இனம் இனத்தை வளர்க்கும் என்று சொல்வார்கள். ஆனால் இனத்துக்குள் ஒன்றுடன்
ஒன்று தன் இரைக்காக மோதுவதும் உண்டு.
அதே சமயத்தில் தன் இனத்தின் தன்மை பெருக்கும் நிலைகள் கொண்டு வருவதும்
உண்டு. ஞானிகள் அப்படித்தான் இயங்கிக் கொண்டுள்ளனர்.
இதைப்போன்று உயர்ந்த ஞானிகள் 27 நட்சத்திரங்களின் உணர்வின் தன்மைளை உடலிலிருக்கும்
ஒவ்வொரு அணுக்களுக்கும் செலுத்தப்பட்டு உணர்வினை ஒளியாக மாற்றி தன் அறிவின்
ஞானத்தை வளர்த்து விண் சென்றுள்ளார்கள்.
அதிலே விண்ணுலக ஆற்றலைக் கண்டுணர்ந்த முதல் மனிதனான அகஸ்தியன் ஒளியின்
சுடராக மாற்றித் துருவ நட்சத்திரமாக இன்றும் உள்ளான்.
அதிலிருந்து உணர்வின் அலைகள் வெளிப்படுவதை சூரியனின் காந்த சக்தி கவர்ந்து
நமது பூமியின் ஈர்ப்பு வட்டத்தில் அது பரவச் செய்து கொண்டுள்ளது.
இதைப்போல் 27 நட்சத்திரங்கள் பிற மண்டலங்களின் உணர்வின் சத்தைத் தனக்குள்
கவர்ந்து துகள்களாக மாற்றப்படும்போது அதைச் சூரியன் கவர்ந்து தனது உணவாக உட்கொண்டு
வெப்ப காந்தங்களாக அதன் அலைகளைப் பரப்பிக் கொண்டுதான் இருக்கின்றது.
சிலருக்கு இதை எல்லாம் (ஞானகுருவின் உபதேசங்களை) படிக்கும் போதும் கேட்கும்
போதும் சில வித்தியாசமான நிலைகள் ஏற்படலாம்.
1.நமக்கு இது எல்லாம் எதற்கு…?
2.ஏனென்றால் நாளைக்கு விடிந்தால் சோறு இருந்தால் போதும்.
3.குருடனுக்குக் கண் தானே தேவை…
4.நாளைக்கு என்ன ஆகப்போகின்றதோ…? ஏது ஆகப்போகின்றதோ…! இன்றைக்கு எனக்கு
இரண்டு சோறு கிடைத்தால் போதும்
5.ஞானகுரு ஆசீர்வாதம் இருந்தால் போதும்
6.தொழில் கிடைத்தால் போதும். தொழில் நல்ல முறையில் நடந்தால் போதும்.
7.என் உடல் நோய் தீர்ந்தால் போதும் என்ற இந்த உணர்வில் தான் நாம்
இருக்கின்றோமே தவிர
8.நம்மை அறியாது இயக்கும் தீமைகளிலிருந்து விடுபட வேண்டும் என்ற எண்ணம்
இல்லை.
ஏனென்றால் சந்தர்ப்பத்தால் நுகர்ந்து கொண்ட உணர்வுகள் நம் உடலிலுள்ள அணுக்களில்
சேர்க்கப்பட்டு
1.“நம்மை அறியாமல் வேதனையை உருவாக்கி… நல்லவைகளை எண்ண விடாதபடி
2.நமக்குள் வேதனையை உருவாக்கிக் கொண்டே உள்ளது.
இதை நாம் மீட்கவில்லை என்றால் நஞ்சின் தன்மை அடைந்து மீண்டும் நாம் உயிரணுக்களின்
தோற்றங்களில் ஆரம்பத்தில் விஷ அணுக்களாகத் தோன்றியது போல் நம்மை இந்த உணர்வுகள்
அனைத்தும் விஷ அணுக்களாக மாற்றப்பட்டுவிடும்.
மீண்டும் புழுவாக பூச்சியாக பாம்பாக தேளாகத்தான் மீண்டும் பிறக்க வேண்டிய
நிலை வரும். எனென்றால் இந்த இயற்கை மாற்றங்களில் அதனுடைய இயக்கம் எது…? என்ற
நிலைகளில்
1.எதனுடைய கலவைகள் அதிகமாகின்றதோ
2.அதற்குத்தக்கவாறு தான் மாறுகின்றது… மாற்றம் அடையச் செய்கிறது.
இன்று மனிதனாக இருக்கின்றோம் விஷத் தன்மைகள் பரவிக் கொண்டுள்ளது. அதிலிருந்து தப்ப வேண்டும் என்பதற்குத் தான் இதைச் சொல்கிறோம்.