ஞானகுரு உபதேசம் - 24 மணி நேர ஒலிபரப்பு

October 7, 2020

நற்குணத்திலும் நற்பண்பிலும் உள்ளோரைப் பார்த்து அந்தப் பாக்கியம் பெற நாம் ஏங்கினாலே அவர்களின் நற்சக்தி நம் ஆன்மாவிலும் பெருகும் - ஈஸ்வரபட்டர்

நல்லோருடனே பழகியும்... நற்பயன் கொண்ட காரியத்தைச் செய்தும்... பக்திமானாய் அன்பு கொண்ட வாழ்க்கை வாழ்ந்தும்... இவ்வாழ்ந்திடும் வழித்தொடரில் நம்மைக் காட்டிலும் நம் வழித்தொடர் பெறாமல்... இருக்கும் பிறரின் வாழ்க்கை நிலை நெறி முறைகளை ஒப்பிடக்கூடாது.
 
நம்முடன் ஒட்டாமல்...
1.சத்துரு மித்திரு கொண்டவரின் தீய சக்தியின் பிடியில் சிக்கி
2.அப்பழக்கத்திற்கு அடிமை கொண்டவரின் நிலையையும் நம் உயர்ந்த நிலையையும் ஒப்பிட்டு
3.நம் நிலையின் பெருமையை நாம் எண்ணினாலே
4.“நான்...” என்ற நிலையினால் நாம் வளர்ந்த இந்நற்சக்திகள் கரைபடுகின்றது.
 
அதே சமயத்தில் பல தீய வழிகளில் அடிமை கொண்டோர்... அந்நிலையிலிருந்து மீள வழியில்லாதோர்...
1.அந்தத் தீய நிலையில் உள்ளவரின் எண்ணம்... “அன்புபடுத்தி பக்திப்படுத்தி இருக்கும் நல்லுணர்வு கொண்டோரை எண்ணி...”
2.இந்த நல்லவர்களைப் போல் நமக்கும் அப்பாக்கிய வழி சென்றிடும் வழித் தொடர் இல்லாமல் இந்நிலையில் உள்ளோமே...! என்ற எண்ணத்திலேயே
3.அவர்களின் ஆத்மாவில் நற்சக்தி பெற்றோரை எண்ணத்தில் ஈர்த்த சக்தி கூடி வலுப்பெறுகின்றது... தீமையின் பிடியில் சிக்கியுள்ள அவ்வாத்மாக்களுக்குமே...!
 
இன்றைய நம் வாழ்க்கையில் நம் நினைவுடன் கலந்திடும் ஒவ்வொரு நொடிப் பொழுதும் அவற்றுக்குண்டான சக்தி நிலை நம்முள் சேமிக்கப்படுகின்றது.
 
இவற்றை உணர்ந்திடாமல்...
1.வாழ்ந்தோம்...! என்ற நிலை கொண்ட சாதாரண நிலையில் வாழ்ந்து
2.மனித ஆத்மா கொண்ட உடலைப் பெற்று வாழ்ந்திடும் இந்த நல்ல பாக்கியத்தைச் சிதற விடாதீர்கள்.