ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

October 30, 2020

“பேயை ஓட்டுகிறேன்…” என்று சொல்பவர்களின் உண்மைச் செயல் என்ன…? என்பது பற்றி ஈஸ்வரபட்டர் சொன்னது

எண்ணற்ற காலம் முதற்கொண்டே ஆவிகளை வசியப்படுத்திச் செயல்படுத்திடும் பல நிலைகள் பல ஆயிரம் காலங்களாகவே இருந்து வருகின்றன. நற்காரியங்களுக்காகவும் தன் பேராசையின் நிலைக்காகவும் இந்நிலையைச் செயல்படுத்தி வந்தார்கள்.
 
மந்திரம் மாயம் செய்வதெல்லாம் ஒரு கலையாகவும் வம்ச வழியாகவும் நிலைப்படுத்திச் செயல் கொண்டு வருகின்றனர்…. பேய் ஓட்டுதல் மந்திரத்தில் என்பன போன்ற பல நிலைகள் நடக்கின்றன.
 
எண்ணத்தில் சோர்வு கொண்டவரின் உடலில் அவர்கள் எந்த எண்ணத்தைக் கொண்டு உள்ளனரோ அவ்வெண்ண நிலைக்கொப்ப ஆவிகள் அவர்கள் உடலில் ஏறிவிடுகின்றன.
 
உதாரணமாக… பல ஆசை நிலையுடன் வாழும் ஒருவன் தன் இல்லத்தில் குழந்தைகளின் பற்றைக் கொண்டு பல நினைவுகளுடன் இல்லத்திலிருந்து வெளி இடங்களுக்குச் செல்லும் நிலையிலும் இல்லத்தில் இருந்த நிலையின் எண்ண ஆசையுடன் தன் குழந்தைகளுக்கு வேண்டிய பொருள் வாங்கும் ஆசையில் அதே எண்ண  நிலையில் செல்கின்றான் என்று வைத்துக் கொள்வோம்.
 
அதே எண்ணம் கொண்டு அந்த ஆசையில் மற்ற போக்குவரத்தின் இடையூறுகள் கவனிக்கப்படாமல் விபத்து ஏற்பட்டுவிடுகின்றது. அப்பொழுது அகால மரணம் எய்தி குருதி வெள்ளத்தில் அடிபட்டு ஆத்மா பிரிந்து விடுகிறது.
 
1.அத்தகைய ஆத்மா அவ்வாசை நிலையுடன் அங்கேயேதான் சுற்றிக் கொண்டிருக்கும்.
 2.அதே நிலைகொண்ட எண்ண நிலையுடன் இன்னொருவன் அந்த நிலைக்குச் செல்லும் பொழுது
3.இவ்விரண்டு எண்ணங்களும் ஒரு நிலைப்பட்டவுடன் இவன் உடலில் அந்த ஆவி ஏறிக் கொள்கின்றது.
 
இவனுடைய செயலுடன் அவ்வாவியின் செயலும் ஒன்றுபட்ட பிறகு இவன் உடல் நிலையில் அவ்வுடலில் அவ்வாவி மனிதனாய் வாழ்ந்த காலத்தில் இருந்த நிலையெல்லாம் இவன் உடலிலும் ஏறிக்கொள்கின்றது.
 
இப்படிப்பட்ட நிலையின் காரணமாக…
1,தன் நிலையே தான் மறந்து
2.உடலில் உள்ள ஆவிக்குத் தன்னையறியாமல் அடிமைப்பட்டு வாழும் நிலை ஏற்பட்டு
3.சோர்வு கொண்ட நிலையாகி அதை மாற்றிட மந்திரவாதிகளிடம் செல்லும் நிலை மிகுந்து விட்டது.
 
இந்த நிலை கொண்டவன் மந்திரவாதியிடம் சென்றால் அவனுக்கு இவன் உடலில் ஏறியுள்ள மற்றோர் ஆவி ஆத்மாவின் நிலையைப் புரிந்து கொண்டு
1.பேய் ஓட்டுவதாகச் சொல்லி மீண்டும் இதற்கு மேல் சக்தி கொண்ட மற்றும் ஒரு குட்டிச்சாத்தானை இவன் உடலில் ஏற்றி
2.அதன் சக்தியைச் செயல்படாமல் செய்து
3.பேய் ஓட்டுவதாய் அவ்வாத்மாவைப் பல இம்சைகள் செய்து
4.அவன் பொருளீட்டிக் கொள்கின்றான்.
 
இவன் உடலில் ஏறிய குட்டிச்சாத்தானின் ஏவலிலிருந்து இவன் உடல் அழியும் வரை தப்புவது இயலாத காரியம். இத்தகைய பேயோட்டும் நிலையினால் ஒவ்வொருவரையும் அவர்கள் வாழ் நாள் முழுமைக்குமே அதற்கே அடிமைப்படுத்துகின்றனர்.
 
இந்நிலையிலிருந்து தப்புவதற்கு என்ன செய்ய வேண்டும்…?
 
நம் உடலில் எவ்வாத்மா எவ்வாவி நிலைகள் ஏறி இருந்தாலும்
1.எண்ணத்தை ஒரு நிலைப்படுத்தி சப்தரிஷிகளின் உணர்வுடன் ஒன்றச் செய்து அந்த எண்ணத்தை வலுவாக்கி

2.உடலில் உள்ள ஆவி புனித நிலை பெற வேண்டும் என்று எண்ணினால் அதனின் இயக்கத்திலிருந்து தப்ப முடியும்.