்வுடன் ஆத்திர உணர்வையும் சுவாசித்ததால்
1.அவைகள் இரத்தத்தில் கலந்து தசைகளாக மாறுவதும்
2.தசைகளில், பய உணர்வுகளின் அணு திசுக்களும் ஆத்திர உணர்வுகளின் அணு திசுக்களும் உருப்பெற்று
3.அதன் இயக்கத்தால், தசைகளில் அமிலங்கள் சுரந்து
4.இந்த அமிலங்கள் உடலை இயக்கும் நரம்புகளில் ஈர்க்கப்பட்டு
5.நரம்புகள் இயங்குவதால் நரம்புகளில் உள்ள அமிலங்களின் உணர்வுகளின் சத்தை எலும்பின் காந்த சக்தியால் ஈர்க்கப்பட்டு
6.எலும்பினுள் ஊனாகவடித்துக் கொள்கின்றன
7.இந்த ஊனைத்தான் ஞானிகள் “ஊழ்வினை” என்று பெயர் வைத்தார்கள்.
 
எடுத்துக்காட்டாக வேப்ப மரத்தை எடுத்துக் கொள்வோம்.
 
வேம்பின் வித்து எத்தனை வகையான உணர்வின் சத்தில் வித்தானதோ அது நிலத்தில் முளைத்து வரும் பொழுது அதன் உணர்வுகளின் சத்தில் கலந்துள்ள ஈர்ப்பு காந்த சக்தியால் நிலத்தில் உள்ள நீரையும், காற்றில் இருந்து வரும் தன் இனமான உணர்வுகளின் சத்தையும் ஈர்த்துக் கொண்டுஈர்த்துக் கொண்ட வெப்பத்தினால் நீரில் கலந்துள்ள உணர்வின் சத்துகள் அனைத்தும் உறைந்து விடுவதால் வெப்பத்தின் இயக்கத்தினால் நீரில் வேப்ப மரமாக வளர்கின்றது.
 
இதைப் போன்று
1.அதீத பய குணத்தின் சத்தையும் ஆத்திர குணத்தின் சத்தையும் எலும்புக்குள் ஊனாக வடித்து வைத்துவிடுகிறது.
2.அவ்வாறு வடித்து வைப்பதனால் உயிரின் இயக்கத்தால் எலும்பின் காந்த ஈர்ப்பினால்
3.உடல், காற்றில் பரவி இருக்கும் பய உணர்வலைகளையும் ஆத்திர உணர்வலைகளையும் ஈர்க்கின்றது.
 
வேப்ப மரம் தன் உணர்வான கசப்பான சத்தை ஈர்த்துத் தன்னை வளர்த்துக் கொண்டு தான் வளர்த்துக் கொண்ட கசப்பான உணர்வுகளின் மணத்தை வெளிப்படுத்தும் பொழுது அதை நீங்கள் நுகர்ந்தால் அதன் கசப்பான உணர்வலைகள் உங்கள் முகத்தைச் சுளிக்கச் செய்கின்றன.
 
அதைப் போன்றே உங்கள் உடல் ஈர்க்கும், பய குணத்தின் உணர்வுகளையும் ஆத்திர குணத்தின் உணர்வுகளையும் நீங்கள் சுவாசிக்கும் பொழுது  “முகம் கடுகடுப்பு அடைகின்றது…
 
வேம்பின் இலைகளைச் சாப்பிட்டால் கசப்பின் உணர்வுகள் குடலில் இயங்கி, குமட்டல் ஏற்படும் பொழுது, வாந்தி வந்து விடும் என்ற பயம் கலந்த எண்ம் தோன்றுகின்றது.
 
இதைப் போன்று, உங்கள் உடல் ஈர்க்கும் பய குணத்தின் உணர்வுகளையும், ஆத்திர குணத்தின் உணர்வுகளையும், நீங்கள் சுவாசித்துக் கொண்டு இருப்பதனால் இரத்தம் வடித்துக் கொண்டதால்
1.பய ஆத்திர குணங்களின் உணர்வலைகள் இரத்தத்தில் நுண் அணுக்களாக வளர்ச்சி பெற்று
2.இரத்தக் கொதிப்பு போன்ற வியாதிகள் வரக் காரணமாகின்றது.
 
      மேலும், அதனால் அதிர்ச்சியான பேச்சைக் காதில் கேட்டால் பயமான எண்ணம் தோன்றுவதும்அச்சமயத்தில், பயத்தினால் சிந்திக்கும் திறன் இழந்து கோபப்படுவதும்
1.ஏதாவது ஒரு பொருள், கீழே விழும் ஓசையைக் காதில் கேட்டால்
2.உங்களை அறியாது உடல் சிலிர்ப்பதும் அதனால் பயமான எண்ணங்கள் தோன்றுகின்றது.
 
      இதைப் போன்று, எச்செயலை நீங்கள் செய்ய முற்பட்டாலும், உங்களை அறியாது அவசர ஆத்திர உணர்வுடன் செயல்படத் தூண்டுகின்றது. ஆனால் சிறிது தடைப்பட்டாலோ கோபமான எண்ணம் உருப்பெற்று விடுகின்றது.
 
      இரத்தம் தசைகளாக உடல் உறுப்புகளாக மாறும் பொழுது அதில்  பய, ஆத்திர குணங்களின்  அணு திசுக்களாக வளர்ச்சி பெற்றுத் தசைகளிலும், உடல் உறுப்புகளிலும் தசைவாதம் குடல்வாதம், பக்கவாதம் போன்ற நோய்கள் வரக் காரணமாகின்றது.
 
