ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

November 17, 2025

சர்க்கரை நோய் அதிகளவில் வரக் காரணம் என்ன…?

சர்க்கரை நோய் அதிகளவில் வரக் காரணம் என்ன…?


நாம் ஒரு குழம்பு வைக்கக் காரம், புளிப்பு, துவர்ப்பு, உப்பு என்று பலவிதமான சுவைகளைக் கலந்து தயாரிக்கின்றோம். நாம் குழம்பு வைக்கும் பொழுது எந்தப் பொருளை அதிலே அதிகமாகச் சேர்க்கின்றோமோ அதாவது
1.மிளகாய் அதிகமாக இருந்தால் மிளகாயின் காரத்தைக் காட்டும்.
2.உப்பின் தன்மை அதிகமாகிவிட்டால் உப்பின் குணத்தைக் காட்டும்.
3.அதற்குள் மற்றதையெல்லாம் சுவையற்றதாக்கி இந்தச் சுவையே முன்னிலையில் நிற்கும்.
 
இதைப் போல பிறர் செய்யும் “தவறான உணர்வுகளை நாம் அடிக்கடி பார்க்க நேர்ந்தால்…” அந்த உணர்வின் தன்மை நம் ஆன்மாவில் கலந்துவிடும்.
 
ஆன்மாவில் கலந்தவுடன்… அன்றைய தினம் அவரைக் கோபமாகப் பேசுகின்றோம் என்று வைத்துக் கொள்வோம். அவரைப் பார்க்கும் பொழுதெல்லாம் கோப உணர்ச்சிகளைத் தூண்டுகின்றது.
 
1.அப்பொழுது ஆன்மாவிலிருக்கும் மற்ற குணங்களுடன் கலந்து “நம் உயிருடன் இணைக்கப்படும் பொழுது…”
2.நம் உடலில் உள்ள கணங்களுக்கு (குணங்களுக்கு) அதிபதியாகிச் செயல்படுகின்றது.
3.மற்ற உணர்வின் மணங்களை இது ஒடுக்கி விடுகின்றது.
 
பின்னர் அதனின் உணர்வு செயல்பட்டாலும், அந்த உணர்வுகள் அனைத்தும் நம் உடலுக்குள் இருக்கும் கார குணம், கசப்பான குணம், சங்கடமான குணம், “அதிலே கார குணம் அதிகமாகவே எடுத்துக் கொள்ளும்…”
 
குழம்பில் காரம் அதிகமானால் அனைத்துச் சுவையையும் அது கெடுத்துக் கார உணர்ச்சியையே தூண்டுகின்றது. பிறர் செய்யும் தவறின் நிலைகளைப் பார்க்கும் பொழுது நம் நல்ல உணர்வுக்குள் கோபம் ஏற்பட்டால் நமக்குள் கார உணர்ச்சிகளைத் தூண்டி நம்மிடம் நல்ல குணங்களை இயங்கவிடாது செய்து விடுகின்றது.
 
அவ்வாறு, செயல்படுத்தும் கார நிலை நம் உடலுக்குள் சிறுகச் சிறுகச் சேர்ந்து, மற்ற குணங்களைச் செயலற்றதாக்கி இந்த உணர்வின் தன்மையை அதிகமாகச் சுவாசிக்கின்றோம்.
 
1.சாப்பிடும் போது நம் ஆகாரத்தில் அந்தக் காரமான சுவையே கேட்கும்.
2.காரம் அதிகமானால்தான் ருசியே இருக்கும்.
3.கோபமாகப் பேசும் குணம் கொண்டவர்களுக்கு “அடிக்கடி கோபமாகப் பேசினால்தான்…” ரசிப்பே இருக்கும்.
 
அந்தக் காரமான உணர்ச்சிகள் நமக்குள் இணைந்து யாராவது “சுருக்…” என்று சொன்னால் போதும், கார உணர்ச்சிகள் அங்கே விளைந்து, உடனே சண்டை வரும்.
1.அந்த உணர்வின் தன்மை கொண்டு சண்டை போடுவதே ரசனையாகும்.
2.ஏன் சண்டை போடுகிறோம்…? என்பதே அவர்களுக்குத் தெரியாது.
 
