
நீசமாகும் உடலுக்கு நாம் கௌரவம் பார்க்க வேண்டியதில்லை
உதாரணமாக நாம் நமது நண்பர் ஒருவர்
வீட்டிற்குச் செல்வோம். அப்பொழுது அவர்
ஏதோ ஒரு சங்கடத்தில் இருந்திருப்பார். அவர் தன் சங்கட நிலையில்
நம்மை “வாங்க…!” என்று அழைக்காது விட்டு
விட்டால் போதும்.
நமது மனதில் “இவனுக்கு வந்த கௌரவத்தைப் பார்… வீடு தேடி வந்திருக்கிறேன்… கொஞ்சமாவது மதிக்கிறானா…?”
என்ற வெறுப்பு உணர்வுகளைச் சுவாசிக்க நேர்கின்றது. “நம்மை மதிக்கவில்லையே…” என்று எண்ணும் பொழுது,
வேதனை உணர்வுள் நம்மிடத்தில் வருகின்றது.
1.“வாங்க…”
என்று எந்த மனிதர் நம்மை அழைக்கவில்லையோ
2.அந்த மனிதருடைய
நல்ல குணங்களை நல்ல பண்புகளை நாம் அறிய முடியாதபடி
3.நம்முடைய வேதனையான
உணர்வுகள் மறைத்து விடுகின்றன.
நண்பராக இருந்து அன்புடன் பழகிய
அவரின் நல்ல உணர்வுகளை நாம் அறிய முடியாதவாறு நம்முடைய சிந்தனைத் திறனும் தெளிந்த மனமும்
குறைந்து கொண்டே வருகின்றது.
உங்கள் வாழ்க்கையில் எத்தகைய தீமைகள்
வந்தாலும் அத்தகைய தீமைகளை நீக்கிடும் அருள்
சக்தி பெற வேண்டும் என்பதற்குத்தான் யாம் அருள் ஞானத்தை உங்களுள் பதிவாக்குகின்றோம்.
நமக்குள் இருக்கக்கூடிய உயிரான ஈசன்
இந்த உடலை விட்டுப் போய்விட்டது என்றால்
இந்த நீசத்திற்கு வேலையே இல்லை. நாம் எத்தனை கௌரவம்… எத்தனை துணி… எத்தனை அலங்காரம்… எத்தனை சுகமான நிலை… எத்தனை பஞ்சு மெத்தை…? போட்டு வைத்திருந்தாலும் இந்த ஈசன் போய்விட்டால் குப்பையில் போட்டு எரித்துவிடுவார்கள்.
நடைமுறையில் நாம்
பார்க்கும் கௌரவம் எல்லாம்… இப்படியெல்லாம் இருந்தார்கள் என்று
பார்க்கிறோமோ…?
1.இழுத்துக் கொண்டு
கட்டையில் வைக்கும் போதும் மண்ணைக் கொட்டும் போதும் பார்த்துக் கொண்டேதான் இருக்கின்றோம்.
2.ஏன்டா இப்படிச்
செய்கின்றாய்…? என்று கேட்கின்றோமோ…!
3.ஒரு நாளைக்கு மேல்
வைத்திருந்தால் நாற்றம் அடிக்கும் என்று தூக்கிச் சென்று விடுகிறோம்.
இப்படி இருக்கப்படும் பொழுது இந்த
உடலிலே ஈசன் இருக்கும் போழுதே நீங்கள் இந்த கௌரவத்தைப் பார்ப்பதைக் காட்டிலும் அந்த
மெய் ஞானியின் உணர்வை எடுத்து அந்த நீசமான உணர்வு நமக்குள் வளராதபடி அந்த மெய் ஞானியின்
உணர்வை வளர்க்கச் செய்யுங்கள்.
இந்தக் கௌரவப் பிரச்சனை நமக்குள்
நிறையவே உண்டு. ஏனென்றால் நாம் அல்ல.
அரசனுக்கு… கௌரவத்தில் என்ன செய்கிறான்…? யார்… என்ன தப்புப் பண்ணினாலும் சரி…? உடனே போர் தான். நான் சொன்னேன் கேட்கவில்லை... உடனே போர் முறை.
இப்பொழுது நான் வலுவாக நிலையில்
இருக்கிறேன்.
1.நான் சொன்னதைக்
கேட்கவில்லை என்றால் உடனே எதிர்த்துவிடு.
2.என்னை எதிர்த்துப்
பழகி விட்டால் அதே உணர்வு என்ன சொன்னாலும் அங்கே கேட்க மாட்டார்கள்.
3.இந்த உணர்வினுடைய
வேலை எதிர் நிலைகளில் வேலை செய்து கொண்டே தான் இருக்கும்.
