
சிந்தித்துச் செயல்படும் அருள் ஞானம்
அழுக்குத் தண்ணீரிலே
நன்னீரை ஊற்றும் பொழுது முதலில் கலங்கலாக இருக்கும். நன்னீர்
அதிகமான பின்
கலக்கத்தின் தன்மை சிறிது தெளியும்.
இதைப் போன்று எத்தனையோ உணர்வுகள் உங்கள் வாழ்க்கையில், அழுக்கு உணர்வாக இருப்பினும் அதிலே அருள் ஞான உணர்வை இணைக்கும் போது உங்களுக்குள் மனம் தெளியும் நிலை வருகின்றது.
அதனால்தான் யாம் உபதேசம் செய்யும்
நேரத்தைக் கொஞ்சம் அதிகமாக எடுத்துக் கொள்கின்றோம்.
யாம் சொல்வதெல்லாம்…
1.துருவ நட்சத்திரத்தின் சக்தியை
ஒவ்வொரு அணுக்களிலும் இணையச் செய்து
2.உங்கள் நினைவாற்றலை ஒவ்வொரு உணர்வுகளும் நமக்குள் எப்படி இயங்குகின்றது…? என்று அறியச் செய்ய
3.அந்த நினைவுடன் அருள்
ஞானியின் உணர்வைக் கலக்கச் செய்து அந்த ஆற்றலைப் பெறச் செய்கின்றேன்.
உங்களுடைய நல்ல சிந்தனையை அடக்கச் செய்யும் நிலைகளிலிருந்து அதனை அடக்கும் அருள் ஞானியின் உணர்வை உங்களுக்குள் பெருக்கும் சூழ்நிலையை உருவாக்கும் நேரம் இது (துருவ தியான உபதேசம்).
உங்களுடைய அழுத்தத்தின்
நிலைகளை (எண்ண உணர்வுகளை)
அளவுகோலாக வைத்து ஒவ்வொரு உணர்வுகளிலும்…
வாழ்க்கையில் எதிர்நிலை (தீமைகள்) வருகின்றதென்றால் அந்தக் காலத்தை அளக்கும்.
1.அதற்கு என்ன செய்ய வேண்டும்…? என்ற சிந்தனை வரும்
2.பருவம் வரும் பொழுது, சொல்வோம்
என்று விலகிச் செல்லும்… காலத்தை விரயமாக்காது.
நாம் உயர்ந்த தத்துவத்தை
வைத்திருக்கிறோமென்று அவசரமாகப் போகிறவரிடம் சொன்னால் சரி…சரி…! என்பார்கள். ஆனால்
ஏற்றுக் கொள்ளும் தன்மை இல்லாது போய்விடும்.
இதுவெல்லாம் உங்களுக்குள் அனுபவரீதியில் கொடுப்பதற்காகத் தான் யாம் (ஞானகுரு) எதை எடுத்தோம்…? எப்படிச் செய்தோம்…?
எதனுடைய உணர்வுகள்…? என்று காட்டியது.
நீங்கள் பிறருக்கு எவ்வழியில்
சொல்ல
வேண்டும்…?
எமது உபதேசங்களைக்
கேட்ட நீங்கள் ஒவ்வொரு கால நேரத்தையும் யாம் உபதேசித்த வழியில் பயன்படுத்துதல் வேண்டும்.
ஒரு கம்ப்யூட்டரில் எலெக்ட்ரானிக் என்ற அழுத்தத்தின் தன்மை கொண்டு வரப்படும் பொழுது… கால நேரம் வரும் பொழுது அந்த அழுத்தத்தின்
உணர்வுகள்
தீமையை தள்ளி விட்டுச் செயல்படுகின்றது.
இதைப் போன்றுதான்
1.உங்கள் அழுத்தத்தின் உணர்வுகள்
ஏற்புடையதாக வரும் பொழுது இதனுடைய அழுத்தம் தீமையை நீக்குகின்றது.
2.அதாவது நல்லவைகளை ஏற்றுக் கொள்ள வேண்டுமென்று தீமையை நீக்குகின்றது.
யாம் உபதேசித்துக்
கொண்டிருக்கும் பொழுது…
சீக்கிரம் போக வேண்டும் என்ற உணர்வு வரப்படும் பொழுது அந்தக் காலம் வரும்போது யாம் உபதேசிப்பதைத் தள்ளி விடுகின்றது. அதன் வழி உங்களை இயக்குகின்றது.
ஆகவே தியானம்
மற்றும் உபதேசத்தை நீங்கள் கேட்கக்கூடிய நேரங்களில்
1.கால மணியை, அந்த அழுத்தத்தைப் பதிவு செய்து கொண்டு
2.அதனை நமக்குள் ஏற்புடையதாக மாற்றிக் கொள்ள வேண்டுமென்ற உணர்வைப் பதிவாக்கிக் கொண்டு
உட்கார்ந்தால்,
3.நினைவு வேறு எங்கும்
போகாது,..
இந்த உணர்வின் (அருள் ஞான உணர்வின்)
அழுத்தமாகும்.
சீர்புடையதும் சீர்பற்றதும்
போன்ற உணர்வுகளைத் தனக்குள் மாற்றி ஒவ்வொன்றையும் யாம் சொல்லும் பொழுது தனக்குள் பக்குவப்படும் நிலைகள் வரும்.
அந்தப் பக்குவ நிலை
ஏற்படுத்துவதே
குருவின் தன்மை. எமது அருளாசிகள்.