உணர்வின் இயக்கமாக அது இயக்குகின்றது… தவறு செய்யவில்லை.
 
சண்டை போடுபவர்களை வேடிக்கைப் பார்த்துப் பார்த்து… கார உணர்ச்சிகள் நமக்குள் ஏற்பட்டு ஆன்மாவில் அது பெருகி அதனின் உணர்வை அது வளர்க்கத் தொடங்கிவிடும்.
 
இவ்வாறு அது செய்தாலும் அந்த உணர்ச்சிகள் உடல் முழுவதும் படர்ந்து, கார உணர்வுகள் அதிகமாகப் பெருக்கமாகும் பொழுது இரத்த அழுத்த நோய் வருகின்றது.
 
காரத்தைச் சாப்பிட்டால்… நாம் எப்படி “ஆ…” என்று அலறுகிறோமோ இதைப் போல இந்த உணர்வின் அழுத்த நிலைகள் நமது உடலில் வேகமாக ஓடும் கவன நரம்புகளில் தாக்கப்படும் பொழுது “கும்…” என்று சிரசில் நரம்பு புடைத்துவிடும்.
 
அவர் எண்ணிய நிலைகள் சிறிது மாறினால் போதும். உடனே கோபம் தன்னை அறியாமல் வரும். உடல் முழுவதற்கும் நடுக்கமாகும். கார உணர்ச்சிகள் வரும் பொழுது இரத்தத்தை இருதய வால்வுகள் இழுக்கப்படும் பொழுது அதனால் நெஞ்சு எரிச்சலாகும்.
1.எதையெடுத்தாலும் நெஞ்சு எரிச்சலாகும்.
2.அதே சமயத்தில் ஈரல் எரிச்சலும் வந்துவிடும்.
3.எரிச்சல்கள் அங்கே சென்றவுடனே எதையெடுத்தாலும் எரிச்சல்… பார்வையிலும் எரிச்சலான நிலைகளாகும்.
 
நாம் தவறு செய்யவில்லை. நாம் தவறு செய்பவரைப் பார்க்கும் பொழுது அந்த உணர்வின் தன்மை நம்மை அது போல ஆக்கிவிடுகின்றது. கடைசியில் இரத்தக் கொதிப்பாக மாறுகின்றது.
 
கோப உணர்வுகள் வரப்படும் பொழுது மற்றவர் மகிழ்ச்சியாக இருக்கின்றார்… மகிழ்ச்சியான செயல்களைச் செய்கின்றார் என்றால் அதைக் கண்டால் “இந்தக் கோபக்காரருக்குப் பிடிக்காது…”
 
மகிழ்ச்சியின் உணர்வு தூண்டினால் இனிமை கலந்த சொல்லின் நாதம் பிறக்கும். உதாரணமாக, நாம் இனிப்பைச் சாப்பிட்டவுடன், அந்த உணர்வின் தன்மையால் ரசித்துத் தலையை அசைக்கின்றோம்.
 
ஆனால்… காரத்திற்குள் இனிப்பைப் போட்டால் அதனின் சுவையே தனித்து இருக்கும்.
1.நமது உடலின் இனிப்பின் சொல்லை அறியச் செய்யும் உணர்வுகள் “இதற்கும்… அதற்கும்…” ஒத்து வராத நிலைகளில் பிரிக்கும்.
2.இது இரண்டும் நெகடிவ் பாசிடிவ் என்ற நிலைகள் கொண்டு இயக்கப்படும் பொழுது
3.நமது இருதய வால்வுகள் நமது உடலில் காரத்தை ஜீரணிக்க முடியாத நிலையில் “கொதிப்பும்…”
4.சுவையான நிலைகளில் பேச முடியாமல், சர்க்கரைச் சத்தும் வந்துவிடும்.
5.உடல் உறுப்பின் தன்மை செயல்கள் ஒடுங்கும் பொழுது இந்தக் காரத்துடன் கலக்காததனால் சர்க்கரைச் சத்து அதிகமாகின்றது.
6.அதனால், இருதயத்தின் துடிப்பு குறைகின்றது.
 
