ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

November 11, 2025

உடலை விட்டுப் பிரிவதற்கு முன் “ஈஸ்வரபட்டர் எனக்குச் சொன்ன உபாயங்கள்”

உடலை விட்டுப் பிரிவதற்கு முன் “ஈஸ்வரபட்டர் எனக்குச் சொன்ன உபாயங்கள்”


உடலை விட்டு குருநாதர் வெளியிலே செல்லும் பொழுது பல உண்மைகளை எமக்குத் தெளிவாக்கினார்.
 
1.என்னை (ஈஸ்வரபட்டர்) எத்தனையோ பேர் அணுகினார்கள்.
2.பல அற்புதங்களை நான் காட்டினேன். அதற்கு மயங்கி இருந்தோர் பலர் உண்டு..
2.எனக்குச் சொத்து வேண்டும் சுகம் வேண்டும் உடல் நலம் வேண்டும் என்று தான் கேட்டார்கள்.
 
வருவோர் அனைவரும் எனக்கு அந்த அருள் வேண்டும் இந்த அருள் வேண்டும் என்று தான் கேட்டார்களே தவிர
1.மெய்ப்பொருள் காணும் திறன் வேண்டும்… உலகம் நலமாக இருக்க வேண்டும்
2.என் பார்வையில் குடும்பங்கள் மகிழ்ச்சியாக இருக்கும் அந்தச் சக்தி நாங்கள் பெற வேண்டும்
3.என் பேச்சால் மூச்சால் நான் பார்ப்போர் குடும்பங்கள் நலம் பெற வேண்டும் என்று
4.இதை எண்ணிக் கேட்பார் எவரும் என்னிடம் வரவில்லை.
 
இப்படி தனக்குத்தான் என்னிடம் கேட்டார்கள் தவிர எல்லோரும் நலம் பெற வேண்டும் என்ற கேள்வியே அவர்களிடம் எழவில்லை.
 
இந்த உலகில் உள்ள எல்லோரும் அந்த அருள் ஞான சக்தி பெற வேண்டும் என்று நான் எண்ணினேன் அதைப் பெற்றேன் அந்த உணர்வின் தன்மை கொண்டு இந்த உடலை விட்டுச் செல்லப் போகின்றேன்.
 
ஆனால்
1.நீ எதை எண்ணப் போகின்றாய்…? எதை நீ பெறப் போகின்றாய்…?
2.நீ பெற வேண்டிய தகுதிகள் எது…? நீ அதை எப்படிப் பெறுவது…?
3.உடலை விட்டுச் சென்ற பின் என்னுடன் இணைந்து நீ வர வேண்டும் என்றால் நீ எதை எண்ண வேண்டும்…? என்று
4.வைகுண்ட ஏகாதசி வருவதற்கு ஒரு மாதம் முன்பு என்னிடம் இந்த கேள்விகளைத் தான் குருநாதர் எழுப்பினார்.
 
அதைத் தெளிவாக்கவும் செய்தார்.
 
துருவ மகரிஷியின் அருள் சக்தி என் குருநாதர் பெற வேண்டும் அவர் பேரின்பப் பெருவாழ்வு வாழ வேண்டும் அழியா ஒளிச் சரீரம் பெற வேண்டும் அருள் வழியில் அவர் செல்ல வேண்டும் அவர் பிறவியில்லா நிலை அடைய வேண்டும் அந்த அருள் ஒளி என் குரு பெற வேண்டும் என்று இப்படி நீ எண்ணினால் அந்த குரு உனக்குள் ஒளியின் சரீரமாக ஆகின்றார்…!”
 
உங்களுக்குச் சொல்வது அர்த்தம் ஆகிறது அல்லவா…! இதை நீங்கள் தெளிவாக்கிக் கொள்ளுங்கள்…!
 
1.நான் சொன்ன முறைப்படி எண்ணும் பொழுது தான்
2.”நீ எதை எண்ணுகின்றாயா நீ துவாகின்றாய்…” என்று இப்படித்தான் சொன்னார் குருநாதர்.
 
உடலை விட்டுப் பிரிவதற்கு முன் அதற்குச் சிலபாயங்களைச் சொல்லி துருவ நட்சத்திரத்தின் சக்திகளைப் பெறும் நிலையும் சப்தரிஷிகளின் அருள் சக்தியைப் பெறும் நிலையும்… அதைப் பெற்று குருவை எப்படி விண் செலுத்த வேண்டும்…? எதை நீ குருவாக்க வேண்டும்…? என்ற பேருண்மைகளை எல்லாம் ர்த்தி விட்டுத் தான் வைகுண்ட ஏகாதசி என்று ஈஸ்வரபட்டரின் ஆன்மா பிரிகின்றது…”
 
உடலை விட்டுச் சென்ற பின் குருவின் நினைவும் இங்கேந்த உணர்வின் விளைவும்
1.சப்தரிஷி மண்டல உணர்வையும் துருவ நட்சத்திரத்தின் உணர்வையும் கொண்டு வரப்படும் பொழுது
2.அதன் தொடர் கொண்ட அந்த அருள் மகரிஷி அதன் வழியில் அங்கே சென்று ஒளியின் சரீரமாப் பெறுகின்றார்.
 
ஆக அவர் சென்ற அந்த வழியில் அந்த வரிசை ஒன்றை வைத்துத் தான் ஒன்று செல்ல முடியும்.
1.அந்த வழியை நீ பெறு… மற்றவருக்கு வழிகாட்டும் பொழுதும் இந்த நிலையை உணர்த்து.
2.அதை அவர்கள் பெற வேண்டும் என்று ஏங்கு அந்தத் தகுதியை அவர்களையும் பெறும்படி செய்.
3.நீ அதன் வழி செல்லும் பொழுது அடுத்தவர்கள் எண்ணும் பொழுது நீயும் எளிதில் விண் செல்கின்றாய்,
4.உன் சொல்லைக் கேட்பவர்களும் அந்த வழியினைப் பெறுகின்றார்கள்.
 
ஆகையினால் இதனை நீ வழிப்படுத்து…! என்று விண் செல்லக்கூடிய மார்க்கங்களை ஈஸ்வரபட்டர் எமக்குத் தெளிவாக உணர்த்தி மற்றவர்களுக்கும் இதைக் காட்டும்படி சொன்னார்.