ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

November 28, 2025

கண்ணன் காட்டும் “திருட்டு வழி…”

கண்ணன் காட்டும் “திருட்டு வழி…”


இன்று மனிதனாக இருக்கும் நாம் நல்ல செழுமையாக இருந்தாலும்… நாம் பிறருடைய துயரைத் துடைக்கக் கேட்டுணர்ந்த துயரமான உணர்வுகள் நமக்குள் வந்தபின் அந்த உணர்வுகள் நல்ல குணங்களுக்குள் இரண்டறக் கலந்து ஓங்கி வளர்ந்து விடுகிறது.
 
அடுத்து… மகிழ்ச்சியாக வைத்திருந்த இந்த உடலின் சாரத்தை அது செயல்படாது தடுத்து உடல் நலிந்து உணர்வுகள் குறைந்து எண்ணங்கள் நலிந்து நம் வாழ்க்கையில் எதனையுமே வலுவான நிலையில் செய்ய முடியாத நிலைகளுக்குக் கொண்டு செல்கின்றது.
 
இதிலிருந்து நம்மைக் காத்திடஇத்தகைய நஞ்சிலிருந்து நாம் மீள்வதற்கு நமது குரு காட்டிய அருள் வழியில் ஆத்ம சுத்தி செய்ய வேண்டும்.
1.அந்த ஆற்றலைப் பெறச் செய்வதற்குத்தான்
2.அருள் ஞானிகள் கண்டுணர்ந்த உணர்வின் சாரத்தை உங்களைக், காத்திடும் எண்ண உணர்வுகளுக்குள் இணைத்து
3.அதை வலுப்பெறச் செய்யும் நிலையாக இதை உபதேசிக்கின்றேன்.
 
வியாசர் காட்டிய அருள் வழியில் கண்கள் கொண்டு தை நாம் நினைவு கூர்ந்து எண்ணும்போது
1.அந்த வலுவின் தன்மை நீங்கள் பெற முடியும்
2.அருள் ஞானிகளின் உணர்வுகளைப் பெற முடியும்
3.உங்களை அறியாது வந்த தீமையை ஒடுக்க முடியும்
4.அருள் ஞானிகளின் உணர்வுகளை உங்களுக்குள் வளர்க்க முடியும்.
மற்றவர்களுடைய துயரைக் கேட்டறிந்த நிலைகள் உங்கள் நல்ல குணங்களை நலியச் செய்தது போன்றுமகரிஷிகளின் அருள் சக்தி உங்களுக்குள் புகுந்து அந்த நலிந்ததை மீட்டு நல்லுணர்வாக வளர்த்து,க் கொள்ள முடியும்.
 
உயிருடன் ஒன்றிடும் உணர்வனைத்தையும் ஒளியாக மாற்றிய, அருள் ஞானிகளின் உணர்வுகள் உங்களுக்குள் கலந்து “நீங்களும் உணர்வை ஒளியாக மாற்றும் திறன் பெற வேண்டும்…” என்ற ஆசையில் அந்த மாமகரிஷி காட்டிய, உணர்வின் சாரத்தை உங்களுக்குள்ளும் தெளிவு பெறச் செய்யும் நிலைக்கே இதை உணர்த்துகின்றேன்.
 
கண்ணன் (நமது கண்கள்) காட்டிய நிலைகள் கொண்டுஅதோ வருகின்றான் நாரதன்  என்று நாம் எண்ணும்போது புற நிலைகள் கொண்டு நமது ஆன்மாவைச் சுத்தப்படுத்துகின்றோம்.
 
அதாவது… கண்ணின் நினைவலைகளை விண்ணை நோக்கிச் செலுத்தி
1.உங்களுக்கு உபதேசித்த உணர்வுகளின் வலுவின் துணை கொண்டு
2.அந்த மகரிஷிகளின் அருள் சக்தி பெற வேண்டும் என்று கண்ணின் நினைவை உயிரோடு ஒன்றப்படும்போது,
3.“உயிரான கண் அகக்கண்…” நம்முடய கண் புறக்கண்
4.புறக்கண்ணால் அகக் கண்ணின் (உயிரின்) நினைவு கொண்டு
5.அந்த ஆற்றல் மிக்க சக்தியை நாங்கள் பெற வேண்டும் என்று நாம் ஏங்கும் பொழுது
6.”சிவன் நெற்றிக்கண்ணைத் திறந்தால் சுட்டுப் பொசுக்கி விடுவான்…!  என்பதாகும்.
 