அதே போல் தசைகளில் உருவான அமிலங்களை உடல் உறுப்புகளை இயக்கும் நரம்புகள் ஈர்த்துக் கொள்வதால் அதனால் கீல்வாதம் மூட்டுவாதம் முடக்குவாதம் போன்ற நோய்கள் உருப்பெறக் காரணமாகின்றது.
 
இப்படி… நாம் நமது வாழ்க்கையில் நல்ல குணங்களின் உணர்வுடன் சுவாசித்து உடல் நலத்துடன் வாழ்ந்து வந்தாலும் எதிர்பாராது பய குணங்களின் உணர்வையோ, கோப குணங்களின் உணர்வையோ, வேதனையின் குணங்களின் உணர்வையோ, ஆத்திர குணங்களின் உணர்வையோ, குரோதமான குணங்களின் உணர்வையோ, சோர்வான குணங்களின் உணர்வையோ, சஞ்சலமான குணங்களின் உணர்வையோ, சந்தர்ப்பவசத்தால் சுவாசிக்க நேர்ந்தால்
1.நல்ல குணங்கள் பலவீனமாகி தசைகளிலும் உடல் உறுப்புகளிலும் நோய்கள் உருப்பெற்று
2.அதில் விளைந்த  நுண் அணுக்கள் உயிரின் ஈர்ப்பிற்குச் சென்று
3.உயிரின் அணைப்பில் உயிராத்மாவாக இயங்குவதும்
4.உயிராத்மா வளர்ச்சி குன்றி உடலை விட்டு உயிராத்மா பிரிந்து செல்கின்றது.
5.இவ்வாறு பிரிந்த உயிராத்மா மறு பிறவியில் மனித உருப் பெறும் தகுதியை இழக்கின்றது.
 
இவ்வாறே, சாதாரண மனிதர்கள் முதல் விஞ்ஞானிகள் வரை சுற்றுப்புறச் சூழ்நிலைகளுக்கு ஒப்ப சந்தர்ப்பவசத்தால் கண்களால் காதுகளின் புலனறிவால் ஈர்க்கப்பட்ட, கோபம், குரோதம், ஆத்திரம், அதீத பயம் போன்ற குணங்களின் உணர்வலைகளைச் சுவாசித்து உடல்களில் பதிவாகி நோய்கள் உருப்பெறுகிறது. அதை இன்றைய மருத்துவம் குணப்படுத்துகிறது.
 
ஆனால் நோய்களினால் உடலில் விளைந்த நுண் அணுக்கள் உயிரின் ஈர்ப்பிற்குச் சென்று
1.உயிரின் அணைப்பில் உயிராத்மாவாக இயங்கிக் கொண்டிருக்கும்  
2.அந்த உணர்வுகளின் அணுசிசுக்களைமாற்ற விஞ்ஞானிகளால் முடியாது. 
 
விஞ்ஞான முன்னேற்றத்தினால் மனித உடல்களைப் பாதுகாக்க முடியுமே தவிர அவர்களின் உடலை இயக்கும் உயிராத்மாவை ஒளி நிலையாக மாற்றும் ஆற்றல்…” விஞ்ஞானிகளுக்கு இல்லை.
 
ஞானிகள், மகரிஷிகள்   தங்கள்    தபோவலிமைகளினாலும் தியானங்களினாலும் பேரண்டத்தில் பரவிக் கிடக்கும், பேராற்றல்களின் உண்மை நிலைகளைக் கண்டறிந்து தங்களின் புலனறிவால் அதை உடலில் சேர்த்து வளர்த்துக் கொண்டதால்
1.சந்தர்ப்பவசத்தால் தீய கோப குரோத ஆத்திர குணங்கள் போன்ற உணர்வலைகளைச்
2.தங்களுக்குள் சுவாசிக்க நேர்ந்தால் அவைகளை மாய்த்து விடுகின்றனர்.
 
அவ்வாறு தங்களின் உடல்களில் பேராற்றல் மிக்க உணர்வலைகளை வளர்த்துக் கொண்டு உயிராத்மாவை ஒளியாக மாற்றித் தங்கள் சொல்லாலும், செயலாலும் வெளிப்படுத்திக் கொண்டிருக்கும் பேராற்றல்கள், ஒளியலைகளாகக் காற்றில் பரவிக் கொண்டிருக்கிறது.
 
 உயிராத்மாவை ஒளியாக மாற்றிக் கொண்டு உடலை விட்டு விண்ணைச் சென்றடைந்து இன்றும் சப்தரிஷி மண்டலங்களாகத் திகழ்ந்து கொண்டும் இயங்கிக் கொண்டும் இருக்கின்றார்கள்.
 
அதிலிருந்து வெளிப்பட்டுக் கொண்டிருக்கும் ஒலி, ஒளியின் ஆற்றல் மிக்க உணர்வலைகள் பரவெளியில் பரவிக் கொண்டே இருக்கின்றன.
 
மேற்கூறிய நிலைகளை
1.எம் குருநாதர் காட்சியாகவும் உணர்ச்சிப் பூர்வமாகவும், உணர்த்தி உபதேசித்து அருளியதை யாம் உங்களுக்கு உபதேசிக்கின்றோம்.
2.மெய்ஞானிகள் மகரிஷிகள் உபதேசித்து அருளிய ஒளியான உணர்வுகளையும்
3.சப்தரிஷி மண்டலங்களிலிருந்தும் துருவ நட்சத்திரத்திலிருந்தும் வரும்  ஒலி ஒளியான ஆற்றல் மிக்க உணர்வுகளையும்
4.நீங்கள் அனைவரும் பெற்று உங்கள் வாழ்க்கையில் நலமும் வளமும் பெற்று
5.உங்கள் உயிராத்மா ஒளி நிலை பெற குருநாதரைப் பிரார்த்திக்கின்றோம்.