ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

June 13, 2024

“நன்மை… தீமை… எல்லாமே…” தெய்வப் படைப்பு தான்…! பிரித்துக் காண முடியாது

“நன்மை… தீமை… எல்லாமே…” தெய்வப் படைப்பு தான்…! பிரித்துக் காண முடியாது

 

1.கடவுள் எல்லாவற்றிலும் உள்ளார்… எல்லாமாகவும் உள்ளார்..!
2.நல்ல சக்தி மட்டும் கடவுள் அல்ல… தீயவையும் கடவுளின் படைப்புதான்.
2.கடவுளின் பிம்பம் நன்மையிலும் தீமையிலும் கலந்தே உள்ளது.

நற்குணம் கொண்ட மனிதனும் கடவுளுக்குச் சொந்தம். தீய குணத்தில் உள்ளவனும் கடவுளின் படைப்பு தான்.
1.இதில் உள்ள உண்மை நிலையை உணர்ந்தால்
2.தெய்வத்தின் சக்தியை மனித ஆன்மாக்கள் உணர்ந்து நடக்க ஏதுவாகும்.

எல்லாப் படைப்பும் தெய்வத்தின் படைப்பே...!

படைக்கப்பட்டவன்...
1.படைப்பின் பொருள் கண்டு மகிழ்ந்து
2.தன் பொருளான தான் படைத்ததன் பலன் தான்
3.தெய்வ சக்தியின் அருள் வளர்ச்சியும்.. நற்குண வளர்ச்சியும்...!
4.சப்தரிஷிகளின் நிலை பெற்றோரின் வளர்ச்சியினால் தன் படைப்பின் பலனைப் பெற்றான் – “படைத்தவன்”

மனிதன் உருவாக்கும் செயல்களில் இருந்து எப்படித் தன் எண்ணத்திற்குகந்த நிலை பெற்றவுடன் மகிழ்ச்சி கொள்கின்றானோ அதைப் போன்ற மகிழ்ச்சிதான் தெய்வ சக்தியின் வளரும் நற்குண வளர்ச்சியும்…!

நன்மை தீமை கொண்டு தெய்வப் படைப்பு இல்லை. எல்லாமே தெய்வப் படைப்புத் தான். பல சுவையும் இயற்கையில் கலந்து தான் வளர்கின்றது. கசப்பின் சுவை இல்லாவிட்டால் இனிப்பை அறிய முடியாது.

மனித வாழ்க்கையில் ஏற்படும் சோதனை நாட்களை கசப்பாக எண்ணி... அக்கசப்பின் நிலையில் விரக்தி பூணும் மனிதனின் சுவாச அலையின் தொடரினால்... அதே சுழற்சியில் இருந்து சலிப்பின் உந்தலினால்.. பல மனித ஆத்மாக்கள் தன் நிலை உணராமல்... இக்கசப்பான நிலையிலிருந்து மீள முடியாத சிக்கலில் சிக்கி...
1.அதன் உணர்வு அலையின் உந்தலில் ஏற்படும் ஆவேச எண்ண நிலையிலிருந்து மீளாத மனிதன்தான்...
2.தீய வழிகளுக்கும் தீய செயலில் நிலைக்கும் தன் நிலை உணராமல் சென்று விடுகின்றான்.

தனக்கு ஏற்படும் இன்னலில் இருந்து கசப்பான வாழ்க்கையை இனிய செயலாக்குவது இம்மனிதனின் எண்ணம் தான்…! என்று உணர்ந்து
1.கசப்பைத் துவர்ப்பாக்கி
2.துவர்ப்பை இனிமையாக்கும் வாழ்க்கைச் செயலுக்குக் கொண்டு வரலாம்.

அதே சுழற்சி ஓட்டத்தில் செல்லும் மனிதன்... மீண்டும் சோதனையான கசப்பான நிலை தன் வாழ்க்கையில் ஏற்பட்டாலும் அதனை இனிமைப்படுத்திடும் வழித் தொடர் அறியத் தன் எண்ணத்தை அவ்வீர்ப்பின் நிலையுடன் தன் உணர்வு பெறுகின்றான்.

1.இனிமையிலிருந்து வருவதல்ல நல் உணர்வு எதுவுமே…! (இது மிகவும் முக்கியமானது)
2.சுவையான மாங்கனி பிஞ்சில் கசப்பாகவும்.. பிறகு வளர வளர
3.துவர்ப்பு புளிப்புமாகி பிறகு தான் முற்றிப் பழுத்து இனிப்பாகின்றது அல்லவா...!

உள்ளிருக்கும் துவர்ப்பான அக்கொட்டையுடன் ஆரம்ப ஈர்ப்புக் குணத்திலுள்ள அமிலப் படிவம் கொட்டையுடன் உள்ள பொழுதும் அத்துவர்ப்பான கொட்டையின் மேல் சுவையான மாங்கனி வளர்கின்றது அல்லவா…!

1.அதைப் போன்று கசப்பான வாழ் நாட்களை இனிமையாக்கப் பழகிடுங்கள்.
2.கசப்பிலிருந்து தான் இனிமை காண முடியும்.

பல சித்தர்களும் சப்தரிஷிகளும் மற்றும் இன்றைய காலங்களில் உள்ள நீங்கள் அறிந்த வளர்ச்சி கொண்ட எந்த மேதைகளையும் அவர்களின் வாழ்க்கையின் ஆரம்பக் காலங்களில் நடந்த உண்மை நிகழ்ச்சியின் உண்மையை ஆராய்ந்தோமானால் “இதன் நிலை புரியும்...!”

அரசனாக இருந்தாலும் மாமேதையாக இருந்தாலும் எந்த ஆண்டவனும் அவர்களுக்கு அந்தச் சக்தி தரவில்லை. அவரவர்கள் எடுக்கும் எண்ணச் சுவாசத்தினால் அவர்கள் அடையும் பெரு நிலை எல்லாம் இறைவனின் படைப்பு ஒன்றே…! இயற்கையின் சக்தியும் அதுவே…!

வளர்ந்த செயலில்தான் அதனதன் அடிப்படைக் குணமெல்லாம் உள்ளன. இக்குணத்தின் வழி பெற்றது தான் ஆண்டவன் கண்ட பொருள் மகசூலான சந்திரனும்.. சூரியனும்... நம் பூமியும்... நாமும்... எல்லாமே…!

1.நன்மை தீமை கொண்டு படைக்காத ஆண்டவன்
2.தன் படைப்பின் பலனான நல்லதுவும் தீயதுவும் சுழன்றுள்ள நிலையில்
3.தன் வளர்ச்சிக்குத் துணையாக நல்லவற்றைக் காண்கின்றான்.

இப்படி இருக்க ஆண்டவன் படைப்பை எப்படிப் பிரித்துக் காண்பது…?