ஆக எந்தெந்த உணர்வுகள் நமக்குள்
முன்னனியிலே நிற்கிறதோ அது வேலை செய்து கொண்டே இருக்கும்.
இதை மாற்றுவதற்காகத் தான் உங்களுக்கு
இந்த ஆத்ம சுத்தி என்ற ஆயுதத்தைக் கொடுக்கின்றோம். இதை வைத்து வாழ்க்கையில் எப்பொழுது துன்பம் வருகிறதோ அப்பொழுது நிவர்த்தி செய்து
பழக வேண்டும்.
இன்று நாம் நமது மனித வாழ்க்கையில்
உடல் பற்று கொண்டு உடலை வளர்க்கச் செல்வத்தைத் தேடி அலைகின்றோம். அதே சமயம் தேடிச் சேர்த்த செல்வம் நாம் இறந்தபின்
நம்முடன் வருமா…? வருவதில்லை. நமது உடல்
கூட வருவதில்லை.
ஆனால் நாம் சேர்த்து வைத்திருக்கும்
செல்வத்தை எண்ணி அந்தச் செல்வத்தைத் தன் மகன் காப்பானா…? அடுத்தவர்கள் திருடிக் கொண்டு போய்விடுவார்களா…?
என்ற அச்சமும் வேதனையும் கொள்கின்றோம்.
தன் மகனைக் காக்க வேண்டுமென்றுதான்
எண்ணுகிறோம்.
1.அவனை எப்படிக் காக்கப்
போகிறேன்…? என்று அவனை நினைத்து வேதனையை நமக்குள் வளர்த்து விட்டால்
2.நமது உடலில் விஷ
அணுக்கள் பரவி நம்மை மனிதனாக உருவாக்கிய நல்ல அணுக்களைக் கொன்று விடுகின்றது…
3.கடும் நோயினை நமக்குள்
உருவாக்கிவிடுகின்றது.
நோயானபின் உடல் நலிந்து மனித உடலை
உருவாக்கிய உணர்வுகள் அனைத்தும் அழிந்து விஷம் கொண்ட உணர்வுகள் உடலில் பெருகிய நிலையில்
உடலை விட்டு உயிரான்மா வெளியில் வருகின்றது.
எந்த மகன் மீது பற்று வைத்தோமோ அவனுடைய
உடலுக்குள் புகுந்து விடுகின்றது.
குடும்பத்தில் பத்துப் பேர் இருந்தாலும்
1.பத்துப்
பேரில் யார் மீது அதிகப் பாச உணர்வைச் செலுத்தினோமோ
2.இந்த உயிரான்மா
இதன் தொடர் கொண்டு பற்று கொண்ட உடலுக்குள் தான் செல்கின்றது.
இது போன்றே பிறருக்கு உதவி செய்யும்
மனப்பான்மை கொண்ட நீங்கள்… நான் அவனுக்கு உதவி
செய்தேன். ஆனால் அவன் என்னை மதிக்கவில்லை. உதவி வேண்டும் போது மட்டும் என்னை அணுகினான் அவனுக்கு வசதி சேர்ந்தபின் என்னைத்
திரும்பிக் கூடப் பார்க்கவில்லை என்று வேதனைப்படுகின்றோம்.
வேதனைப்படும் உணர்வுகளை நீங்கள்
எண்ணினால் வேதனையின் உணர்வுகள் வளர்ந்து எந்த மனிதனை எண்ணி வேதனையின் உணர்வுகளை வளர்த்தார்களோ
அதனின் உணர்வுகள் உங்கள் உடலில் பெருகி இந்த உடலை விட்டுப் பிரிந்து சென்றபின் எந்த
உணர்வின் தன்மையைத் தன்னுள் வளர்த்தீர்களோ உயிராத்மா அவரின் உடலுக்குள் சென்றுவிடும்.
1.அங்கே சென்று தன்னுள்
வளர்த்த வேதனையை அவரிடத்திலும் உருவாக்கி
2.வேதனையின் உணர்வுகளை
அதிகமாக வளர்த்த நிலையில் தான் புகுந்த உடலையும் வீழ்த்திவிட்டு வெளி வந்தபின்
3.உயிரான்மா…
பாம்பாகவோ தேளாகவோ தான் அடுத்த உடலைப் பெறும்.
ஆகவே நல்ல நினைவு இருக்கும் போதே
உயிரை மதித்து மகரிஷிகளின் அருள் சக்திகளை உயிரான்மாவுக்குச் சேர்க்கும் அழியாச் சொத்தாக
ஆக்க வேண்டும்.