ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

October 17, 2020

கிரகணத்திற்கும் பிரளயத்திற்கும் உள்ள சம்பந்தம் பற்றி ஈஸ்வரபட்டர் சொன்னது

ஒரு மண்டலத்தைத் தாண்டி ஒரு மண்டலம் செல்லும் நிலையிலும் அது அது சேமித்து வளர்த்த அமில சக்தியின் ஈர்ப்பு மற்ற மண்டலத்தின் செயலுடன் தாக்கும் நிலையிலும் ஒவ்வொரு மண்டலத்திற்குமே பல காலங்கள் ஒரு நிலையில் சேமித்த சக்தியின் தன்மை இம்மண்டலங்களின் சுழற்சியில் ஒன்றைத் தாண்டி ஒன்று செல்லும் நிலையில் அது நிமிடக் கணக்காய் இருந்திட்டாலும் அதன் ஈர்ப்பில் இதன் ஈர்ப்பின் நிலையும் மோதுண்ட நிலையில் இவ்விரண்டிற்கும் இடைப்பட்டுள்ள பால்வெளி மண்டலத்திலும் அதன் அமிலத் தன்மை மாறு கொள்கின்றது.
                            
அதிலிருந்து ஒவ்வொரு மண்டலத்திற்குமே அதனுடைய இயற்கை குணத்தில் சில மாற்றங்கள் வருகின்றன.
 
1.சூரியனுக்கும் பூமிக்கும் இடைப்பட்ட நிலையில் எந்த மண்டலம் தாண்டி ஓடுகின்றதோ
2.அம் மண்டலத்தின் குண நிலை கொண்ட இயற்கை நிலையின் தாக்குதல் நம் பூமிக்கு ஏற்பட்டு
3.அதிலிருந்து இயற்கையிலேயே நற்சக்திகளும் வளர்கின்றன… பல தீய அணுக்களும் வளர்கின்றன.
 
பிப்ரவரி 16.01.1980ல் ஏற்பட்ட சூரிய கிரகணத்தில் நம் சூரியனைத் தாண்டி கேதுவின் ஓட்டம் சென்றதனால் கேது மண்டலத்தில் உள்ள விஷ அணுக்கதரின் தாக்குதல் நம் பூமியைத் தாக்கியது.
 
கேதுவின் தன்மையில் விஷத் தன்மை அதிகம்…!
 
நம் பூமியில் எப்படி சில தாவரங்கள் விஷத் தன்மை கொண்டதாகவும் சிலது நல்ல தாவரங்களாகவும் வளர்கின்றனவோ அவை போல் இம் மண்டலங்களின் வளர்ச்சியிலும் ஒவ்வொரு தன்மையில் வளர்கின்றது.
 
இந்தக் கேது மண்டலம் இல்லாவிட்டால்…
1.பால்வெளி மண்டலமே மற்ற மண்டலங்களுக்கு நன்மை தரும் சக்தியாக இல்லாதபடி
2.பால்வெளி மண்டலத்தில் நிறைந்துள்ள அமில சக்தியின் தன்மையில்
விஷ அமிலமும் நிறைந்தே சுற்றிக் கொண்டிருக்கும்.
 
நட்சத்திர மண்டலங்களிலும் இவ்விஷமான அமில சக்தி கொண்ட பல நட்சத்திர மண்டலங்கள் உண்டு.
 
எண்ணத்தில் கூட கேதுவின் சக்தியை எண்ண முடியாதபடி எண்ணிலடங்கா வண்ணம் நச்சுத் தன்மை கொண்ட அமில சக்தி நிறைந்த மண்டலமாய் கேது மண்டலம் வளர்ந்துள்ளது.
 
சூரியனின் ஈர்ப்பிலுள்ள இந்த 48 மண்டலங்களின் சுழற்சியுடன் கூடிய மண்டலம் தான் கேது மண்டலமும். கேதுவின் கிரகணம் பிடித்ததினால் நம் பூமியின் மேல் அதன் ஈர்ப்பு சக்தி தாக்கி நம் பூமியின் இயற்கையுடன் இவ்விஷ அணுக்களின் தாக்குதல் பட்டு அத்தாக்குதலினால் நம் பூமியின் நிலையே சிறிது இறக்கம் (கீழ்) இறங்கி விட்டது.
 
சூரியனுக்கும் நம் பூமிக்கும் இடைப்பட்ட தூர விகிதமும் அதிகப்பட்டு விட்டது. பூமிக்குக் கிடைக்கும் சூரியனின் உஷ்ண அலையின் சக்தி குறைவு கொண்டு குளிர்ந்த நிலை அதிகப்பட்டு விட்டது.
 
1.நம் பூமியின் மாற்ற நிலை ஏற்படப்போகும் நிலைக்கு இக்கேதுவின் நிலை சாதகப்படுத்திச் சென்றது.
2.நல் வழியின் சாதகமல்ல கேதுவின் கிரகணத்தினால்… …
3.நம் முன்னோர்கள் எக் கிரகணம் பிடித்ததோ இந்த நிலையில் வாழ…?! என்று தெரிந்தோ தெரியாமலோ செப்பினர்.
நம் பூமி பல கேதுவின் கிரகணத்தினால் சில தன்மைகளில் மாற்றம் கொண்டு விட்டது.
 
