ஆதிமூலம்
என்பது உயிர்.
நாம்
பல கோடிச் சரீரங்களில் ஒவ்வொன்றிலும் தான் பார்த்துத் தப்பிக்கும் உணர்வுகள் வலு பெற்று...
அதுதான் மூஷிகவாகனா (மூச்சு - வாகனம்). அந்தக் கடுமையான உணர்வுகளைச் சுவாசித்து அதிலிருந்து
தப்பிக் கொள்ளும் உணர்வைக் கொண்டு அது தப்பி ஓடுகின்றது.
இருந்தாலும்
அந்தத் தப்பிக்கும் உணர்வுகளுக்குள் வேதனை என்ற உணர்வுகள் அதிகமாகச் சுவாசித்தால் அது
அந்த உடலிலே கணங்களுக்கு அதிபதியாகின்றது.
அப்படி
ஆன பின்... நோயாகி அல்லது அந்த வலிமையான மிருகத்திற்கு இரையாகி அதன் வாழ்க்கையில் இந்த
உடலை விட்டுக் சென்ற பின்...
1.எந்த
உடலினை உற்றுப் பார்த்து அதனால் பயந்து... உணர்வின் வேகங்கள் கூடியதோ
2.அதன்
உணர்வுகள் இதற்குள் வளர்ந்த பின் இந்த உடலைவிட்டுச் சென்ற பின்
3.இந்த
உயிராத்மா அந்த உடலுக்குள் சென்று அதன் உணர்வின் கருவாக பரிணாம வளர்ச்சி அடைகின்றது.
இந்த
நிலையை நம் சாஸ்திரங்களில் தெளிவாகக் கூறப்படுள்ளது.
ஆகவே
இதைப் போன்று பரிணாம வளர்ச்சியாகி ஒவ்வொரு வாழ்க்கையிலும் தன் வாழ்க்கையை அது வாழ தான்
சுவாசித்த நிலையும் தன்னைக் காட்டிலும் எதிரிகளிடமிருந்து தப்பிக்கும் நிலைகளிலும்
வளர்ச்சி பெற்று வளர்ச்சி பெற்றுத் தான் வருகின்றது.
உதாரணமாக
ஒரு காகத்தை எடுத்து கொள்வோம். தன் ஆகாரத்தை எடுக்கும் போது... ஒரு கொத்து கொத்தி விட்டுப்
பின் எதிரிகள் யாராவது வருகின்றனரா...? தன்னைத் தாக்க முற்படுகின்றனரா...? என்று எண்ணிப்
பார்க்கின்றது.
குருவியானாலும்
தன் ஆகாரத்தை எடுத்தவுடனே கொத்தி வைக்கின்றது. மீண்டும் திரும்பிப் பார்க்கின்றது ஒவ்வொரு
நிமிடமும் தன் உடலைப் பாதுகாக்கும் உணர்வுகளே அங்கே வருகின்றது.
அதே சமயத்தில்
ஒரு பூனை அந்தக் குருவியைச் சீறித் தாக்கி சந்தர்ப்பவசத்தால் சிக்கிவிட்டால் பூனையின்
வாயில் சிக்கிய குருவிக்குப் பூனையின் நினைவே வருகின்றது.
குருவியின்
தசைகள் பூனைக்கு இரையாகின்றது. ஆனால் குருவியின் எண்ணங்களோ அந்தப் பூனையின் பால் நினைவாற்றல்
அதிகரிக்கப்படும்போது அதனின் உணர்வின் தன்மை கருவாக்கி அடுத்துப் பூனையாகத் தான் பிறக்கும்.
இன்றும்
பார்க்கலாம்...! மரத்திலே அடங்கி ஒருக்கும் பட்சிகளை...! அது ஒன்று சேர்த்து ஒன்றுக்கொன்று
நுனியில் தான் இருக்கும்.
மரக்
கொப்புகள் அசைந்தால்... அல்லது அதை காட்டிலும் கடுமையான நிலைகள் (எதிரிகள்) அங்கே வரமுடியாத
எல்லையைப் பார்த்துத் தான் சிறு நுனிகளில் தான் எல்லாமே இருக்கும்.
காரணம்
அந்த அசைவைக் கண்டு தான் விழித்துக் கொள்வதற்குத்தான்...!
குருவி
இனங்களாக இருப்பினும் அதனதன் பாதுகாக்கும் எண்ணங்களையே உருவாக்கி அதனின்று மரண பயத்தோடுதான்
வாழ்கின்றது. அதன் வாழ்க்கையில் ஒன்று சப்தமிட்டால் கூட எல்லாம் எழுந்துவிடும்.
இதைப்
போலத் தான் நாம் குருவியாக... பூச்சியாக... இருக்கப்படும்போது தன் எதிரியிடம் இருந்து
தப்பிக்க இந்த உணர்வின் தன்மை கூர்மையாக்கி இந்த உணர்வின் வலிமை பெற்று நாம் தப்பி
பல கோடி சரீரங்களைக் கடந்து தான் மனிதனாக வந்துள்ளோம்.
இதை உணர்த்துவதற்குத்தான்
மூஷிகவாகனா... கணங்களுக்கு அதிபதி கணபதி என்று காட்டினார்கள் ஞானிகள். பரிணாம வளர்ச்சியில்
மனிதனானக ஆன பின்
1.முன்
சேர்த்துக் கொண்ட வினைகளுக்கெல்லாம் நாயகனாக
2.மனித
உடலை உருவாக்கியது நமது உயிர் “ஆதிமூலம்” என்று
3.உயிருக்குக்
காரணப் பெயர் வைக்கின்றார்கள்.
ஒவ்வொரு
சரீரங்களிலும் உயிர் வளர்த்த நிலைகள் கொண்டு... சுவாசித்த உணர்வுகள் இந்த கணங்களுக்கெல்லாம் அதிபதி
கணபதி...
1.பல
கோடி சரீரங்களில் தீமைகளிலிருந்து தப்பித்து வாழ்ந்திடும் உணர்வு ஆறாவது அறிவாக வந்து
2.மற்றதை
அடக்கி ஆட்சி புரியும் கணங்களுக்கு அதிபதியாக நம்முடைய எண்ணங்கள் உருவாகி உள்ளது என்று
காட்டினர்.
இந்தக்
கணங்களுக்கு எல்லாம் ஈசனாக இருந்து இயக்கியது உயிர். ஆக கணங்களுக்கு எல்லாம் ஈசா “கணேசா...”
என்று
1.நாம்
எத்தனையோ கோடி சரீரங்களைக் கடந்து தீமைகளில் இருந்து விடுபட்டு
2.தீமையற்ற
மரணமில்லா பெரு வாழ்வு பெற்று வாழும் இந்த மனித உடலைக் கொடுத்தது என்று
3.நம்
உயிரை வணங்குபடி சொல்கிறார்கள்.
அங்குசபாசவா...!
நம் ஆறாவது அறிவு கொண்டு எதனையும் அடக்கிடும் சக்தியாக அதனை ஒடுக்கி மரணமில்லா பெரு
வாழ்வு வாழ முடியும் என்று இந்த நிலையை உணர்த்தவே அங்குசத்தைக் காட்டுகின்றார்கள்.