ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

October 8, 2020

“நான்...!” என்று நிலைப்பட்டால் வளர்ச்சியே இருக்காது - ஈஸ்வரபட்டர்

இன்றளவும் நம்மில் தோன்றி சப்தரிஷி நிலை கொண்ட ஒவ்வொரு ஜோதிகளும்...
1.தனக்கு மேல் உள்ள உயர்ந்த சக்தியான இயற்கையின் ஆதி சக்தியையே ஜெபப்படுத்தி
2.நான் என்ற நிலைப்படாமல் மென்மேலும் அவ் இயற்கை ஜெபத்துடன் தான் செயலாற்றுகின்றார்கள்.
 
அனைவருக்கும் முருகனாய் ஜெபப்படுத்தி வணங்கிடும் அப்போகநாதரும் இன்றளவும் ஜெபத்தின் மூலம் சக்தியைப் பெருக்கி வளர்த்துக் கொண்டுள்ளார்.
 
பழனியில் உள்ள முருக ஸ்தலமே... அம் முருகரின் சிலையே அவர் ஜெபிக்கும் ஜெபத்தை ஈர்த்து... அருள் சக்தியை வளர்த்துக் கொண்டே அருள் புரிகின்றது.
 
இவ்வுலகில் வளர்ந்த கனி வளங்களை இப்பூமியிலிருந்து பிரித்த பிறகு ஜீவனற்றுப் போகின்றது என்று இதற்கு முன் உணர்த்தியுள்ளோம்.
 
ஆனால் போகர் ஸ்தாபிதம் செய்த அம்முருகரின் சிலைக்கு அப்போகர் ஜெபித்த ஜெபத்தினால் “அம்முருகரின் சிலையே... ஜீவன் கொண்ட நிலையில்... அந்த மலையில் ஐக்கியப்பட்டு விட்டது...”
 
ரிஷிகளும் சப்தரிஷிகளும் அவர்களின் நிலையினால் நட்ட கல்லையும் ஜீவன் கொண்டிட முடிந்திடும்.
 
சப்தரிஷியின் நிலை என்பது...
1.எந்த அண்டத்தையும் எந்தப் பிண்டத்தையும் சுழலிலிருந்து நிறுத்திடவும் முடியும்
2.பிண்டத்தையே அண்டமாக்கிச் செயல்படுத்திடவும் முடியும்.
3.அனைத்து உலக சக்தியையுமே செயலாக்கிடும் நிலை கொண்டுதான் அவர்கள் செயல் புரிகின்றனர்.
 
உயிரணுவாய் உயிராத்மாவாய் வளர்ச்சி கொண்டவர்களே சப்தரிஷியாய் சகலத்தையும் அறிந்திடும் சக்தி கொண்ட நிலையிலும்
1.இயற்கையின் சக்தியை பூஜித்தே
2.அவ் ஆதி சக்தியின் சக்திக்கு அடிபணிந்தே செயலாக்குகின்றனர்.
 
ஆகவே வாழ்ந்திடும் இக்குறுகிய கால வாழ்க்கையை...
1.ஞானத்தொடர் வழியை செயல்படுத்திடும் வழிக்கு ஒவ்வொருவரும் வந்து 
2.நம் சக்திக்கும் அனைத்து சக்தியையும் ஈர்க்கும் சக்தியுண்டு...! என்ற
3.ஒரு நிலை கொண்ட எண்ண நிலை கொண்ட வழித்தொடர் பெற்றிடுங்கள். 

சப்தரிஷிகளின் வழித் தொடரில் ஐக்கியமாகுங்கள்…!