
குறைகளை வளர்த்தால் நமக்கு நாமே எதிரி ஆகின்றோம்
1.பிறரிடம் குறை காணும்
உணர்வுகளானது அதே குறைகளை நம்மிடத்திலும்
உருவாக்கிவிடும்.
2.இந்த வகையில் நமக்கு எதிரி வேறு எங்கும் இல்லை… நாமேதான்
நமக்கு எதிரி.
எல்லோரும் நல் நிலை பெற வேண்டும்
என்ற உணர்வுகளை நம்மிடத்தில் வளர்க்கும் பொழுது நம்மிடத்திலும்,
நம்மைச்
சார்ந்தவர்களிடத்திலும் நல் உணர்வுகள் விளைந்து நம்மையும் நம்மைச் சார்ந்தவரையும் உயர்ந்த நிலை பெறச்
செய்யும்.
நாம் யாரிடமெல்லாம்
பழகினோமோ அவர்கள் நம்மிடம் பகைமையாகப்
பேசியிருந்தாலும் சரி அல்லது நல்ல நிலைகளில் பழகியிருந்தாலும் சரி அவர்களை எல்லாம் காலை துருவ தியானத்தின் பொழுது நாம் நமது நினைவிற்குக் கொண்டு வர வேண்டும்.
கொண்டு வந்து
1.அவர்களது
குடும்பங்கள் நலம் பெற வேண்டும்
2.அவர்களை அறியாது சேர்ந்த இருள்
நீங்க வேண்டும் என்று நம் உயிரான ஈசனிடம் வேண்டி ஏங்கித் தியானிக்க வேண்டும்.
பின் அவர்களது குடும்பங்களில் கணவனும், மனைவியும் ஒன்று சேர்ந்து
வாழ்ந்திடும் நிலை பெற வேண்டும். வசிஷ்டரும் அருந்ததியும்
போன்று அவர்கள் வாழ்ந்திட வேண்டும் நளாயினி போன்று ஒருவரை ஒருவர் மதித்து
வாழ்ந்திட வேண்டும் சாவித்திரி போன்று, இரு உணர்வுகளும் ஒன்றிடல் வேண்டும் என்று இது போன்ற உணர்வுகளைக் கலந்தே நமது
உணர்வுகளை வெளிப்படுத்த வேண்டும்.
அதிகாலையில் இவ்வாறு அனைவரும் ஏகோபித்த நிலையில் செயல்படுத்தும் பொழுது
1.அனைவரது உடல்களிலும், பகைமை உணர்வுகளுக்கு இடம் இல்லாது அவை தடைப்பட்டுவிடும்.
2.இந்தப் பரமாத்மாவில் (காற்று மண்டலத்தில்)
மகிழ்ந்து வாழும் அருள் உணர்வுகள் பெருகும்.
ஒரு புழு ஒரு விஷச் செடியைத் தனது உணவாக உட்கொண்டால் அதனின் உணர்வின் எண்ணங்கள் புழுவினுள் உருவாகிக்
கொண்டிருக்கும்.
அந்தப் புழுவை ஒரு குருவி உணவாக உட்கொண்டிருந்தால் அதை உணவாக உட்கொள்ளும் அந்தக் குணத்தின் தன்மை
கொண்டு
அதை ஜீரணிக்கும் சக்தி அதனிடத்தில் இருக்கும்.
ஆனால் அதே புழுவின் உயிர் இந்த குருவியின் தன்மைக்கு
வந்திருக்கும். இதைப் போன்று பல கலவைகள் கலந்தே நாம் வந்துள்ளோம்.
ஒன்றைக்
கொல்கிறது… ஒன்றை வளர்க்கின்றது.
ஒன்றுக்கு அது விஷத்தன்மையாக இருந்தாலும் விஷத்தை விஷத்தாலே தனக்குள் உணவாக எடுத்து, உட்கொள்கின்றது.
விஷச் செடியில் புழுக்கள்
உருவாகின்றது,
அதைக் குருவிகள் கொத்திச்
சாப்பிடுகின்றன. புழுவின் உயிரான்மா குருவியின் உடலுக்குள் சென்று குருவியின் ரூபத்தை அடைகின்றது.
ஆனால் அந்த உணர்வின் தன்மை விஷத்தின் தன்மையை ஒடுக்கும் அணுவாக
வருகின்றது பரிணாம வளர்ச்சியில்.
இன்று பிறிதொருவரிடம் எனக்குத் தொடர்பு இல்லை என்று ஒருவரும் இருக்க முடியாது.
1.யாரும் பிரிந்து தனியாக இல்லை.
2.ஒருவன் உங்களைச் சபித்து அதை உங்களிடம் பதிவாக்கி
விட்டான் என்றால்
அவனிடமிருந்து நீங்கள் விலக முடியாது.
3.நீங்கள் பிறிதொருவரைச் சபித்தால்,
நீங்களும் அவரிடம் இருந்து விலக முடியாது.
