விஷத் தன்மையால் உருவாகும் தன்மையை நம் பூமியின்
துருவத்தின் ஆற்றல் அது எப்படி…? என்று அறிந்து அந்தத் துருவத்தின் ஆற்றலைப் பெற்று
தன் உடலில் வந்த விஷத்தை எல்லாம் அடக்கி ஒளியாக மாற்றிக் கொண்டான்.
அதாவது நாகரத்தினம் என்று சொல்கிறோம் அல்லவா…! ஒரு
நாகம் தன் உடலில் இருக்கும் விஷத்தை வைரமாக மாற்றுகின்றது.
1.பல விஷத்தின் தன்மை கொண்ட உயிரணுவை ஜீவ அணுவாக
மாற்றும் திறன் பெற்றது தான் அத்தகைய பாம்புகள்
2.அந்த விஷம் பாம்பின் உடலிலே உறையும் போது வைரமாகின்றது..
இது இயற்கையிலே நாகரத்தினமாக மாறுகின்றது. அதற்கு
ஜீவனில்லை. ஆனால் “இருளில் ஒளி…!” என்ற நிலையில் தான் அது இருக்கும்.
விஞ்ஞான அறிவு கொண்டு ஒரு பெயிண்டைத் தயார் செய்கின்றனர்.
அதைப் பூசிய பின் அதிலே வெளிச்சம் பட்டால் அதில் உள்ள எதிர் ஒளியை (FLUORESCENT) நமக்குக்
கொடுக்கின்றது.
ஆனால் அதிலே சூரியனின் ஒளி பட்டால் அது சாதாரண பெயிண்டாகத்
தான் தெரியும். சொல்வது அர்த்தமாகிறதல்லவா. இதே மாதிரித் தான் இந்த இயற்கையின் நியதிகள்.
1.எதையோ புரியாததைச் சொல்கிறேன் என்று நினைக்காதீர்கள்...!
2.முதலில் பதிந்தால் தான்… பிறகு எண்ணினால் புரிகிறது.
புரிய வைப்பது என்றால் எப்படி…?
குழந்தைகள் ஆரம்பத்தில் பள்ளிக்குச் செல்லும் போது
எழுத்துக்களைப் பார்த்தால் அதை என்ன சொல்வது…? என்று தெரியாது. ஆ… ஊ… ஏ… என்று அந்த
ஒலிகளை எழுப்புவதற்கு எழுத்தைச் சொல்லி ஆசிரியர் உணர்த்துகின்றார்.
ஊ.. என்பதை ஆ… என்று சொன்னால் சரியாகுமா…? அப்படிச்
சொன்னால் அந்த எழுத்திற்கும் ஒலிக்கும் வித்தியாசம் ஆகிவிடும் அல்லவா…?
எந்த மொழியை எடுத்தாலும் முதலில் ஒலியின் சப்தங்களைக்
கூட்டுகின்றனர். அடுத்து அந்த நாதங்களை எழுப்புகின்றனர். அப்பொழுது அந்தச் சொல்லின்
வன்மை எப்படி இயங்குகிறது…?
சொல்லால் சொன்ன பின் புரிந்து (தாய் தன் குழந்தைக்குச்
சொல்வது போல்) கொள்ளும் நிலை வருகின்றது. இதன் வழி கொண்டு அன்று தத்துவ ஞானிகள் இந்த
எழுத்து வடிவினைக் கொண்டு வந்தனர்.
1.இதைப் போன்று தான் இயற்கையின் நியதிகளை அகஸ்தியன்
அன்று கண்டு இந்த உணர்வினை வெளிப்படுத்தினான்
2.ஆனால் அவன் காலத்தில் எழுத்து வடிவில்லை.. திருப்பிப்
பார்ப்பதற்கு (REFERENCE).
அவன் காலத்தில் “உணர்வின் ஒலியைப் பதிவாக்கி… மற்றவர்களை
ஈர்க்கச் செய்து…
1.“உன் உடல் நலமாகும் போ…!” என்று சொல்லப்படும்
போது
2.அவன் எடுத்துக் கொண்ட உணர்வு பதிவான பின் அது
நல்லதாகின்றது.
3.விஷத்தை முறித்த நிலைகள் - அவன் சொல் அதற்குள்
சென்று அந்த நோயை நீக்கும் வல்லமை பெறுகின்றது.
ஏனென்றால்… “அவன் சொல்லைக் கேட்டு உணர்ந்திருந்தால்
தான்…” அது வருகின்றது. ஆகையினால் நஞ்சை வெல்லும் உணர்வு அங்கே வருகிறது.
ஏனென்றால் அகஸ்தியன் தன் தாய் கருவிலிருக்கும் போது
பெற்ற சக்தியின் துணை கொண்டு விஷத்தை வென்று பழகியவன்.
1.அக்காலத்தில் அவன் பார்வையில் பலருடைய நோய்கள்
இப்படித் தான் நீங்கியது.
2.அதே உணர்வுகளைத் தான் இங்கே உங்களுக்கும் வாக்காகக்
கொடுக்கின்றோம்.
ஆகவே அகஸ்தியன் உணர்வைப் பெற்று நஞ்சினை ஒளிச் சுடராக மாற்றும் பழக்கத்திற்கு வாருங்கள்.