உலக ரீதியில் எடுத்துக் கொண்டால் அன்று
எப்படி பிரிட்டிஷ் ஆட்சி செய்து கொண்டிருக்கும்போது அவன் கடுமையான ஆயுதங்கள்
கொண்டு உலகை அடக்கிவிட வேண்டும்...! என்றும் அவன் எண்ணினான்.
ஆனால் ஒவ்வொரு நாட்டிலும் மக்கள்
கிளர்ந்து எழும்போது அதிலிருந்து அவனால் மீட்க முடியவில்லை. பின் தன் பிடிப்பில்
இருந்து உலகம் அனைத்தையும் விடுவித்தான் பிரிட்டன்.
ஆனால் அதே சமயம் அணு ஆயுதங்களை எல்லாம்
இன்று பெருகிக்கொண்டு ஐக்கிய நாடு சபை என்ற நிலைகள் ஒன்றைத் தன் அடிப்படை திட்டமாக
அமைத்துக் கொண்டு
1.தன் உளவாளிகளின் தன்மை கொண்டு ஒவ்வொரு
நாட்டிலும் ஊடுருவி
2.இவன் கண்டுபிடுத்த நஞ்சின் தன்மைகளைத்
தூவி
3.அதனின் நிலைகள் கொண்டு மனிதனை
மிருகமாக்கும் நிலைகள் கொண்டு
4.மதம் இனம் பேதம் என்ற நிலைகளில் தூண்டிவிட்டு...
மனிதனைச் செயலிழக்கும் நிலைகள் செய்துவிட்டு
5.நானே தான் உலகிற்கு ராஜா...! என்று இன்று
அமெரிக்காவின் செயல்கள் வந்துவிட்டது.
அதே சமயத்தில் நம் இந்தியாவின் எல்லைகளில்
அசுர குணங்கள் கொண்டு தாக்குபவனை அந்த அசுரனை முழுமையாக அழிக்கச் செல்ல
முடியவில்லை.
சாதாரண மக்களை அழித்துக் கொண்டிருக்கும்
அந்தத் தீய நிலைகளை சட்டப்பிரகாரம் அவனை அடக்கி அவன் செயலில் இருந்து மீட்டி
நற்குணங்களை ஊட்ட வேண்டுமென்று அரசு முயற்சி செய்தாலும்... அவனைக் கைது செய்து
அவனுடைய அறிவீனத்திலிருந்து தெளிந்த உணர்வு வர வேண்டும் என்று செய்தாலும்... இதை
அங்கிருந்தே கொக்கரித்து கொண்டிருக்கின்றான் அமெரிக்கா...!
மனிதாபிமானம் அற்ற நிலையில் நீ
அவனுக்குத் (அசுரனுக்கு) தீமை செய்கின்றாய் என்ற நிலையில்... அங்கிருந்து “நீ
மனிதாபிமானம் அற்றவன்...” என்று இந்தியச் சர்க்காரைப் பழி சுமத்தும் நிலைகள்
வருகின்றது.
எல்லைப்புறங்களில் எல்லாம் இன்றைய
நிலைகளில் பல சாதாரண பொது மக்களை அவன் கொன்று குவிக்கின்றான். இரக்கமற்ற செயல்களை
செய்து கொண்டிருக்கின்றான்.
ஆனால் அவனைத் தட்டிக் கேட்டு அந்தத்
தீயவனை ஒடுக்க இடமில்லாது அவன் நேரடியாக அந்தத் தீயவனுக்குப் பரிந்து பேசிக்கொண்டு
இருக்கின்றான்.
1.அந்தத் தீயவனுக்குப் பரிந்து பேசும்
நிலைகள் கொண்டு
2.தன் உளவாளிகளைக் கொண்டு அவன் எந்த
மதத்தை உருவாக்கினானோ
3.அந்த மதத்தின் அடிப்படை கொண்டு
இன்றும் மக்கள் மத்தியில் ஊடுருவச் செய்து
4.நஞ்சினைத் தூவித் தன் இனத்தை
பெருக்கும் நிலைகளை இன்று நிலைகள் போய் கொண்டிருக்கின்றது.
தத்துவ ஞானிகள் காட்டிய உண்மையின்
நிலைகள் மறைந்து கொண்டிருக்கும் வேளையில் இந்த உலக நிலைகள் கொண்டு
1.மதம் நமக்குச் சொந்தமல்ல...
2.அருள் ஞானியின் உணர்வே நமக்குச் சொந்தம்
என்ற நிலைகளில் நாம் அந்த அருளை எடுத்துப் பழக வேண்டும்.
குறுகிய காலத்தில் தீமைகளில் இருந்து
மீள வேண்டுமென்றால் சகோதர உணர்வுகளை நாம் வளர்த்தே ஆக வேண்டும். குறைகளை அகற்றும்
நிலைகள் வர வேண்டும்.
பிறருடைய குறைகளைக் கண்டாலும் விண்ணை
நோக்கி நாம் ஏகி
1.மகரிஷிகளின் அருள் சக்தி அவர்கள் பெற
வேண்டுமென்றும்
2.தீமைகளில் இருந்து அவர்கள் விடுபட
வேண்டுமென்றும்
3.ஒருவருக்கொருவர் இந்த அருள் வழியில்
நேசித்து கொண்டால்தான்
4.மகரிஷிகளின் அருள் வட்டத்தில் வாழும்
தகுதியை நாம் பெற முடியும்.
எந்த விஷத் தன்மை வந்தாலும் தப்ப முடியும்…!