ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

October 5, 2020

புற்று நோய் வரக் காரணம்

இன்று நாம் விவசாயம் செய்யும் போது பயிரினங்களைத் தாக்கும் பூச்சிகளையும் புழுக்களையும் அழிக்க பூச்சி மருந்துகளைத் தெளிக்கின்றோம்.
 
பூச்சி மருந்தைத் தூவிய பின் பூச்சிகள் இறந்து விடுகின்றது. அனால் அந்தப் பூச்சிகள் இடும் முட்டைகளிலும் இந்த மருந்து ஊடுருவுகின்றது. முட்டையில் இருக்கும் அந்த மேல் ஓடு அந்த விஷத்தைக் கவர்கின்றது.
 
1.மேல் பகுதியிலிருந்து இந்த விஷம் அந்த முட்டைக்குள் ஊடுருவி
2.இதிலிருந்து வரக்கூடிய அந்த ஆவியின் தன்மை… உருவாகும் அந்தப் பூச்சிக்குள் இணைந்து
3.இதற்குச் சமமாக ஏற்றுக் கொள்ளும் நிலை வருகின்றது..!
4.அதாவது முட்டைக்குள் இருக்கும் இதே பூச்சியை உருவாக்கும் அந்த உயிரணுவிற்கு விஷம் கூடி
4.அதன் வழி புதிதாக பூச்சி உருவாகிறது வலு கொண்டதாக…!
 
 
இதைப் போல் நாம் தூவும் பூச்சி மருந்துகள் தாவர இனத்துடன் கலந்து நெல்லிலோ கத்தரிக்காயிலோ திராட்சையிலோ மாம்பழத்திலோ எல்லாவற்றிலும் இது இருக்கத் தான் செய்கிறது.
 
இப்படிக் கலந்து வரும் உணவைத்தான் நாம் தினமும் உட்கொள்கிறோம். அப்போது விஷம் கொண்ட அணுவாக நமக்குள் மாற்றுகின்றது.
 
பின் அது ஜீவ அணுவாக மாற்றிய பின் அதனுடைய மலம் வெளிப்படும் போது நம்முடைய தசைகளுக்குள்ளும் விஷம் ஊடுருவுகின்றது.
 
உடல் எல்லாம் நன்றாக இருக்கிற மாதிரித்தான் தெரியும்.
1.ஆனாலும் கை கால் கடு கடு என்று இருக்கிறது…
2.கண் வலிக்கிறது தலை வலிக்கிறது நெஞ்சு வலிக்கிறது பிடரி வலிக்கிறது என்றெல்லாம் நாம் சொல்வோம்.
 
இது எல்லாம் நாம் தவறு செய்யாமலே நம் உணர்வுக்குள் இது கலந்து விடுகின்றது. மனிதனின் சிந்தனைகளையும் குறைக்கச் செய்கிறது.
1.அடிக்கடி வேதனை என்ற உணர்வுகளைச் சுவாசிக்கும் பொழுது
2.நம் உடலில் இந்த வேதனையையே அனுபவிக்கும் நிலை வருகிறது “இந்தப் பூச்சிகளைக் கொல்லும் நஞ்சால்…”
 
அந்த நஞ்சின் தன்மை அதிகமாகி விட்டால் இந்த உணர்வுகள் உடலுக்குள் விளைந்து அது சிறுகச் சிறுகக் “கேன்சராக” முளைக்கத் தொடங்கிவிடுகின்றது.
 
நம் உடலுக்குள் இருக்கும் ஜீவ அணு இதைப் போல் அதிகமான விஷத்தின் தன்மையை நுகர்ந்து விட்டால் அந்த விஷத்தையே வளர்த்துக் கொள்ளும் நிலை வரும் பொழுது தன் அருகிலே இருக்கும் தசைகளில் இருக்கும் அணுக்களும் மடியத் தொடங்குகின்றது.
 
பின் இதனின் இனப் பெருக்கமாகி வந்து விட்டால் இதைப் புற்று நோய் என்று சொல்வார்கள். தன் இனத்தின் தன்மை பெருகிப் பெருகி மற்றதுக்கு இடமில்லாது கலைத்துக் கொண்டே போகும்.
 
“புற்று” தனக்குள் எப்படிப் பல கண்களாக விளைகின்றதோ… அதைப் போல் தன் இன அணுக்கள் பெருகிப் பெருகி… நம் உடல் தசைகளில் இருக்கும் அணுக்களைக் கொன்று கொன்று… இது உணவாக உட்கொண்டு தன் பெருக்கமாக நல்ல தசைகளிலும் இதனின் ஆதிக்கத்தைப் பெருக்கிக் கொண்டே போகும். 
 
இப்படிக் கொடூரத் தன்மைகள் விளைகின்றது. ஆனால் நாம் தவறு செய்யவில்லை.
 
ஆக… விஞ்ஞான அறிவால் மனிதனுக்காக எத்தனையோ வசதிகள் செய்து
1.உணவுக்கு என்று அந்தப் பூச்சிகளைக் கொன்றால் தான் உணவும் பற்றாக்குறை இல்லாது கிடைக்கின்றது.
2.ஆனால் மனிதனுக்குள் இந்த நஞ்சின் முடிவு இப்படி எல்லாம் மனிதனுக்குப் பாதகமாக வருகின்றது.