நம் உடலான சிவத்திற்குள் உயிர் அகக்கண்ணாக இயக்கும் நிலையில் புறக்கண்ணின் நினைவு கொண்டு நினைவினை உயிருடன் ஒன்றிஅந்த மகரிஷிகளின் அருள் சக்தி பெற வேண்டும்என்று ஏங்கி அது எங்கள் உடல் முழுவதும் படர்ந்து எங்கள் உடலிலுள்ள ஜீவ அணுக்கள் ஜீவாத்மாக்கள் பெற வேண்டும் என்று
1.உள் நினைவில் கண்களை மூடி
2.நம் உடலுக்குள் இருக்கும் அனைத்து அணுக்களிலும் படரச் செய்வதேகண்ணன் காட்டிய திருட்டு வழி…!”
 
கண்ணன் காட்டிய நிலைகள் கொண்டு மகரிஷிகளின் உணர்வுகளை உள் செலுத்தும்போது அந்த ஞானிகளின் உணர்வுகள் பிராணாயாமம்” அதாவது அந்த ஞானிகளின் உணர்வுகளை நமக்குள் ஜீவன் பெறச் செய்து வளர்க்கச் செய்கிறோம்.
 
நாம் ஒரு பொருளைப் பாத்திரத்தில் போட்டு வேக வைக்கும் பொழுது அதனின் சத்து கொதித்து அதனின் மணம் வெளி வருவதைப் போன்று
1.அந்த மணத்தின் வீரியத் தன்மை (ஞானிகளின் அருள் சக்தி) உள் நின்று வெளி வருவது
2.நாம் வேதனைப்பட்ட உணர்வின் தன்மையை து பிளக்கின்றது. 
 
நாம் பிறருடைய துயரமான உணர்வுகளை எண்ணி நம் உடலுக்குள் சேர்க்கும் முன் அது நம் ஆன்மாவாக (உடலைச் சுற்றி) மணமாக மாறுகின்றது.
 
அது மடி மேல் ஆன்மாவாக இருந்தாலும் கண்ணின் நினைவை உயிருடன் ஒன்றி அந்த மகரிஷிகளின் அருள் சக்தி நாங்கள் பெற வேண்டும் அது எங்கள் உடல் முழுவதும் படர்ந்து, எங்கள் உடலில் உள்ள ஜீவ அணுக்கள் ஜீவாத்மாக்கள் பெற வேண்டும் என்று கண்ணான கண்ணின் நினைவுகளை உள் செலுத்தப்படும் போதுநாம் எண்ணிய உணர்வுகள் பிராணாயாமம்
1.அது ஜீவன் பெற்று அந்த மணத்தின் வீரியத் தன்மை உள் நின்று வெளி வருவது…
2.மடி மீது (நெஞ்சுக்கு முன் இருக்கும்) சுழன்று கொண்டுள்ள துயரப்பட்ட உணர்வினை இது பிளக்கின்றது.
 
நாராயணன் என்பது சூரியன். நரநாராயணன் என்பது உயிர். நமக்குள் பேரண்டத்தின் பெரு நிலைகள் இருந்தாலும் உணர்வின் எண்ணங்களாக இயக்கி நம்மை ஆண்டு கொண்டிருப்பது நரநாராயணன்.
 
நமக்குள் இருக்கும் சர்வத்தையும் விண்ணில் பிறந்த நிலையும் ஜீவ அணுக்களாக உருவாக்கி நம்மை உருப்பெறச் செய்து அதனின் உணர்வின் நிலையாக நம்மை இயக்கிக் கொண்டிருப்பதும் நரநாராயணான உயிர்,
 
ஆகையினால் தான் உயிரான அவன் வாசல்படி மீது அமர்ந்து மடி மீது அமர்த்தி இரண்யனைப் பிளந்தான் என்று எடுத்துரைக்கப்பட்டது.
 
கண்ணன் காட்டிய நிலைகள் கொண்டு அந்த அருள் மகரிஷிகளின் நிலைகளை நாம் எண்ணும் போது,
1.உயிரான நிலைகள்…” என்று பிரணவமாகி
2.அந்த உணர்வின் சக்தி பிரம்மாவாக உடலுக்குள் அனைத்தையும் இணைத்துச் சிருஷ்டித்து அதனின் ஜீவனாக ஓங்கி வளர்ந்து
3.விண்ணின் வீரிய சத்தாக உள் நின்று வெளிப்படுவது நம் ஆன்மாவிலிருக்கும் தீமையைப் பிளக்கின்றது.
 
அந்த மகா ஞானிகளின் உணர்வை நாம் “நேர்முகமாகச் சுவாசித்து…” உடலுக்குள் செலுத்தி… நமக்குள் அதை ஓங்கி வளர்த்து வரும் தீமைகளைப் பிளப்பது தான் “நரசிம்ம அவதாரம்…” என்பது.