ஏனென்றால் இது இரண்டும் போர் செய்யப்படும்போது, துடிப்பின் இயக்கங்கள் உறுப்புக்கள் சரியாக இயங்காத நிலையும் இரத்த வால்வுகள் சரியாக இயங்காத நிலையில் “தளர்ச்சியடைகின்றது…”
 
இவ்வாறு சர்க்கரையின் சத்து அதிகமானபின் இதே இனிப்பின் தன்மை கொண்டு உடலுக்குள் என்ன ஆகிறது…?
 
செடிகளில் எப்படிச் சில பொருள்கள் சேர்ந்து, உயிரணுக்கள் உண்டாகின்றதோ இதைப் போல “நாம் எடுத்துக் கொண்ட நெகடிவ், பாசிடிவ் என்ற எதிர் நிலையான உணர்வுகள்…” போர் செய்யப்படும் பொழுது நம் ஆன்மாவில் இதே நிலையாகி உயிரின் துடிப்பு அதிகமாகின்றது. இதனால் காற்றிலிருந்து வரும் தீய உணர்வுகள், உடலில் ஒட்டிக் கொள்கின்றன.
 
1.இரண்டு நிலைகளை எடுத்தவுடனே அந்த அணுவின் தன்மையாக உருவாகி நமது தோலில் அரிப்பு ஏற்படும்.
2.அரிப்பின் தன்மையானவுடன் இரத்தத்துடன் கலந்து இரத்தத்தைச் சுவைத்துச் சாப்பிடும்.
3.பிறகு இரத்தத்திற்குள் சீழாக மாற்றும் நிலை வந்துவிடும்.
4.சீழாக மாறி அதன் மலம் பட்டவுடன் துரித நிலைகள் கொண்டு, இரத்த ஓட்டத்தின் இயக்கம் குறைந்து
5.உடலில் உள்ள உறுப்புக்களையே எடுத்துவிடும் நிலை வருகின்றது.
 
டாக்டரிடம் சென்றாலோ தடுப்பு ஊசி போட்டு, அங்கங்களைக் குறைத்து விடுகின்றனர். சர்க்கரைச் சத்தை எதிர்ப்பதற்காக, வேறு மருந்தின் நிலைகளை அதிகமாக்குகின்றனர். இவ்வாறு செலுத்தினாலும், சிறிது காலமே, நாம் வாழும் நிலை வருகின்றது.
 
எதிர்நிலையான மருந்துகள் கொடுக்கப்படும் பொழுது
1.அடுத்து இரத்தத்தைச் சுத்தப்படுத்தும் சிறுநீரகம் விஷத்தன்மை அடைந்து
2.இரத்தத்தைச் சுத்தப்படுத்தும் தன்மை இழந்து விடுகின்றது.
 
பின் நாம் சிறிது காலம் வாழ்வதற்கு எத்தனையோ முறை ஊசிகளைப் போட்டு நம்மை வேதனைப்படுத்தினாலும்
2.அந்த வேதனையே நமக்குள் விளைந்து, ஊழ்வினை என்ற அடிப்படையிலே நமது ஆன்மாவாக மாற்றி விடுகின்றது.
 
