ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

October 26, 2020

ஆகாய கங்கை பற்றி ஈஸ்வரபட்டர் சொன்னது

ஒன்றின் ஈர்ப்பில் ஒன்று சிக்குண்டு ஓடும் நிலையில் ஒவ்வொன்றும் அதற்குகந்த ஈர்ப்புத் தன்மையுடன் ஓடுகின்றது.
 
சூரியனை மையம் கொண்டு ஏழு பெரிய கோளங்கள் உள்ளன. இவ் ஏழின் ஈர்ப்பில் இவ் ஏழிற்கும் தாண்டிய நிலையில் இவ் ஏழிற்கும் சிறிய கோளங்கள் 48 மண்டலத்தில் சூரியனும் நம் பூமியைச் சேர்த்து ஏழு கோளமும் இவ் எட்டும் போக பாக்கி நாற்பது கோளங்களும் இவ் ஏழின் ஈர்ப்புடனே சுழலுகின்றன.
 
ஒவ்வொன்றின் அமில சக்தியும் மாறு கொண்டுள்ளது. சூரியனை மையப்படுத்தி அதன் ஈர்ப்பின் வட்டத்துக்குள் வந்துள்ள மண்டலங்கள்தான் இந்த நாற்பத்தி ஏழும்.
 
அவற்றில் சிறிய கோளங்களுக்கு இன்றைய விஞ்ஞானிகள் நாமகரணம் சூட்டவில்லை. தெய்வீக அருள் நெறியில் சித்தர்களினால் உணரப் பெற்று அவர்கள் இட்ட நாமகரணங்கள் இவற்றுக்கு உண்டு.
 
ராகுவும் கேதுவும் சுக்கிரனும் சனியும் குருவும் இவர்கள் பிடியில் சிக்குண்ட மண்டலங்கள். மற்ற மண்டலங்களை நட்சத்திர மண்டலமாக்கி அதன் நாமகரணத்தைச் சூட்டினார்கள்.
 
1.பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்…
2.நம் சித்தர்களால் இயற்றப்பட்ட எண்ணத்தில் பதிவு செய்த இக்கோளங்களின் நிலையே அற்றுவிட்டது.
3.ஏனென்றால் அக்காலத்தில் எழுத்து வடிவங்களோ கற்பாறையில் ஓலைகளில் உணர்த்தச் செய்யும் வழி முறையோ இல்லை.
 
சித்தர்களால் மனித ஆத்மாவுக்கு வளர்ச்சியூட்டி அவ்வளர்ச்சியின் தொடரில் இவ்வுலக மனித ஆத்மாக்கள் வளர்ந்த நிலையில் சிறுகச் சிறுகத்தான் இவ்வாத்மாக்களின் அறிவு வளர்ச்சியைப் பெருகச் செய்து அதன் வழித்தொடரில் எண்ணத்தைப் பதித்திடும் நிலை வந்தது.
 
அதற்குப் பிற்பட்ட பல ஆயிரம் ஆண்டுகளுக்குப் பிறகு தான் “பதிவு செய்யும் எழுத்து நிலையே…” உதயம் பெற்றுச் செயலாக்கிட முடிந்தது.
 
இந்த நிலை வளர்வதற்குள் மனித ஆத்மாவின் அறிவு நிலை வளர்வதற்குள் மண்டலங்களின் வளர்ச்சி நிலை பெருகிவிட்டது.
1.பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன் அன்றுணர்த்திய சித்தர்களின் சக்தி நிலைக்கும்
2.இன்றைய இயற்கையின் சக்தி நிலைக்குமே பெரும் மாற்றம் உள்ளது.
 
ஒவ்வொரு கோளமுமே அதன் ஈர்ப்பில் பல சக்திகளைச் சேர்த்துக் கொள்கின்றது.
 
சில நாட்களில் சந்திர மண்டலத்திற்கு அருகாமையில் நட்சத்திர மண்டலங்களைக் காண்பீர்கள். ஒரு நாள் காணும் நிலை மற்றொரு நாளில் காண முடிந்திடாது.
1.அதன் ஈர்ப்பில் சிக்குண்டு அதன் செயலுடன் ஆவியான அமிலமாய்ச் செயல் கொண்டாலும்
2.செயல் கொண்டிடும் இதன் ஓட்டத்தினால்… இதன் வேக நிலை கொண்டு 
3.சந்திரனின் ஈர்ப்பில் சிக்காமலும் தப்பிவிடும்.
 
நம் பூமியே ஒவ்வொரு நாளும் பல நட்சத்திர மண்டலத்தைத் தன்னுள் ஈர்த்தே சுழன்று ஓடுகின்றது. அதை எல்லாம் சில நாட்களில் வானத்தில் எரிநட்சத்திரமாய் எரிந்து விழுவதைப்போல் காண்பீர்கள்.
 
சுழற்சியில் சிக்கி ஆவியான அமிலமாய் நம் பூமியின் ஈர்ப்பில் பல நட்சத்திர மண்டலங்கள் கலப்பதைப் போல் ஒவ்வொரு மண்டலத்திலும் அதற்குகந்த அமில சக்தியுடைய மண்டலங்கள் கலக்கின்றன. வளர்ச்சியும் பல கொள்கின்றன…!
 
1.சில நாளில் வான மண்டலத்தில் பார்வைக்கு மிக அதிகமான நட்சத்திர மண்டலங்கள் தெரிவதைக் காண்பீர்கள்
2.சில நாட்களில் ஒன்றிரண்டு காண்பது கூட அரிதாக இருந்திடும்.
 
இம் மண்டலங்களின் ஈர்ப்பிலும்… நம் பூமி ஓடும் நிலையில் நாம் சந்திக்கும் நிலை கொண்டு நிகழ்பவைதான் இவையெல்லாம்.
1.எந்த மண்டலமும் ஓர் இடத்தில் இருந்து சுழல்வதில்லை.
2.ஓடிக் கொண்டே உள்ள நிலையில் நம் பூமி காணும் நிலை கொண்டு தெரிபவைதான் இந்த நட்சத்திர மண்டலங்களெல்லாம்.
 
நம் பூமி ஓடும் நிலையில் நம் பூமியின் ஈர்ப்புடனும் பூமியில் சிக்காமலும் நம் பூமியுடனே ஓடி வரும் நட்சத்திர மண்டலங்களும் பல உள்ளன.
 
அங்கங்கு நம் பூமியின் ஓட்டத் துரித நிலையுடன் ஓட முடியாத… குறுகிய ஓட்ட நிலை கொண்ட நட்சத்திர மண்டலங்களும் பல உள்ளன.
 
1.அந்த எண்ணிலடங்கா இயற்கையின் பொக்கிஷ ஆதி மூலத்தை அறிந்திட 
2.அவ்வாதி சக்தியின் சக்திக்குத் தானப்பா செயல் சக்தியுண்டு. 
3.சக்தியின் செயல் வேண்டியே… நாம் அறிந்தே… இங்கே எழுத்தின் வடிவிற்கு வருவோம்…!