இதைப் போன்று நாம் ஒருவரோடு ஒருவர்
பேசினாலும்
அவர்களின் உணர்வுகளும் நமக்குள் உண்டு. இந்த உணர்வுகள் உங்களிடத்தில் பதிவாகி உங்களை இணைத்துக் கொண்டிருக்கும். “பாவிப்பயல்… இப்படிச்
செய்து விட்டான்…!” என்று உங்களை அவரிடத்தில் இணைத்துக் கொண்டே இருக்கும்.
நண்பர்களாக இருந்து ஒருவருக்கொருவர் உதவி செய்யும் பொழுதும் இதனின் உணர்வுகள் பதிவாகி இருக்கும். இரண்டு பேரும் இணைந்துதான்
இருக்கிறீர்கள்.
ஆக நன்மையின் நிலை வரும் பொழுது இரண்டு பேருக்குமே
நன்மையாகி விடுகின்றது. இரண்டு பேரும் தீமை என்ற உணர்வை பதிவாக்கப்படும் பொழுதும்
கூட
இரண்டு பேர்களுடைய நிலையும் பிரிந்திருப்பதில்லை.
உங்கள் நண்பரின்
நிலைகளில்
எதை அதிகமாக உங்களில் பதிவாக்கி இருக்கின்றீர்களோ அதன் உணர்வுகள் உங்களிடத்தில் வளர்ந்து கொண்டேயிருக்கும்.
ஆக நாம் யாரையெல்லாம் பார்த்தோமோ பேசினோமோ அவர்களை எல்லாம்
காலை துருவ தியானத்தில் எண்ணி
1.“அவர்கள் அனைவரும் துருவ
நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி பெற வேண்டும்
2.அவர்கள் குடும்பத்தினர்
அனைவரும் நலமாக இருக்க வேண்டும்,
3.அவர்களை அறியாது சேர்ந்த
இருள் நீங்க வேண்டும்
4.மெய்ப் பொருள் காணும் சக்தி அவர்கள் பெற வேண்டும்”
என்று எண்ணி இந்த உணர்வுகளை நமக்குள்
வளர்க்க வேண்டும்.
மேலும் அவர்கள் குடும்பத்தில் கணவனும் மனைவியும் வசிஷ்டர் அருந்ததியும் போன்று இரு மனமும் ஒரு மனமாக ஒன்றுபட்டு வாழ்ந்திட வேண்டும். நளாயினி போன்று ஒருவரை ஒருவர் உயர்வாக மதித்து வாழ்ந்திட வேண்டும். சாவித்திரி போன்று இரு உணர்வுகளும் ஒன்றி வாழ்ந்திடல் வேண்டும்… என்று நாம் எண்ணுதல் வேண்டும்.
அவர்களுடைய குழந்தைகள்
உலக ஞானம் பெற வேண்டும் அவர்களுடைய தொழில்களும் நன்றாக இருக்க
வேண்டும்…”
என்று நம் உயிரான ஈசனிடம் வேண்டி தியானித்து இந்த உணர்வுகளை நமக்குள் வளர்க்க வேண்டும்.
1.“அவர்கள் வளர்ச்சி பெற வேண்டும்” என்ற உணர்வுகள் நமக்குள் விளையும் பொழுது
2.நமக்குள் அந்த நிலைகள்
தானாகவே வளரும் தன்மை பெற்று வளர்ச்சி அடைகின்றது.
நாம் சந்தித்தவர்களின்
உணர்வுகளும்
நண்பர்களின் உணர்வுகளும் நமக்குள் பதிவாகிய நிலையில் “அவர்கள் அனைவரும் துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி பெற வேண்டும்…” என்ற உணர்வுகளை நமக்குள்
வளர்க்கப்படும் பொழுது
1.நம்மிடத்தில் உள்ள தீமை
என்ற உணர்வுகள் மறைந்து விடுகின்றன.
2.அதே சமயத்தில் அவர்களும் அவ்வண்ணமே உயர்ந்த நிலைகளைப்
பெறுகின்றார்கள்.
யாம் உபதேசித்து, உங்களிடம் பதிவாக்கிய,
அருள் வாக்கினை நீங்கள் நினைவுபடுத்தும் பொழுது இந்த உணர்வுகள் உங்களுக்கு நல்வழி காட்டும். அது உங்களில் அஞ்ஞான இருளை அகற்றி மெய்ப்பொருளை அறிந்திடும் நிலையைப் பெறச் செய்யும்.
துருவ நட்சத்திரத்தின் பேரருள் பேரொளி உணர்வுகள் உங்களில்
பெருகித்
தீய உணர்வுகளுக்கு உங்களிடத்தில் இடமில்லாது “உங்களில் எப்பொழுதும் மகிழ்ச்சியான உணர்வுகளும் நல்மனமும் பெருகி வளர்வதற்கு எமது அருளாசிகள்…”