ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

October 20, 2013

திருமூலர் உயிரைப் பற்றி உணர்ந்து பாடிய பாடல்

நெற்றிக்கு நேரே புருவத்தினிடைவெளி
உற்று உற்றுப் பார்க்க ஒளி விடும் மந்திரம்
பற்றுக்குப் பற்றாய் பமன் இருந்திட
சிற்றம்பலம் ன்று தெரிந்து கொண்டேன் இன்று.
திருமூலர்
1. நெற்றிக்கு நேரே புருவத்தினிடைவெளி
இமயமலையிலே தபசு இருந்தார் என்றால்,
இமயம்” என்றால் என்ன? இமை என்பது,
இரண்டு கண்களின் மையம் - உயிர்
புருவங்களின் இடைவெளி
உடல் உயர்த்தியான நிலைகள் மலை.
இமயம் என்று அவர்கள் பாடியிருந்தால் இமயமலையிலே போய் நான் தபசு இருக்கவேண்டும் என்றால் என்ன அர்த்தம்? 

ஆக உட்பொருளின் தத்துவத்தை அவர்கள் கொடுக்கப்படும்போது இமயமலையிலே போய் தவம் இருக்கச் சொன்னார். தவம் இருந்தார் என்றால், தவம் என்றால் என்ன?
2. உற்று உற்றுப் பார்க்க ஒளி விடும் மந்திரம்
நமது உடலுக்குள், உயிர் இயக்கச் சக்தியாக இருக்கின்றது. நமது உயிரை ஓம் ஈஸ்வரா குருதேவாஎன்று ஞானிகள் அழைத்தார்கள்.
ஓம் ஈஸ்வரா குருதேவா என்று சொல்லும் பொழுது வெறும் சொல்லாக இல்லாமல், புருவ மத்தியில் நினைவைச் செலுத்திப் பழகுதல் வேண்டும்.

அவ்வாறு பழகிக் கொண்டால், நமது உயிரை குருவாகவும்,  நாம் எண்ணியதை, ஈசனாக உருவாக்கக் கூடிய நிலையை, நாம் உணரமுடியும். நாம் எதை எண்ணுகின்றோமோ, அது உடலுக்குள் ஊடுருவது, நமக்குத் தெரிய வரும்.

நமது கண்கள் ஒன்றைப் பார்க்கின்றது, என்று வைத்துக் கொள்வோம். அதிலிருக்கும் உணர்வுகளைக் கண்கள் கவர்ந்து, நமது ஆன்மாவாக மாற்றுகின்றது. நமது மூக்கு வழியாக சுவாசித்த பின், உயிரில் பட்டு அந்த உணர்வுகளை நாம் அறிகின்றோம்.

ஓம் ஈஸ்வரா குருதேவா  என்று சொல்லுகின்ற போதெல்லாம்,
புருவ மத்தியில் உயிரை எண்ணி,
அதைப் பழக்கத்திற்குக் கொண்டு வந்து விட்டோமென்றால்,
அதன்வழி உணர்வுகளை உடலுக்குள் செலுத்தலாம்.

வாழ்க்கையில் பயன்படுத்துவது மூக்கு வழி சுவாசித்து, உணர்வுகளை உடலுக்குள் செலுத்துவது.

இதை அறிந்து கொண்டாலும், தீமையான உணர்வுகள் உள்ளுக்குள் செல்லாதபடி, அடுத்த நிமிடம்,
ஈஸ்வராஎன்று உயிரை எண்ணி,
இதை இடை மறிக்க வேண்டும்.

நம்முடன் எவ்வளவு நல்லவர்கள் பேசினாலும், அந்த உணர்வில், அவர்கள் குடும்ப கஷ்டம், உடல் நோய்கள் போன்ற உணர்வுகள் கலந்து சொல்லாக வரும்.

அவர்களைக் கண்ணால் பார்க்கும் பொழுது, நமது ஆன்மாவில் கலந்துவிடும். அவர்கள் பேசும் பொழுது, இந்த உணர்வுகள் கலந்தே வரும். இருந்தாலும், அந்த நிலையிலும் ஈஸ்வராஎன்று சொல்லி உணர்வை இடைமறித்து, அதை பலவீனப்படுத்த வேண்டும்.

அவ்வாறு  ஈஸ்வராஎன்று சொல்லும் நிலைகள் வலுப் பெறும் பொழுது, தீமையை அது மாற்றும்.  அவர் பலவீனமான நிலைகளைச் சொல்லும் பொழுது, மகரிஷிகளின் அருள் சக்தி அவர் உடலில் படர வேண்டும் என்று எண்ண வேண்டும்.
3. பற்றுக்குப் பற்றாய் பரமன் இருந்திட
மார்க்கண்டேயன் ஆவுடையைப் பிடித்துக் கொள்ளாது, லிங்கத்தை இறுகப் பிடித்துக் கொள்கின்றான்.  அதாவது, உயிரை இறுகப் பிடித்துக் கொள்கின்றான்.

ஆகவே, நமக்கு இந்த வாழ்க்கையில் எத்தகைய துன்பம் வந்தாலும், நாம் எண்ணியது அனைத்தையும் இந்த உயிர்தான் இயக்குகின்றது என்றும், ஆகவே நாம் எண்ண வேண்டியது எது? என்பதையும் அறிந்து கொள்ள வேண்டும்.

ஒளியாக நின்று, நாம் எண்ணியது அனைத்தையும், அந்த எண்ணத்திற்குத் தக்கவாறு இயக்கிக் காட்டி, அந்த உணர்வின் தன்மையை நமக்குள் உணரச் செய்வதும், இயக்குவதும், அதை நமக்குள் அடையச் செய்வதுமாக இயங்கிக் கொண்டிருப்பது, நமது உயிர் தான்.
4. சிற்றம்பலம் என்று தெரிந்து கொண்டேன் இன்று
இமயமலையிலே போய் தவம் இருந்தார்கள். பெரிய பெரிய தவயோகிகள் என்று வர்ணித்துக் கொண்டேயிருக்கின்றோம். ஆனால்,
ஓவியங்களில் அவர்கள் நெற்றியைக் காட்டப்படும்போது,
சிற்றம்பலத்தில்
இந்த சிறிய உடலுக்குள், சிறு இடத்தில் (புருவ மத்தியில்)
இது தெரியாமல்தான் எங்கெங்கோ சுற்றித் திரிகின்றோம்.

ஆக, ஒளியாக இருக்கும் நம் உயிரான ஈசனை,
புருவ மத்தியில் எண்ணி,
அவனோடு ஒன்றி அவனாக மாறும் (ஒளியாக மாறும்) பக்குவத்தைத்தான், மெய் ஞானிகள் அன்று காட்டினார்கள்.