
நாம் இன்று கடைப்பிடிக்கும் சாஸ்திர விதிகள் எப்படி வந்தது…?
மதங்களின் அடிப்படையில்
எடுத்துக் கொண்டால்… ஒவ்வொருவரும் எதை அடிப்படையாக வைத்து
1.இதுதான் கடவுள் என்ற
நிலைகளில் சட்டங்களை வகுத்துப் பதிவு
செய்து கொள்ளும் பொழுது
2.அந்த எண்ணத்திற்கு
மாறி நடந்தால் “அது தெய்வ நிந்தனை…”
என்ற நிலைகளில் கொண்டு போய் விடுகின்றார்கள்.
மதங்கள் தனக்குள் ஒழுக்கத்தை ஏற்படுத்துவதற்குத்
தான் இந்த நிலைகளைச் செய்தார்கள். அன்றைய அரசர்கள் தான் வாழ்வதற்காகச்
செய்து கொண்ட முறைகள் தான் இவை.
அரச காலங்களிலே ஒவ்வொரு கூட்டமும் பிரிவாக அது வளரும். இன்று போக்குவரத்து வசதிகள் மிகவும் சுலபமாக இருக்கின்றது. ஆனால் அன்று இந்த வசதிகள் கிடையாது.
அரசன் “ஒரு குலதெய்வத்தை ஏற்படுத்தி” அதன்படி
சட்ட நியதிகளை ஏற்படுத்தி இருந்தால் அரசனுக்குக் கீழ் மக்கள் கட்டுப்பட்டு அதை ஏற்றுக் கொள்கின்றோம்.
சந்தர்ப்பத்தால் அரசர்களுக்குள் போர் முறை வரும் பொழுது அங்கே போர்களுக்கு நம்மை அழைத்துச்
செல்கின்றார்கள்.
போர் வெகு தொலைவில் நடக்கின்றது என்று வைத்துக் கொள்வோம். அங்கே
சென்ற பின் அதிலே “நமது
இனம் நமது குலம்…” என்று காட்டிக்
கொள்வதற்காக உள் பிரிவுகளில் சிலதுகளை ஏற்படுத்திக் கொள்வார்கள்… ஒரு சாஸ்திர விதி…!
முதலில் போருக்குச் செல்லும் போது குடும்பத்தில் தன் குழந்தை சிறிதாக இருக்கின்றது. ஆனால் வெகு நாட்கள் ஆனபின் தனது பையன்
தானா என்று நமக்கே அடையாளம் தெரியாமல்
போய்விடும். அப்பொழுது அதற்கு வேண்டிய
நிலைகளைச் சொல்ல வேண்டி வரும்.
போர் நடக்கும் இடங்களில் அதைத் தெரிந்து கொள்ள முடியாது.
1.நம் இனம் நம் குலம் என்று அதைத் தெரிந்து கொள்வதற்காக வேண்டி உணவாக
உட்கொள்ளும் உணவுகளில்
2.காய்கறிகளில்
ஏதாவது ஒன்றை… மறைமுகமாக இது நமக்கு ஆகாது என்று ஒதுக்கி வைத்து
விடுவார்கள்.
3.அந்தக் காயைச் சாப்பிட்டால்
வயிற்றுக்கு அஜீரணமாகும்… வயிற்றால்
போய்விடும் என்று சொல்லிவிடுவார்கள்.
4.அதனால் அதைச் சாப்பிட மாட்டார்கள்…. ஒதுக்கி விடுவார்கள்.
இது மாதிரிப்
பழக்கங்களை ஏற்படுத்திவிடுகின்றார்கள்.
வெகு தூரத்துக்குச் சென்று போரில் ஈடுபடும் போது அது முடிந்து
தன் நாடு திரும்புவதற்குக் காலமாகின்றது. தன் குழந்தைகள் வளர்ச்சி ஆகிவிடுகின்றது.
நாடு திரும்பும் பொழுது தன் இனத்தைக் கண்டு
கொள்ள வேண்டும் என்பதற்காகத் தான் அத்தகைய சாஸ்திர விதியை
உருவாக்கினார்கள்.
உதாரணமாக வெண்டைக்காயை ஒதுக்கி வைக்கின்றார்கள் என்று வைத்துக் கொள்வோம்.
எங்கேயாவது விருந்து வைக்கப்படும் பொழுது அந்த விருந்திலே இந்தக் காயை அவர்கள் ஒதுக்குவார்கள்.
அந்தக் காயை ஒதுக்கும் போது தான்… ஓஹோ…! நம் இனம் என்று தெரிந்து துப்பு விசாரிப்பார்கள்.
அவர்களுக்குள் சாஸ்திர விதிப்படி என்னென்ன செய்வீர்கள்…? என்று கேட்பார்கள்.
நாங்கள் இன்னென்ன முறைப்படி செய்வோம் என்று சொன்ன பின் அதைக்
கேட்டுத் தெரிந்து கொண்ட பின் “இது நம் ஆள்…” என்று கண்டு கொள்வார்கள்.
இதற்காக வேண்டித்தான்
சாஸ்திர விதிகளை அன்றைய அரசர்கள் உருவாக்கினார்கள்.
அதாவது அரசனுடைய
ஆணைப்படி குலதெய்வம் என்று ஒன்றை அடிப்படையாக வைத்து… அந்த
வழிகளில் சென்று ஒருவருக்கொருவர் இனம் கொண்டுள்ளக்
கூடிய நிலைக்கு வைத்தார்கள்.
1.என் குலத்திற்கு இன்ன
காய்… கத்திரிக்காயோ வெண்டைக்காயோ ஆகாது
2.எங்கள்
குலதெய்வத்திற்கு இது ஆகாது என்றும் சொல்லிவிடுவார்கள்.
ஏனென்றால் அப்படி இந்தக் காய்கள் ஆகாது என்று தெரியப்படும் பொழுது தன் இனம்
என்பதைக் கண்டு கொள்வதற்காகச் சில
வித்தியாசமான நிலைகளை செய்து உருவாக்கி வைத்துக் கொள்கின்றார்கள்.
1.அன்றைய அரசர்கள்
வகுத்த வழிப்படித் தான் இன்றும் நாம்
சாஸ்திர விதிகளைக் கடைப்பிடித்துக் கொண்டுள்ளோம்.
2.ஞானிகள் காட்டிய
வழியில் நாம் செல்லவில்லை.
ஆனால் இந்த உண்மைகளை எல்லாம் குருநாதர் உணர்த்தியதால் உங்களுக்கும் இதை இப்பொழுது தெரியப்படுத்துகின்றோம்.