உடலை விட்டு ஆத்மா பிரிந்து செல்வதைச் சிவ பதவி அடைந்து விட்டார்...
தெய்வீக பதவிக்குச் சென்றிட்டார்...! என்றெல்லாம் சொல்கிறார்கள்.
1.இது எல்லாம் நம் ஆத்மா பிரிந்த பிறகு நம்முடன் வாழ்ந்தவர்கள்
நமக்களிக்கும் பதவி தானே தவிர
2.எப்பதவியும் அந்தச் சிவனால் நமக்கு அளிக்கப்படுவதில்லை.
வாழ்ந்த காலத்தில் நாம் இருக்கும் நிலையைக் காட்டிலும் ஆவி
உலகில் அல்லல்படும் நிலை மிக மிகக் கொடிய நிலை (இது மிகவும் முக்கியமானது).
நல் ஆத்மாவாய்... நற்செயலைச் செய்வித்து... நல்லுணர்வு கொண்டு...
அமைதி கொண்டு... இவ் உலக வாழ்க்கையில் உள்ள பற்று பாசம் ஆசை அனைத்து நிலைகளையுமே
வாழ்ந்த நிலை கொண்டு பூரிப்படைந்து...
1.சஞ்சலத்தில் விட்டுச் செல்வதைப்போல் எண்ணாமல்
2.அமைதியுடனே இவ்வுலக பற்றற்றுப் பிரிந்து செல்லும்
ஆத்மாக்களினால் தான்
3.ஆண்டவனாக அக்குடும்பத்தின் தெய்வமாகவும் தான் வாழ்ந்த
குடும்பத்தைச் செழிக்கச் செய்திடல் முடிந்திடும்.
குடும்பத்தில் உள்ளோரும் அந்தக் குடும்பத்தில் வாழ்ந்திடும்
பெரியோர்களை அன்புடன் வணங்கும் போது
1.அவர் ஆத்மா பிரிந்த பிறகு நம் குடும்பத் தெய்வமாய் நம்மைக்
காப்பார்.
2.அவ்வழியின் தொடர்தான்... குடும்பத் தொடராக... பெரியோரை தாய்
தந்தையரை...
3.பக்தி கொண்டு வணங்கிடும் பக்குவ நிலை என்பதனை உணர்ந்து
5.ஒவ்வொரு குடும்பத்தையும் அக்குடும்பங்களே கோயில்களாய்த்
திகழும் வண்ணம் வாழ்ந்து வழி நடந்திடல் வேண்டும்.
பல கோயில்களுக்குச் சென்று அபிஷேக ஆராதனை செய்வித்து பக்தியை
வளர்த்து... வணங்கி வேண்டும் முறையைக் காட்டிலும்... நம் இல்லக் கோயிலை அன்பு
கொண்டதாய்... இனிமையை வளர்க்கும் இன்ப இல்லமாய்... இல்லத்தில் உள்ளோர் அனைவரின்
எண்ணக் கலப்பும் ஒன்றுபட்டதாய் வாழ்ந்திடும் வழி பெறுங்கள்.
1.வாழ்க்கையுடன் மோதிடும் பல இன்னல்களுக்கும் தெளிவு பெறும்
பக்குவத்தில்
2.ஞான வளர்ச்சியின் தொடர்பினை வளர விடுங்கள்.
3.செல்வமும் செழிப்பும் தானாக வளரும்.