சுழன்று கொண்டே உள்ள இம் மண்டலங்களின் ஓட்டத்தில் ஒன்றைத் தாண்டி ஒன்று செல்லும் நிலையிலும்… ஒன்றுக்கொன்று ஒன்றின் சக்தியை… ஒன்று அதன் ஓடும் நிலையில் ஈர்த்துக் கொண்டே செல்லும் நிலையிலும்…
1.பல ஆண்டுகள் ஒன்று போல் உள்ள அம்மண்டலத்தின் சக்தியே
2.மற்ற மண்டலத்திலிருந்து அதன் ஈர்ப்புப் பட்டவுடன் (கிரகணத்திற்குப் பின்) மாறும் நிலை கொள்கின்றது.
 
நம் பூமியில் தோன்றிய உயிர் அணுவின் தாவர வர்க்க நிலையையும் அதிலிருந்து ஜீவன் கொண்ட உயிரணுக்கள் தோன்றிய தொடர் நிலையையும் உணர்த்தி வந்தேன்.
 
அந்நிலையில் ஓடுகள் கனத்து நத்தை போன்றும் ஆமை போன்றும் தோன்றிய ஜீவ அணுக்களின் வளர்ச்சி நிலை பல ஆயிரம் கோடி ஆண்டுகள் ஆன பிறகு இப்பூமியின் முதல் பிரளய காலத்திற்குப் பின் வந்தது.
 
முதல் பிரளய நிலைக்குப் பிறகுதான் நம் பூமிக்கு இன்று பொக்கிஷமாய் உள்ள வட துருவ தென் துருவங்களில் நீர் நிலைகளும் கிடைத்தது.
 
இப்பூமி ஒரு மண்டலம். இப்பூமியில் தோன்றி வளர்ந்திடும் உயிரணுக்கள் ஒவ்வொன்றுமே ஒவ்வொரு மண்டலம்.
 
நம் உடலுக்கு நம் பழக்க வழக்கப்படி ஒரே மாதிரியான உணவு நிலைகளை உண்டு வாழ்ந்திடும் பக்குவத்தில் நாம் உண்ணும் உணவில் மாற்றம் கொண்டால் நம் உடல் என்னும் இம்மண்டலம் அதை 
 
1.அதை ஏற்காதபடி… வாந்தியாகவோ அல்லது வாயுவாகவோ மற்ற நிலையில்… பல இன்னல்களை
2.இம்மண்டலத்தின் மையமான நம் வயிற்றில் வலியும் மற்றத் தொந்தரவுகளும் ஏற்படுகின்றன.
 
அதிலிருந்து நம் உடல் மண்டலம் சரிப்பட்டுப் பழைய நிலையில் வருவதற்குச் சில நாட்கள் ஆகின்றன. அல்லது அதன் தொடர் நிலையில் ஒவ்வொரு தொந்தரவுகளும் ஏற்பட்டு நம் ஆரோக்கிய நிலையே மாறு கொள்கின்றது.
 
இந்த நிலை போன்றுதான் மண்டலங்களின் ஒவ்வொரு நிலைக்கும் அதன் மாற்ற நிலை வருகின்றது.
 
பிரளயம் ஏற்படுவதும் சுழற்சியில் நம் மண்டலத்துடன் எம் மண்டலத்தின் தாக்குதல் ஏற்படுகின்றதோ அதன் நிலை ஏற்காமல் அதிலிருந்து பல மாற்றங்கள் ஏற்படும்.
 
நம் உடல் மண்டல ஆரோக்கிய நிலையே… கல்லைத் தின்றாலும் ஜீரணிக்கும் நிலை போலவும் எதைச் சாப்பிட்டாலும் ஜீரணித்து விடும் நிலையும் கொண்ட ஆரோக்கியமான உடல் நிலை கொண்ட மண்டல மனிதனாய் உள்ள நிலையில்
1.உடலிலுள்ள இவ் எதிர்ப்பு சக்தியினால்
2.மற்றத் தீய அணுக்கள் வந்து நம் ஆரோக்கியத்தைத் தாக்கிடாது.
 
அந்த நிலை போல் நம் பூமி மண்டலத்தின் ஆரோக்கிய நிலை இருந்திருந்தால் இப்பிரளய நிலையிலும் சக்தி கூடும். சூரியனைத் தாண்டிக் கேது சென்ற போதும் அவற்றின் தாக்குதலை நம் பூமி ஏற்றிருக்காது.
 
ஆனால் நம் பூமியிலிருந்து தான்
1.நம் செயற்கைக்காக பூமியின் பொக்கிஷத்தையே பிரித்தெடுத்து
2.ஆரோக்கியம் குன்றிய பூமியாக நாம் செய்து வைத்துள்ளோமே…!
3.இந்த நிலையில் ஏற்படும் இயற்கைக்கு நாம் தான் பொறுப்பு ஆகின்றோம். 
 
நம் பூமியில் முதல் பிரளயத்தில் ஏற்பட்ட நீர் நிலைகளின் வளர்ச்சி “நம் பூமி சேமித்து வளர்த்த அமில சக்தியின் ஈர்ப்பிலிருந்து நாம் பெற்ற பொக்கிஷம்…!”

சூரியனுக்கும் பூமிக்கும் சமீபத்தில் எப்படிக் கேது கிரகணம் பிடித்ததோ அதைப் போன்றே சூரியனுக்கும் நம் பூமிக்கும் இடைப்பட்ட நிலையில் வியாழனின் கிரகணம் பிடித்தது. இது முதல் பிரளயத்திற்கு முன் நடந்தது…!