நமக்குள் விளைந்த இந்த உணர்வுகள் இந்த உடலில் எப்படி அங்கங்களைக் குறைக்கச் செய்ததோ அதே போல் உணர்வுகள் அனைத்தும் உயிருடன் ஜீவான்மாவாக விளைந்து, இந்த ஜீவான்மாக்கள் எதனின் நிலை கொண்டு இந்த உடலில் வளருகின்றதோ அதற்குத் தக்கவாறு இதில் விளைந்த உணர்வுகள் “உடலைக் குறைக்கும் நிலை கொண்டு உயிரான்மாவில் சேர்ந்துவிடுகின்றது…”
 
இந்த உடலில் பற்று உள்ள நாம் குழந்தைகளிடமோ, சகோதரர்களிடமோ, மற்றவர்களிடமோ, பாசத்தை அதிகமாக வளர்த்துக் கொண்ட நிலையில்
1.“இவர்களுக்கு இவ்வளவு செல்வத்தைச் சேர்த்தேன்… என் செல்வத்தை அவர்கள் காத்துக் கொள்ள வேண்டுமே…!
2.ஏனென்றால் எனக்கு இப்படித் துன்பம் நேர்ந்துவிட்டது… இனி இந்தப் பணத்தை “நீங்களாவாது ஒழுங்காக வைத்திருங்கள்…!” என்று
3.இந்தச் சொல்லைச் சொல்லும்போது யார் மேல் பற்றுதல் வருகின்றதோ
4.அவருடைய உணர்வு இவருடைய உடலில் எடுத்துச் சேர்த்துக் கொள்ளும்.
 
ஆக… நாம் தவறு செய்யாமலே இத்தகைய உணர்வு வந்து விட்டால் அந்த உணர்வின் தன்மை உடலிலே விளைந்து “நெகடிவ், பாசிடிவ்…” என்ற போர் முறை வரும் பொழுது கலக்க உணர்வுகள் அதிகமாகத் தோன்றி இங்கே உயிரின் இயக்க நிலைகள் அதிகமாக… ஈர்ப்பின் நிலைக்கு அந்தச் சக்தி வரவில்லை என்றால் “அந்த உயிரான்மா உடலை விட்டு வெளியில் சென்றுவிடும்…”
 
நமது உடலுக்குள் எடுத்துக் கொண்ட உணர்வுகள் ஏக்கம் கொண்டு உயிரான்மாவாக விளைந்தபின் இந்த உடலை விட்டு வெளியில் வரும் பொழுது அந்த உடலில் எதை விளைய வைத்ததோ அதைத் தன்னுடன் கவர்ந்து வெளியில் வந்துவிடும்.
 
1.யார் மேல் பற்று வைத்து அந்த மணத்தை இதனுடன் இணைத்துக் கொண்டதோ
2.அவர்களின் ஏக்க உணர்வுடன் ஆன்மா வெளியில் வரும்.
 
யார் மேல் பற்று கொண்டிருந்தார்களோ… அவர்கள் இவர் உடலை விட்டு இந்த ஆன்மா பிரிந்தபின்… அந்த உடலின் மேல் அவர் பற்றாக இருப்பார்.
 
அந்த உடலின் மணம் கொண்டு… இவர் பதிவு செய்த இந்த நிலைகள் கொண்டு “இறந்தவரின் உயிரான்மா அவர் உடலுக்குள் சென்றுவிடும்…” பின் மனிதனல்லாத கீழான உடலாகத்தான் நம் உயிர் உருவாக்கிவிடும்.
 
இதைப் போன்ற நிலைகளை நாம் அறிந்து…
1.ஒவ்வொரு நொடிப் பொழுதும் நமது வாழ்க்கையையே தியானமாக்கி
2.”அந்த்த் துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் நாங்கள் பெற அருள்வாய் ஈஸ்வரா” என்று ஆத்ம சுத்தி செய்து
3.இந்த உடலில் நோய் நீக்கி வேதனை நீக்கி அறியாது வரும் தீமைகளை நீக்கி
4.இப்பிறவியில் “பிறவியில்லா நிலை என்னும் அழியா ஒளிச் சரீரம் பெறுவதே நமது வாழ்க்கையின் அடிப்படை…! என்று
5.கடைப்பிடித்து வாழ்ந்து வரும் அன்பர்கள் அனைவருக்கும் எமது அருளாசிகள்.